\நவீன
அறிவியல் யுகத்தில் இன்று பரவலாகப் பேசப்பெறும் ஒரு துறை சூழலியலாகும்.
“சுற்றுச்சூழல் (Environment) என்னும் சொல்லுக்கு நேரடிப்பொருள்
சுற்றுப்புறம் (Surroundings). 1960க்கு முன் வரை, இச்சொல்லானது, வெப்பம்,
ஒளி, போன்ற இயற்பியல் காரணிகள் உள்ளிட்ட உயிரிகளின் சூழலைக் குறித்தது.
பின்னரோ, அபரிமிதமான வளர்ச்சிப்போக்கில் விரிந்த தொழில்பெருக்கம், வேளாண்மை
விரிவு, சூழல்மாசுகள், மக்கட்பெருக்கம் இவை தொடர்பான பிரச்சினைகளால்
அச்சொல் மறுபரிசீலனைக்கு உள்ளானது.”
இத்தகு கருத்தாக்கங்கள் எழுவதற்கு முன்பே
தோன்றிய பழந்தமிழ் இலக்கியங்களில், சூழலியல் சிந்தனைகள் குறித்துத் தேடுவது
அவ்வளவு பொருத்தமற்றதுபோலத் தோன்றினாலும், இன்றைய சூழலியல்
கருத்தாக்கத்திற்கான வேர்களையும் விழுமியங்களையும் அவை கொண்டிருக்கின்றன
என்பதை மறுக்க இயலாது.
நிலப்பாகுபாடும் திணைக்கோட்பாடும்
வரையறுத்தளித்த வாழ்வியற் சிந்தனைகள் தமிழிலக்கணத்தின் பொருள் இலக்கணமாகத்
துலங்குவது குறிப்பிடத்தக்கது என்றே கொள்ளலாம்.
வளமிகு வாழ்விற்குப் புறப்பொருள்
தேடுதலின் காரணமாகக் தொலைத்த அகப் பொருளின் ஆழத்தையும் பொருளையும் தெளிவுற
விளக்கி, அறத்தின்வழியே பொருளுணர்த்தி இன்பம் நல்க விழைந்த தமிழ் இலக்கிய,
இலக்கண நோக்குகள் என்றும் போற்றத்தக்கவை. அவை சூழலியற் கருத்துக்களின்
அடிப்படைக் கூறுகளைக் கொண்டு திகழ்வதைக் கண்கூடாகக் காணலாம். அந்த
அடிப்படையில் குறுந்தொகையும் சூழலியலும் என்கிற பொருண்மையில் சில
கருத்துக்களை, இக்கட்டுரையில் காணலாம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment