Friday 24 May 2019

சங்க இலக்கியத்தில் வானிலையியல்

siragu vaanilai1
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பைப் பார்த்ததுமே நினைவுக்கு வருவது ஔவையின் வாக்குதான். இலக்கியத்தில் அறிவியல் குறித்துப் பேச அல்லது எழுதத் தொடங்கும் எந்தவொரு ஆராய்ச்சியாளருக்கும் முதலில் தோன்றுவது திருவள்ளுவமாலையில் ஔவையார் எழுதியுள்ள “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்ற பாடலே. இந்தப் பாடல் ஔவையாரோடு வள்ளுவரையும் நினைவிற்கு கொண்டு வந்து விடும். ஔவையின் வாக்கு குறித்து அதிக விளக்கம் கூறத் தேவையில்லை.மிகச்சிறிய அலகாகக் கருதப்படும் அணுவையே துளைத்தல் குறித்த சிந்தனை இலக்கியத்தில் எப்படி வந்தது என்பது மிகப்பெரிய வியப்புதான். தொடர்ச்சியாக நினைவில் வருவது, வள்ளுவரின் பெயராகும்.உலக வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது நீர் எனக் கூறிடின் அதில் மிகையில்லை. ஆங்கிலத்தில் Water – the elixir of life “ என்று சொல்வார்கள். இதையே வள்ளுவர் –
”நீரின்றமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன் றமையாது ஒழுகு.”
siragu vaanilai

என்கிறார். எவ்வகையில் உயர்ந்தவராக இருந்தாலும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. அதுபோலவே மழை பெய்யவில்லை என்றால் வாழ்க்கையின் ஆதாரமான நீரும் இல்லை. இது ஒரு சுழற்சிச் சக்கரம் போன்றது. இரண்டு வரிகளுக்குள் அடங்கும் இந்த அரிய கருத்துக்கு நிகரான ஆங்கில Water is the elixir of life என்ற கருத்து நிச்சயமாக வள்ளுவருக்கு முன்னால் தோன்றியிருக்க முடியாது. ஆனால் தமிழில் இந்தக் கருத்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பதியப்பட்டிருக்கிறது என்றால், பெருமைப்படுவது ஒருபுறம் இருக்க, அறிவியல் நோக்குப் பார்வையில் வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. வள்ளுவருக்கு முன்னர் குடபுலவியனார் என்ற புலவர் புறநானூற்றில் இக்கருத்தை மிக அழகாக சொல்லுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2/

No comments:

Post a Comment