Wednesday 31 July 2019

மத்திய பா.ச.க அரசு, சமூகநீதிக்கு முற்றிலும் எதிரான அரசு


Siragu ida odhukkeedu2
பா.ச.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சமூக அநீதி படு வேகமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவான உண்மை. அதில் எல்லாவற்றையும் விட அதி பயங்கரமானதாக இருக்கிறது. கடந்த ஆட்சியில் பா.ச.க அரசினால் சட்டமாக்கப்பட்ட இந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்கான 10% இடஒதுக்கீடு. நாம் துவக்கத்திலிருந்தே, கூறி வருகிறோம். இட ஒதுக்கீடு என்பது ஒரு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல, அது ஈராயிரம் ஆண்டுகளாக சமூக ரீதியாக, கல்வி ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்டு, மிகவும் மோசமாக, இழிநிலையில் ஒடுக்கிவைக்கப்பட்டிருந்த, இந்த மண்ணின் மக்களாகிய நம்முடைய வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தில் எல்லோரும் சமநிலை எய்திடவேண்டும் என்ற காரணத்தாலும், சுதந்திர இந்தியாவில், டாக்டர் அண்ணல் அம்பேத்கார் மற்றும் அப்போதைய பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில், பொருளாதார ரீதியாக என்று எதிராக உள்நுழைக்கக் கூடாது என குறிப்பிட்டு வருகிறோம். ஆனால், மத்திய பா.ச.க அரசு இந்த பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு என்ற சட்டத்தை கொண்டுவந்து சமூகநீதியை குழிதோண்டி புதைக்க எத்தனிக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 26 July 2019

பறவைகள்


siragu paravaigal2
குயில் ஓசை, மயில்தோகை , தூக்கணாங்குருவிக்கூடு, முதலானவை வியப்பானவை. கிளி, புறா,அன்னம், அன்றில் போன்றவை மக்களுக்கு மகிழ்ச்சித் தருகின்றன. காக்கை, குருவி, வீட்டுக்கோழி முதலியன சுற்றுப்புறக் கழிவுகளை உட்கொள்கின்றன. பறவையின் எச்சங்களால் நிறைய வனங்கள் உருவாகியுள்ளன. தாவரங்களிலுள்ள பூச்சி, புழுக்களையும் வயல்வெளிகளையும் பாழாக்கும் எலி, சுண்டெலி போன்றவற்றையும் பறவைகள் கட்டுப்படுத்துகின்றன. மேலும் மனிதர்கள் புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்குப் பயப்படுவது போல், கழுகு, பருந்து வல்லூறு, கிளி போன்ற பறவைகளுக்குப் பயப்படுவதில்லை பறவையியல் பேரறிஞர் சலீம் அலி ‘மனிதர்களின்று பறவைகளால் வாழமுடியும், ஆனால் பறவைகளின்றி மனிதர்களால் வாழ முடியாது என்று குறிப்பிடுவார். இத்தகு சிறப்பு வாய்ந்த பறவைகள் சங்க காலத்தில் மக்களால் எவ்வாறு அறியப்பட்டிருந்தன என்பதை அறிலாம்.
தொல்காப்பியம்

உயிர்கள் பகுப்பைத் தொல்காப்பியம்
‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனளே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே’
(மரபியல்-நூற்பா-27)
என்று கூறுகிறது. இவ்உயிர் பகுப்பில்
மாவும் புள்ளும் ஐயறி விளவே
பிறவும் உளவெ அக்கினைப்பிறப்பே
என்று கூறுகிறது. எனவே ஐந்தறிவு உயிராக பறவையினம் பாகுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 24 July 2019

வெளிநாட்டு உறவு


siragu-velinaattu-uravu
ஆழிசூழ் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் கடல் கடந்த செயல்பாடுகள் பண்ட மாற்றுகள், வர்த்தகங்கள் அந்தந்த நாடுகளுக்கிடையேயான, உறவுகளை மேம்படுத்தியிருக்கின்றன. சங்க காலத்தில், தமிழகம், ஏனைய நாடுகளோடு, எவ்வாறெல்லாம், ஒட்டி ஒழுக பரந்த அளவில் முயன்றிருக்கிறது, செயல்பட்டிருக்கிறது என்பதை இன்றைய நாகரிக உலகில், அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு அறியமுடிகிறது.

மேற்கத்திய நாடுகளான, கிரிஸ், இரோம், எகிப்து தொடங்கி கிழக்கில் சீனா வரை மட்டுமல்லாமல் பாலஸ்தீனம் மெசப்பெட்டோமியா பரிலோனியா, ஆகிய நாடுகளுடன் வணிகத்தொடர்பு இருந்திருக்கும் தமிழகத்திற்கும் பாபிலோனியாவிற்குமிடையே மிக விரிவான நாகரிகம் பரவியிருந்தமைக்கும் ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. இத்தகைய பெருமைமிகு வணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்பினை, கடல்வழியாக தங்கள் பயணத்தை நம் தமிழ்ச்சமூகம், கடலில் ஆமை வலசைப் பாதையை பயன்படுத்தியே விரைவாக பயணப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இலக்கியங்களில் கல்வி


siragu-kalviyiyal1
செம்மொழி இலக்கியங்களில் கல்வி பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன. சங்க காலத்தில் கற்றறிந்த புலவர்கள் அவையாகத் தமிழ்ச்சங்கங்கள் அமைந்திருந்தன. பெண்பாற் புலவர்கள் முப்பதுக்கும் மேலாக இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இவ்வகையில் கல்வி நிலையில் சிறப்புற்ற சமுதாயமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழினம் இருந்துள்ளது. சங்ககால கல்வி நிலையை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியத்தில் கல்வி

பண்டைய இலக்கணமான தொல்காப்பியத்தில் கல்வி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
“ஒதல் பகையே தூதிவை பிரிவே” அகத்திணையியல்-27
“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” அகத்திணையியல் 28
ஆகிய நூற்பாக்கள் கல்வி சார்ந்த செய்திகளை அளிக்கும் நூற்பாக்கள் ஆகும்.
தொல்காப்பிய காலத்தில் பிறநாட்டுக்குக் கல்வி கற்கச் செல்வது வழக்காக இருந்தது. கல்வித்தரத்தில் உயர்ந்தோரை மன்னன் மதிப்பான் என்ற நிலைய இருந்தது. கல்வியில் உயர்ந்தோர் சான்றோர் எனப்பட்டனர். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 16 July 2019

தொகுப்பு கவிதை (நெய்தலெனும்… !, மாலுமியுமாக நானேயிருக்கிறேன்)

நெய்தலெனும்… !

-கனிமொழி

 

siragu neithal1
நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்
தண்காற்று வீசிடும் நீலக்கடல்
பாறையில் தாளமிடும் அலைகள்
மணலில் கோலமிடும் நண்டுகள்
சிரிப்பொலி மழலையின் துள்ளல்கள்
முகமறைத்து முத்தொலியில் காதலர்கள்
கனப்பொழுதில் முகமதில் உப்புக்கரிப்பு
கடற்மேற் பறந்திடும் நீர்ப்பறவைகள்
கால்தனை முத்தமிடும் வெண்சங்குகள்
ஈரமணலின் இதமான மென்மை
வானம் வியந்துக்காணும் கண்கள்
தளிர்மேனி தழுவும் தென்றல்
ஆழ்கடலில் துள்ளிக்குதிக்கும் மீன்கள்

ஒய்யாரமாய் ஓய்வெடுக்கும் ஓடங்கள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 14 July 2019

நிலவியல் அடிப்படையில் பறம்புமலை


siragu parambu malai1
தமிழ் மொழி மட்டுமன்று. வரலாற்றுக் கண்ணாடியும் கூட. காலத்தைத் தன் மடியில் இருத்தி அவை வடித்துத் தந்த இலக்கியங்கள் இன்னும் பழமை பேசுகின்றன. மனித குலத்திற்கு மட்டுமின்றி, உயிர்க்குலத்துக்கும் உலகியலுக்கும் கூடத் தமிழ் தெளிந்த வரலாறு கூறுகிறது. நிலமும் பொழுதுமாகப் பகுபடும் அதன் வகைமைகளில் உயிர்ப் பொருள்களோடு இயைந்த உயிரல் பொருள்களும் இடம் பெற்றுள்ளன. அவை இன்றும் காலத்தின் சாட்சியங்களாக விளங்குகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பாரியாண்ட பறம்புமலை ஆகும். நிலவியல் அடிப்படையில் அதன் அமைவிடம் குறித்து இக்கட்டுரை அமைகிறது.
நிலவியல் ஒரு சிறு விளக்கம்

ஒரு குறிப்பிட்ட ஒன்றின் கூட்டமைவு, கட்டமைப்பு, இயற்பியல் இயல்புகள்வரலாறு, மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் என்பவை தொடர்பான அறிவியலும், அவை பற்றிய ஆய்வும் நிலவியல் எனப்படும். இது புவி அறிவியலில் ஒரு பிரிவாகும். நிலவியல் அறிவானது,  புவியியல், நிலநெய், நிலக்கரி மற்றும், இரும்புசெம்புஉரேனியம் போன்ற உலோகங்கள் ஆகிய இயற்கை வளங்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண உதவுகின்றது. மேலும், விலையுயர்ந்த இரத்தினக் கற்கள் மற்றும் கல்நார்மைக்கா, பொஸ்பேற்றுகள், களிமண்படிகக்கல், சிலிக்கா போன்ற கனிமப் பொருட்களைப் பூமியிலிருந்து பெற்றுப் பயனடைவதற்கும் நிலவியல் உதவுகின்றது. பழங்கால வரலாறுகள் கிடைக்கவும் இவை வழிவகை செய்கின்றன. இது இயற்பியலின் ஒரு பிரிவு ஆகும். இவ்வகை நோக்கில் பறம்புமலையைக் குறித்து ஆராய்வது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சங்கநூல்களிற் கூறப்படும் வேதசமயக் கருத்துகள்


Siragu tamilagaththin saadhi2
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya Sastri-பின்னங்குடி சாமிநாத சுப்பிரமணிய சாஸ்திரி) அவர்கள் ஒரு பன்மொழி அறிஞர். தமிழிற்கும் வடமொழிக்கும் இலக்கியப்பணிகள் பல ஆற்றியவர். தமிழிலக்கணப் பணியும் மொழிநூற் பணியும் செய்த இவர் தொல்காப்பியத்தை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி” உருவானதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இவரது சிறந்த மொழியியற் புலமையையும், மொழியிலக்கண அறிவையும், ஒப்பியல் ஆய்வுத் திறமையையும், கண்டு வியந்து இவரது பெயரான பி.சா. சுப்பிரமணியம் என்பதன் சுருக்கமாக, செல்லமாக “பிசாசு” என்றும் அழைக்கப்பட்டார் (இவரை குறித்து “தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர்” – http://siragu.com/தமிழாய்வில்-முதலில்-முனை/ – என்ற சிறகு கட்டுரை வழியாக மேலும் அறியலாம்). உரையாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பலநூல்கள் எழுதிய இவருக்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆய்வில் “முதல் முனைவர் பட்டம் பெற்றவர்” (1930 ஆம் ஆண்டு) என்ற பெருமையும் உண்டு. தமிழ் இலக்கணக்கொள்கை வரலாறும் அதன் வடமொழி இலக்கண உறவும் என்ற தலைப்பில் முனைவர்ப்பட்ட ஆய்வேட்டை எழுதினர். 

சமஸ்கிருத இலக்கிய வரலாறு, சமஸ்கிருத இலக்கண வரலாறு ஆகியவற்றைத் தமிழில் எழுதியுள்ளார். இவரது தொல்காப்பிய ஆய்வில் வடமொழி சார்பின் தாக்கம் அதிகம் என்ற கருத்துகளும் அக்காலத்தில் தமிழறிஞரிடையே இருந்தன. தொடர்ந்து “தொல்காப்பிய சொல்லதிகாரக் குறிப்பு” என்ற இவரது நூல் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் வித்துவான் பாடநூலாகத் தேர்வு செய்யப்பட்ட பொழுது விவாதங்கள் வெடித்தன. தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த தமிழறிஞர்கள் அவர்களின் திங்கள் இதழான தமிழ்ப் பொழில் மூலம் பல மறுப்புக் கட்டுரைகளை, மாற்றுக் கருத்துகளை, விளக்கங்களைத் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதிவு செய்து வந்தனர் என்பது சென்ற நூற்றாண்டின் தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 12 July 2019

மயிலை சிவ முத்துவின் குழந்தைக் கதைகளின் நோக்கும் போக்கும்


siragu mayilai sivamuththu1
குழந்தைகளுக்கான கதைகள் குழந்தைகளின் சிக்கல்களை முன்வைத்து அமையவேண்டும். அவர்களுக்கு கதைகள் பெரும்பாலும் ‘‘ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார்” என்ற நிலையிலேயே தொடங்கவேண்டும். சிறுகதை போன்று ஏதோ ஒரு இடத்தில் தொடங்கி ஏதோ ஒரு இடத்தில் முடிதலாகச் சிக்கலும் சிடுக்கும் நிறைந்ததாக இருந்துவிடக் கூடாது. மேலும் கதையின் கருப்பொருளும் குழந்தைகளை மையமிட்டு அமைந்திருக்க வேண்டும். குழந்தைகளின் பழக்க வழக்கங்கள், பள்ளி வாழ்வு, பெற்றோரை, பெரியோரை மதித்தல் போன்றனவே கருப்பொருள்களாக அமைதல் வேண்டும். மேலும் படங்கள், பெரிய பெரிய எழுத்துகள், சிறிய சிறிய கதைகள் இவையே குழந்தைகளின் கதை இலக்கியத்திற்கான வரையறையாக இருக்க முடியும். மேலும் நடை என்பது அவர்களுடன் தொடர்புடையதாக அமையவேண்டும். சிறுகதை ஆசிரியரின் இலக்கியப் புலமைக்கு இங்கு இடமிருக்க முடியாது. இவ்வகையில் குழந்தைகளின் கதைகள் தனித்த வாசிப்பு அனுபவம் மிக்கன.

குழந்தைகளுக்கான கதைகளை எழுதிய குழந்தை எழுத்தாளர்களின் குறிக்கத்தக்கவர்களில் ஒருவர் மயிலை சிவ முத்து ஆவார். இவரின் பாடல்கள், கதைகள் குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. இன்றைய குழந்தைகள், இக்கதைகளை, இக்கவிதைகளை வாசித்து உணர்ந்து அக்கதைகளுடன், கவிதைகளுடன் இணைந்து செல்ல இயலும். அத்தகைய பொது அறக் கதைகளை குழந்தைகளுக்கு வழங்கியவர் மயிலை சிவ முத்து.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஆத்மாநாம்: பிரக்ஞைபூர்வமான கவிஞன்


siragu-aathmaa-naam1
(ஜூலை-6 ஆத்மாநாம் நினைவு நாள்)
தமிழில் அவ்வப்போது சில எதார்த்தமான மாற்றங்கள் நிகழும். அவை காலப்போக்கில்ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்லும். கவிதையும் அப்படித்தான் தன் போக்கில் சுயமாய்நிகழ்ந்து “எதிர்பாரா” தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும். ஆத்மாநாம் என்ற நபரை நாம் கவிஞனாகஅறியலாம். ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்ச் சூழலில் அவருடைய இறுதிக் காலத்திற்குப் பின்பும் நிலவி வந்தது.
ஆத்மாநாம் பிறந்தது, வளர்ந்தது, மொழி, இடம், சூழல் என்று பல வேறுபட்ட காரணிகளைக்கொண்டிருந்தாலும், தான் வளர்ந்த தமிழகத்திற்கும் அதன் இலக்கியத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தவர். வேறொரு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் அவர் தன்னுடைய மொழிவளத்தை தமிழுக்காகவே பயன்படுத்தினார் என்று சொல்லாம். மொழிபெயர்ப்புகள் சில வேறொரு மொழியிலிருந்து பல நல்ல கவிதைகளை தமிழுக்கு பெயர்த்து கொடுத்தவர் ஆத்மாநாம்.

கவிதைகள் குறித்தும் அவர் பிரக்ஞைப் பூர்வமாகவே செயல்பட்டு வந்தார். அவருடைய பல கவிதைகள் அவருடைய காலத்தில் பேசப்பட்டன. என்றாலும் பிற்காலத்தில் அவருடைய கவிதைகள் குறித்த  பேச்சுக்கள் எழாமல் போனது வியப்பாகவே உள்ளது. அவருடைய இருப்பை சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பது  அவருடைய பிரக்ஞை பூர்வமான கவிதைகள். தற்போது ஏறக்குறைய அவருடைய கவிதைகள் குறித்த பேச்சுகள் முற்றிலும் குறைந்து போய் உள்ளதாகவே காணப்படுகிறது. இருப்பினும் உரைநடை எழுத்தாளர்கள் கவிஞர்களை கொண்டாடுவது குறைந்தவிட்ட காலத்தில் ஆத்மாநாம்-க்கு இக்கட்டுரை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 9 July 2019

பா.ச.க-வின் ஆட்சியில் பலவீனமாக்கப்படும் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம்


Siragu five years of bjp govt
இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் பா.ச.க அரசு, படு வேகமாக தங்கள் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறது. ஆட்சியில் அமர்ந்து, இன்னும் இரு மாதங்கள் கூட ஆகாத நிலையில், தங்களின் ஒற்றை ஆட்சி என்ற அஜெண்டாவை நோக்கி விரைவாக நடைபோடுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம், ஒரே கல்வி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சிவில் சட்டம் என்றும் கூறி அதற்கான செயல் வடிவங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அதி தீவிரமாக இறங்கிய மத்திய பா.ச.க அரசு இப்போது கையில் எடுத்திருக்கும் விடயம், ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை என்பதாகும்.

இவர்கள் நடைமுறைப்படுத்த துடிக்கும் இந்த ஒரே என்ற செயல், ஒற்றை ஆட்சி முறையை நோக்கித்தான் நகர்த்தப்படுகிறது என்பது இந்திய அரசியலை உற்று கவனிப்பவர்களுக்கு நன்கு விளங்கும். அதுவும் இந்த ஒற்றை ஆட்சி என்பதன் உள்நோக்கமே, ஒரே இந்துராஷ்டிரம் என்பதாகும். ஒரே மதம் என்பது இந்து மதமாகும். ஒரே மொழி என்பது முதலில் இந்தி, அதன் பிறகு சமஸ்கிருதம் என்ற முறையில் நம் மீது திணிக்கப்படும் சர்வாதிகார முறை அல்லாமல் வேறில்லை என்பதை நாம் உணரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பா.ச.க கூறும் ஒரே தேர்தல் என்பதும், சனநாயகத்திற்கு வேட்டு வைக்கும் செயல்தான். மக்களாட்சி முறை ஒழிக்கப்பட்டு, சனாதிபதி ஆட்சி முறையை கொண்டுவருவதற்கான மறைமுக திட்டமாகும். ஏதோ ஒரு காரணத்தால், ஒரு மாநில ஆட்சி கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தல் வரும் வரை, மக்களால் தேர்ந்தெடுக்க முடியாத, ஆளுநர் ஆட்சி நடைபெறும் சூழல் ஏற்படும். மற்றும் இது தனக்கு இணங்காத மாநில ஆட்சியை காழ்ப்புணர்ச்சி காரணமாக நீக்கும் செயலாகக்கூட அமைய வாய்ப்பிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 5 July 2019

கண்மணியே! (கவிதை)


siragu pengalukku1

புன்னகை சிந்தும் பிஞ்சிதழை
புணர்ச்சியில் சிதைத்து முத்தமா?
பட்டுப்போன்ற கைவிரல்களை இறுக்கமாய்
பற்றி உடைப்பது காமமா?
மெல்லிய மேனியில் வெந்நீர்
ஊற்றினாலே அய்யோவென அலறும்
மழலை அவள் யோனியில்
மோக வெப்பத்தின் விந்தினை
தறுதலையொன்று பீச்சுவது மனிதமா?
பால்குடி மறவா குழவியின்
முதிரா கொங்கைகளை பிசைந்து
முகருவது தான் இன்பமா?



உயிர்வலியறியா காம பிண்டத்தின்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?


siragu-ambedkar1
“அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர், பீமாராவ் ராம்ஜி என்ற மாணவன் கல்வியில் மிக உயர்ந்த நிலை அடைவதற்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்தார். அவருடைய உதவிகள் இல்லாமல் போய் இருந்தால் பீமாராவ் ராம்ஜி உயர்ந்த நிலைக்கு வரவே முடிந்து இருக்காது. அந்த நன்றியின் வெளிப்பாடாகத்தான் அந்தப் பார்ப்பன ஆசிரியரின் பெயரை தன் குடும்பப் பெயராக பீமாராவ் ராம்ஜி இணைத்துக் கொண்டார்” என்ற ஒரு கருத்து மக்களிடையே வலுவாகப் பரவி உள்ளது. இக்கருத்தைப் பார்ப்பனர்கள்தான் உருவாக்கி, பரப்பி நிலைபெறச் செய்து இருக்கிறார்களே ஒழிய இதில் இம்மி அளவும் உண்மை இல்லை.
இதில் உச்சபட்சக் கொடுமை என்னவென்றால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களேகூட இதை வலுவாக நம்புகிறார்கள். எவ்வளவு வலுவாக நம்புகிறார்கள் என்றால் பார்ப்பனர்களின் இதைப் பற்றிக் கூறினால் “பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில் உண்மைச் செய்திகளைக்கூட மறுப்பது / எதிர்ப்பது சரி அல்ல” என்று வலுவாக எதிர்வாதம் செய்யும் அளவுக்கு நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் “பார்ப்பனர்கள் அம்பேத்கர் போன்ற திறமைசாலிகளை மதிக்கவும் வளர்க்கவும் தவறுவதே இல்லை. பார்ப்பனர்களின் கருணையினால்தான் அம்பேத்கர் இவ்வளவு உயர்ந்த நிலைக்குச் செல்ல முடிந்து இருக்கிறது. ஆகவே பார்ப்பன எதிர்ப்பு என்பது தவறான / நன்றி கொன்ற செயலாகும்” என்ற கருத்தைப் பரப்பி சாதியக் கொடுமைகளை நிரந்தரப்படுத்த அவாள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 1 July 2019

ஆசாரக்கோவை காட்டும் தீண்டாமை

siragu aasaarakkovai1
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான “ஆசாரக்கோவை” (இதற்கு ‘ஒழுக்கங்களின் தொகுதி’ என்பது பொருள்) என்னும் நூல் ‘பெருவாயின் முள்ளியார்’ என்ற புலவரால் பாடப்பட்டது. கடைச்சங்க மருவிய காலத்து நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை. நூலின் தற்சிறப்புப் பாயிரத்தால், அப்பாடலின் கருத்தினைக் கொண்டு இவர் சைவசமயத்தைச் சார்ந்தவர் என்பது பெறப்படுகிறது. மேலும், பாயிரம் மூலம் இந்நூலுக்கு மூலநூல் ஆரிடம் என்னும் வடநூலெனவும் தெரிகிறது. இந்நூல் தொகுக்கும் ஆசாரங்கள் யாவும் சுக்ர ஸ்மிருதி நூலின் பாடல்கள் என்று வடமொழிப் புலவர் கூறுகின்றனர் என்பதாக தி. செல்வக்கேசவராய முதலியார் கூறுகிறார். ஆனால், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவரது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூலில், ஆபஸ்தம்ப கிருஹ்யசூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயனதர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு தர்ம சூத்திரம், வசிஷ்ட தர்ம சூத்திரம், மனு ஸ்மிருதி, உசனஸ ஸம்ஹிதா, ஸங்க ஸ்மிருதி, லகு ஹாரித ஸ்மிருதி ஆகிய பல நூல்கள் இந்நூலுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளன எனக்குறிப்பிடுவார்.
சிறப்புப் பாயிரம்:
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி,
ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்-தீராத்
திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளி என்பான்.

வெண்பா பாடல்களாக அமைந்த ஆசாரக்கோவை நூலின் 100 பாடல்களில் மக்கள் வாழ்க்கையில் பின்பற்றப்படவேண்டிய ஒழுக்க நெறிகள் (ஆசாரங்கள்) எவையெவை எனக் கூறப்படுகின்றன. உண்ணல், உடுத்தல், உறங்கல், நீராடல் போன்ற நடைமுறை வாழ்க்கைக் கூறுகள் முதற்கொண்டு, யாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ன செய்யவேண்டும் போன்ற வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன. சுருக்கமாக அகத்தூய்மை புறத்தூய்மை என இரண்டுக்கும் வழிகாட்டும் முயற்சி எனக் கொள்ளலாம். எவை செய்தல் நன்மையுண்டாக்கும், எவற்றைச் செய்தால் தீமைகள் நேரும் என்பதை விளக்குவது நூலின் நோக்கம். இவை எல்லாம் முன்னோர் கண்ட ஒழுக்க நெறிகளே என்பதை  இந்நூலாசிரியரின் கீழ்க்காணும் ‘யாவரும் கண்ட நெறி’ (16) ‘மிக்கவர்கண்ட நெறி’ (27), ‘நல் அறிவாளர் துணிவு’ (17), ‘பேர் அறிவாளர்துணிவு (19), ‘நூல் முறையாளர் துணிவு’ (61) என்ற வரிகளின் மூலம் கூறுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.