மலர்கள் என்றாலே மங்கையர் சூடுவதும், மணம்
தருவதும் மட்டுமல்ல. அதில் பல்வேறு குணங்கள், தன்மைகள் பொதிந்துள்ளன என்று
சங்க இலக்கியங்களில் தங்கள் பாடல் வரிகளில் பதிவு செய்துள்ளனர் பண்டைத்
தமிழ் புலவர்கள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த அவர்கள் தங்கள காலத்தில்
நிலவிய காலச்சூழல்களையும் இயற்கை தன்மையையும் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வகையில் சங்க இலக்கியங்களில் குறிப்பாக நற்றிணையில் காணலாகும் மலர்கள்
குறித்து இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
மலர்கள் என்பது செடி, மரம், கொடி ஆகிய
தாவர வகையின் உறுப்பாகும். ஒவ்வொரு தாவரத்திலும் பல்வேறு வண்ணங்களில்
காணப்படும். மலருக்கு ஏழுவகை பருவங்கள் உண்டு. அரும்பு, மொட்டு, முகை,
மலர், அலர், வீ, செம்மல் ஆகும். மலர்கள் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு.
மலர்கள் மனித வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
சுப நிகழ்வு முதல் துக்க நிகழ்வு வரை முதல் இடம் பெறுவது மலர்கள்.
தமிழர்களின் சிறப்பாக ஒழுக்கத்தை கூறுவர்.
அவ்வொழுக்கம் அகவொழுக்கம், புறவொழுக்கம் என இரண்டாகப்
பாகுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விரு ஒழுக்கங்களின் இன்றியமையா கூறாக மலர்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைவன் தலைவி இருவரிடை முகிழ்க்கும்
உறவையும் மேற்கொள்ளும் இல்வாழ்க்கையையும் பிறர்க்கு அறிவிக்கவொண்ணாப்
பேரின்பத்தை அகம் என்பர். அந்த அகத்திணையை அன்பின் ஐந்திணையாக குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல் என்ற திணைகளின் பெயர்களிலே பூக்களும் உள்ளன.
அதனால்தான் சங்க கால புலவர்கள் கருப்பொருள்களில் ஒன்றாக மலரையும்
சேர்த்துள்ளனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment