தமிழர் தொல்காப்பிய காலந்தொட்டே
போர்க்கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும்
பழக்கமுடையவராக இருந்துள்ளனர், மேலும் தமிழர்களின் எயில்போர் மிகச் சிறப்பு
வாய்ந்த்தாக இருந்துள்ளது, எயிலிடத்து பல கருவிகளை அவர்கள் பரப்பிப் போர்
செய்துள்ளனர், தமிழர் பயன்படுத்திய மரபுசார் போர்க்கருவிகளை இரண்டு வகைகளாக
பகுத்துக் கொள்ள இயலும், அவை 1, இயல்புப் போரில் பயன்படுத்தப் பெறும்
வாள், வேல், வில் ஆகிய முப்போர்க்கருவிகள் 2, எயிற்போர்க்கருவிகள்
என்பனவாகும், இவற்றுள் இயல்புப்போர் (அதாவது ஒருவகையில் தும்பைத் திணைப்
போர்) என்பது மட்டும் இங்கு எடுத்துக் கொள்ள ப் பெற்று விளக்கப்படுகிறது,
மன்னர்களும் அவர்களின் போர்க்கருவிகளும்:
மன்னன் வழித்தே மலர்தலை உலகம் என்ற அற்றை
மொழிக்கு ஏற்ப மன்னர்தம் வழித்ததாக அற்றைத் தமிழக மக்கள் செயல்பட்டனர்,
அவர்களின் பாதுகாப்பு கருதி மன்னர்கள் போர்ப்படைகளை வைத்திருந்தனர்,
நால்வகைப்படைகள் – மன்னர்களால் அமைக்கப் பெற்றிருந்தன, இம்மன்னர்கள் பொன்,
பொருள், நிலம், பாதுகாப்பு முதலானவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் போர்
தொடங்குகையில் ஊர்க்கு, வீட்டிற்கு இத்தனைபேர் என்ற நிலையில் ஆண்கள் போரில்
கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment