பெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறிக்
கொண்டு வருகின்றனர். இந்தியா போன்ற மிக பிற்போக்கு கொண்ட ஒரு நாட்டில்
பெண்களின் முன்னேற்றம் என்பது பல போராட்டங்களை முன்னெடுத்தே இங்கு
சாத்தியப்பட்டது. ஆனால் அண்மைக்காலங்களில் மீண்டும் பெண்கள் வீடுகளுக்குள்
முடங்கிவிட வேண்டும் என்று மத பாசிச சக்திகள் செயல்படுவது மிகப் பெரிய
அச்சமாக உருவாகி உள்ளது. மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்கள் ஒரு
சமுகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பது மிகத் தேவை. ஆனால் அந்த மனித
பங்களிப்பை மதப்பண்பாடு மொழிப்பண்பாடு என சிதைப்பது பெண்கள் இன்று
அடைந்திருக்கும் முன்னேற்றத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும்.
சமூக வலை தளங்களில் இயங்கும் பெண்களுக்கு
தரப்படும் அச்சுறுத்தல்கள், அவர்கள் பெரியாரியல் கருத்துகளைப் பேசும் போது
அந்தப் பெண்களை பாலியல் ரீதியாக வசை பாடுவது, பெண்களின் அங்கங்களை அவர்கள்
அறியாது படம் எடுத்து மிரட்டுவது போன்ற கொடுஞ் செயல்களில் ஈடுபடுவது,
டிக்டாக்கில் பேசும் பெண்கள் மீது மணவிலக்கு நடவடிக்கைகள் என்று பெண்களை
அனைத்து மதங்களும் பாகுபாடில்லாமல் அழுத்துகின்றன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment