Tuesday 28 May 2019

ராகுல சாங்கிருத்தியாயன் பார்வையில் ‘ஆரியர் வருகை’

siragu volka-to-ganges cover
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற தலைப்பில், ராகுல சாங்கிருத்யாயனால் இந்தியில் ‘வால்கா சே கங்கா’ என்று எழுதப்பட்ட இந்த நூல் மானுடவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியம் என்ற தகுதி பெற்றது. இந்த வரலாற்றுப் புனைவில் 20 கதைகளில் மனித சமுதாயத்தின் வளர்ச்சி தொகுக்கப்படுகிறது. இந்நூல் 1943 இல் வெளியிடப்பட்டு பின்னர் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ராகுல சாங்கிருத்தியாயன் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து எழுதியதற்காக மூன்றாண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சிறையில் உருவான நூல் இது. இந்நூலை எழுதியதற்காக சமயப் பழமைவாதிகளால் வசை பாடப்பட்டார். இருப்பினும் மறு ஆண்டே அடுத்த பதிப்பு வெளிவரும் அளவிற்கு நூல் விற்பனையானது. தமிழில் கண. முத்தையா மொழிபெயர்ப்பில் இந்நூல் முன்னரே 1949ல் வெளிவந்து முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புடையது. நூலின் மொழிபெயர்ப்பும் கண. முத்தையா வால் சிறையில்தான் எழுதப்பட்டது. கால்நூற்றாண்டிற்கும் மேல் இந்திப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் என். ஸ்ரீதரன் சமீபத்தில் இந்தியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். அது 2016 இல் கவிதா பப்ளிகேசஷன்ஸ் வெளியீட்டில் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. என். ஸ்ரீதரன் பல குறிப்புகளையும் தேடிக்கொடுத்து வாசிப்பை விரிவாக்க உதவியுள்ளார்.

ராகுல சாங்கிருத்தியாயன், கேதார்நாத் பாண்டே என்ற பெயருடன் உத்தரப்பிரதேச குக்கிராமம் ஒன்றில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். துவக்கப்பள்ளி வரை மட்டுமே முறையான கல்வி கற்றாலும் தானே கற்று 30க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞராகவும், பலதுறை வல்லுநராகவும் 70 வயதுவரை வாழ்ந்து 1963 இல் மறைந்தவர். இவர் ‘மகா பண்டிட்’ என்ற பட்டமும் பெற்றவர்.  தமிழகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் தமிழும் அறிந்து கொண்டார். ராகுல சாங்கிருத்தியாயன் இந்துவாகப் பிறந்து இந்து சமயத் தத்துவங்களை அறிந்தவர். ஆரிய சமாஜத்தின் சுவாமி தயானந்த சரஸ்வதியின் மேல் பற்று கொண்டவர். இலங்கையில் புத்த மதத்தைத் தழுவி புத்த பிக்குவாகவும் தீட்சை பெற்று ராகுல சாங்கிருத்தியாயன் என்று மாறியவர். பெளத்த தத்துவங்களிலும் பாலி மொழியிலும் வல்லுநர். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment