யுனிசெஃப் (United Nations Children’s
Fund or UNICEF) அல்லது “ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்” எனப்படும்
பன்னாட்டுச் சிறுவர்களின் நலவாழ்வில் அக்கறை கொண்ட அமைப்பானது,
இணையவெளியில் ஒவ்வொரு நாளும் 175,000 சிறுவர்கள் பயனர்களாக நுழைகிறார்கள்,
அவர்களுக்குப் பாதுகாப்பான நடவடிக்கையில் மக்கள் செயல்பட வேண்டும் என்னும்
நோக்கில் “பகிரும் முன் சிந்தியுங்கள்” (Think before you send –
https://youtu.be/ObHyjhS4BZw) என்ற ஒரு காணொளி தயாரித்துச் சரியாக மூன்று
மாதங்களுக்கு முன்னர் (டிசம்பர் 11, 2017 அன்று) யூடியூப் வழியாக
வெளியிட்டது. இது நாள் வரை அதைப் பார்த்தோரின் எண்ணிக்கை சுமார் 3,000
சொச்சம். அதாவது மாதமொன்றுக்குச் சராசரியாக 1,000 பார்வையாளர்கள் என்ற
நிலையில் அது பரவியுள்ளது என்று தெரிகிறது.
“காலா” என்ற ரஜினிகாந்த் நடித்து
வரவிருக்கும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான விளம்பரக் காணொளி 10
நாட்களுக்குள் 2 கோடி (20 million) தமிழர்களால் மட்டுமே
பார்க்கப்பட்டுவிட்ட சாதனையின் அருகே, உலக அளவு பார்வையாளர்களை சென்றடைய
விரும்பும் யுனிசெஃப் காணொளியின் சாதனை கிட்டே கூட நிற்கத் தகுதியில்லை.
அந்த அளவு இணையத்தைப் பயன்படுத்துவோர் பொறுப்புணர்வு கொண்டவராக உள்ளனர்.
உலகில் இதுநாள் வரை வாழ்ந்துவரும் மக்களில் இருந்து முற்றிலும்
வேறுபட்டவராக இக்கால இளையதலைமுறையினர் உள்ளனர். அவர்களுக்கு இணையம் பல
அறிவார்ந்த செய்திகளைத் தருவதுடன் ஆபத்தான வாழ்க்கையையும் அவர்கள் அறியாமலே
எதிர்நோக்க வைக்கிறது என்ற அக்கறையில் தயாரிக்கப்பட்ட யுனிசெஃப் காணொளி,
ஒரு செய்தியைப் பகிரும்முன் அதன் விளைவைச் சிந்திக்கச் சொல்கிறது. ஒருவரைப்
பற்றி உண்மையா பொய்யா எனத் தெரியாத தகவலை அதே நொடிப்பொழுதில்
முடிவெடுத்துப் பரப்பிவிட்டால் பாதிக்கப்படுபவர் உயிரையும் இழக்க நேரும்
என்று காட்ட முற்படுகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment