“அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர்,
பீமாராவ் ராம்ஜி என்ற மாணவன் கல்வியில் மிக உயர்ந்த நிலை அடைவதற்கு
மிகப்பெரிய உதவிகளைச் செய்தார். அவருடைய உதவிகள் இல்லாமல் போய் இருந்தால்
பீமாராவ் ராம்ஜி உயர்ந்த நிலைக்கு வரவே முடிந்து இருக்காது. அந்த நன்றியின்
வெளிப்பாடாகத்தான் அந்தப் பார்ப்பன ஆசிரியரின் பெயரை தன் குடும்பப் பெயராக
பீமாராவ் ராம்ஜி இணைத்துக் கொண்டார்” என்ற ஒரு கருத்து மக்களிடையே
வலுவாகப் பரவி உள்ளது. இக்கருத்தைப் பார்ப்பனர்கள்தான் உருவாக்கி, பரப்பி
நிலைபெறச் செய்து இருக்கிறார்களே ஒழிய இதில் இம்மி அளவும் உண்மை இல்லை.
இதில் உச்சபட்சக் கொடுமை என்னவென்றால்
ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களேகூட இதை வலுவாக நம்புகிறார்கள். எவ்வளவு வலுவாக
நம்புகிறார்கள் என்றால் பார்ப்பனர்களின் இதைப் பற்றிக் கூறினால் “பார்ப்பன
எதிர்ப்பு என்ற பெயரில் உண்மைச் செய்திகளைக்கூட மறுப்பது / எதிர்ப்பது சரி
அல்ல” என்று வலுவாக எதிர்வாதம் செய்யும் அளவுக்கு நம்புகிறார்கள்.
இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரத்தின்
மூலம் “பார்ப்பனர்கள் அம்பேத்கர் போன்ற திறமைசாலிகளை மதிக்கவும்
வளர்க்கவும் தவறுவதே இல்லை. பார்ப்பனர்களின் கருணையினால்தான் அம்பேத்கர்
இவ்வளவு உயர்ந்த நிலைக்குச் செல்ல முடிந்து இருக்கிறது. ஆகவே பார்ப்பன
எதிர்ப்பு என்பது தவறான / நன்றி கொன்ற செயலாகும்” என்ற கருத்தைப் பரப்பி
சாதியக் கொடுமைகளை நிரந்தரப்படுத்த அவாள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment