தமிழ் மொழி மட்டுமன்று. வரலாற்றுக்
கண்ணாடியும் கூட. காலத்தைத் தன் மடியில் இருத்தி அவை வடித்துத் தந்த
இலக்கியங்கள் இன்னும் பழமை பேசுகின்றன. மனித குலத்திற்கு மட்டுமின்றி,
உயிர்க்குலத்துக்கும் உலகியலுக்கும் கூடத் தமிழ் தெளிந்த வரலாறு கூறுகிறது.
நிலமும் பொழுதுமாகப் பகுபடும் அதன் வகைமைகளில் உயிர்ப் பொருள்களோடு இயைந்த
உயிரல் பொருள்களும் இடம் பெற்றுள்ளன. அவை இன்றும் காலத்தின் சாட்சியங்களாக
விளங்குகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பாரியாண்ட பறம்புமலை ஆகும்.
நிலவியல் அடிப்படையில் அதன் அமைவிடம் குறித்து இக்கட்டுரை அமைகிறது.
நிலவியல் ஒரு சிறு விளக்கம்
ஒரு குறிப்பிட்ட ஒன்றின் கூட்டமைவு, கட்டமைப்பு, இயற்பியல் இயல்புகள், வரலாறு, மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் என்பவை தொடர்பான அறிவியலும், அவை பற்றிய ஆய்வும் நிலவியல் எனப்படும். இது புவி அறிவியலில் ஒரு பிரிவாகும். நிலவியல் அறிவானது, புவியியல், நிலநெய், நிலக்கரி மற்றும், இரும்பு, செம்பு, உரேனியம் போன்ற உலோகங்கள் ஆகிய இயற்கை வளங்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண உதவுகின்றது. மேலும், விலையுயர்ந்த இரத்தினக் கற்கள் மற்றும் கல்நார், மைக்கா, பொஸ்பேற்றுகள், களிமண், படிகக்கல், சிலிக்கா போன்ற கனிமப் பொருட்களைப் பூமியிலிருந்து பெற்றுப் பயனடைவதற்கும் நிலவியல் உதவுகின்றது. பழங்கால வரலாறுகள் கிடைக்கவும் இவை வழிவகை செய்கின்றன. இது இயற்பியலின் ஒரு பிரிவு ஆகும். இவ்வகை நோக்கில் பறம்புமலையைக் குறித்து ஆராய்வது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment