தமிழில் புதுக்கவிதையானது தவிர்க்க
முடியாத இடத்தைப் பெற்ற காலமாக நாம் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியை
குறிப்பிடலாம். சி.சு.செல்லப்பா நடத்திய இதழான ‘எழுத்து’ அத்தகைய இடத்தை
ஏற்படுத்திக் கொடுத்தது. அவ்விதழில் புதுக்கவிதைகளை அக்கால இளைஞர்கள் பலர்
ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல் தாங்களும் அவைகளை முயன்று பார்த்தனர்.
அவ்வகையில் புதுக்கவிதையின் மரபிற்கு பல குறிப்பிடத்தக்க கவிஞர்கள்
தோன்றினர் என்பதில் மிகையல்ல.
புதுக்கவிதையானது இனி யாராலும் தடுத்து
நிறுத்த முடியாது. அதன் வளர்ச்சி 1950-60 களிலேயே உச்சத்தை தொட்டுவிட்டது
என்று நாம் முன்னோடிகளின் பதிவுகளிலிருந்து தகவல்களை பெறுகிறோம். எனினும்
சோதனை என்பது பிற்காலத்தில் மட்டுப்பட்டே காணப்பட்டது என்பதை ஆய்வுகளின்
தரவுகள் கூறுவதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அத்தகைய சூழ்நிலையில்
தமிழுக்கு புதுக்கவிதையாளராக அறிமுகம் ஆனவர் சுந்தர ராமசாமி.
சுந்தர ராமசாமியின் கவிதைக் கூறு:
1970-80களில் தமிழ் கவிதையில் தொய்வு நிலை
ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கவிதையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த
பெருமைக்குரியவர் என்ற வகையில் சுந்தர ராமசாமியின் கவிதைகள் முக்கிய
இடத்தைப் பிடிக்கின்றன. அவைகளின் கூறுபாடுகள் பிற்காலத்தில் கவிதை எழுத
வந்தவர்களுக்கு புதிய உத்வேகத்தையும் தெம்பையும் அளித்தது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment