Monday 12 March 2018

மகளிர்தினக் கொண்டாட்டங்கள், மகளிரின் சிறப்பை உணர்த்துகின்றனவா …!


Siragu penniyam1

கடந்த சில ஆண்டுகளாகவே, நம் நாட்டில், நம் சமூகத்தில், பெண்கள் பாதுகாப்பின்றி வாழ்கிறார்கள் என்று தான் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பாலியல் ரீதியாக பல வன்கொடுமைகளை, வன்புணர்வுகளை நம் சமூகப் பெண்கள் சந்தித்தவண்ணம் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. மேலைநாடுகளில் மகளிர்தினம் என்ற ஒன்றை கொண்டாடுகிறார்கள் என்றால், அவர்கள் அவர்களுக்கான முழு உரிமைகளை, போராடி பெற்றெடுத்திருக்கிறார்கள். நாம் இன்னமும் அந்தளவிற்கு உரிமைகளை பெற்று இருக்கிறோமா என்ற கேள்விக்கு, பதில் இல்லை என்பது தானே உண்மை.!

ஆண்டுதோறும் மார்ச் 8 -ந் தேதி உலக மகளிர்தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் நம் நாட்டிலோ, பெண்களுக்கெதிரான வன்முறைகள், கொடுமைகள் குறைந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிகரித்திருக்கிறது என்பதுதான் வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை. இங்கு கொண்டாடப்படும் கொண்டாட்டங்கள் அனைத்தும், நாம் பெறவேண்டிய உரிமைகளை சொல்வதில்லை. இந்த சமூகத்தில் நமக்கான இடத்தை எப்படி பெற வேண்டும், அதனை எப்படி இன்னும் பல வழிகளில் முன்னேற்றப்பட வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதில்லை என்பது தான் காரணமாக இருக்கிறது. இந்த செய்திகள் ஆண்பிள்ளைகளுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் சரியாக சென்றடைவதில்லை. 

இந்த ஆண்டு, மகளிர்தினத்தின் முதல்நாள், திருச்சி, துவாக்குடி ஊரை சேர்ந்த உஷா என்ற கர்ப்பிணிப் பெண் காவல்துறை ஆய்வாளர் ஒருவராலேயே, எட்டி உதைக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்பது சகித்துக்கொள்ளக்கூடிய ஒன்றா? இந்த நிகழ்வு நூறு விழுக்காடு ஆண்கள் சம்பந்தப்பட்ட ஒன்று. அதிலும், ஆய்வாளர் தவறு தான் மிக முக்கிய குற்றமாக இருக்கிறது. ஆனால், உயிரிழந்தது ஒரு பெண். அடுத்து பார்த்தீர்களென்றால், மகளிர்தினத்தின் மறுநாள், 19 வயதே நிரம்பிய இளந்தளிர் அஸ்வினி என்ற கல்லூரி மாணவி, காதலன் என்று சொல்லப்படும் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு இறந்திருக்கிறார். தன்னை காதலிக்கவில்லையென்றால், ஆசிட் ஊற்றுவது, கத்தியால் குத்தி கொல்வது, எரித்து கொல்வது என்ற வன்முறைகள் எல்லாம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் தான் நம் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், ஆண்களின் உடைமைகளாக பார்க்கப்படுகின்றனர் என்பது தான்.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment