பிரார்த்தனை வலிமை வாய்ந்தது. பிரார்த்தனை
கடவுள் சார்ந்த விசயம் என்று கருதுபவர்கள் ஒரு புறம் இருக்க, பிரார்த்தனை
என்பது நம்பிக்கை சார்ந்த விசயம் என்பது உறுதி. ஒருவரின் மீது நம்பிக்கை
வைக்கிறோம். நாளை இதனை இவர் செய்து தருவார் என்று நம்பிக்கை வைக்கிறோம்.
நாளை அந்த நேரம் வரும் வரை இந்த நம்பிக்கை மட்டுமே நம்மிடம் உள்ளது. செயல்
செய்து முடித்தபின்புதான் நம்பிக்கை செயல் வடிவம் பெற்று வெற்றி பெறுகிறது.
உலக வாழ்வில் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையை ஏற்படுத்தி ஆன்மபலத்தைத் தருவது பிரார்த்தனை. கடவுளின் மீது அசையாத நம்பிக்கையை ஏற்படுத்துவது பிரார்த்தனை.
உலக வாழ்வில் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையை ஏற்படுத்தி ஆன்மபலத்தைத் தருவது பிரார்த்தனை. கடவுளின் மீது அசையாத நம்பிக்கையை ஏற்படுத்துவது பிரார்த்தனை.
காந்தியடிகளின் மொழிகளில் சொன்னால்
‘‘பிரார்த்தனை வாக்கு வன்மையைக் காட்டுவதற்கு உரியதன்று. உதட்டிலிருந்து
எழும் வணக்கமும் அல்ல அது. இருதயத்திலிருந்து எழுவதே பிராத்தனை. ஆகையால்
அன்பு ஒன்றைத் தவிர வேறு எதுவுமே அங்கே இல்லாதவாறு உள்ளத்தூய்மையை நாம்
அடைந்து விடுவோமாயின் எல்லாத் தந்திகளையும் தக்க சுருதியில் கூட்டி,
வைத்துவிடுவோமாயின் தானே இனிய கீதும் எழுந்து இளைவன் அருளைக்
கூட்டுவிக்கும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment