ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு,
தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும் செய்தி நாம்
எல்லோரும் அறிந்ததே. இதற்கு மக்களின் போராட்டங்கள் வலுக்கும் இந்நிலையிலும்
கூட, அதற்கான பணியை தொடங்கி விட்டன அந்நிறுவனங்கள். விழுப்புரம் தொடங்கி
நாகை மாவட்டம் வரை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான கிணறுகளை வெட்டும் பணி,
மத்திய அரசின் அனுமதியோடு மிக துரிதமாக நடைபெற ஆயுத்தமாகி வருகின்றன. நாடு
முழுவதும் 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. டெல்டா
மாவட்டங்களில், மட்டும் 274 இடங்களில் கிணறுகள் தோண்டுவதற்கு மத்திய அரசு
அனுமதி வழங்கியிருக்கிறது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை, 1794
சதுரகிலோ மிட்டர் தூரம் வரை தோண்டுவதற்கான பணி தொடங்கப்படவுள்ளன.
இதன்படி, நாகை மாவட்டத்தின், மயிலாடுதுறை
செம்பனார் கோவில் மற்றும் வேதாரண்யம் கரியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில்
ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான முயற்சிகளில்
மும்முரமாக இறங்கியிருக்கிறது. அப்பகுதிகளில் விவசாயிகள், பொதுமக்கள்
அனைவரும் தங்கள் போராட்டங்களை நடந்த துவங்கியுள்ளனர். மக்களின் இந்த கடும்
எதிர்ப்பை மீறியும் அந்நிறுவனம் தங்களுடைய பணியை தொடர்வதற்கான பொக்லைன்
இயந்திரங்களை விவசாய நிலங்களில் கொண்டுவந்து இறக்கியுள்ளனர்.
இப்படி ஏன் மக்கள் எதிர்ப்பை மீறியும்
மத்திய அரசு இந்த கொடூர செயலில் ஈடுபடுகிறது, இதனால் என்ன லாபம் என்பதை
இக்கட்டுரையின் வாயிலாக சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment