(ஜூலை-6 ஆத்மாநாம் நினைவு நாள்)
தமிழில் அவ்வப்போது சில எதார்த்தமான
மாற்றங்கள் நிகழும். அவை காலப்போக்கில்ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச்
செல்லும். கவிதையும் அப்படித்தான் தன் போக்கில் சுயமாய்நிகழ்ந்து
“எதிர்பாரா” தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும். ஆத்மாநாம் என்ற நபரை நாம்
கவிஞனாகஅறியலாம். ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்ச் சூழலில் அவருடைய
இறுதிக் காலத்திற்குப் பின்பும் நிலவி வந்தது.
ஆத்மாநாம் பிறந்தது, வளர்ந்தது, மொழி,
இடம், சூழல் என்று பல வேறுபட்ட காரணிகளைக்கொண்டிருந்தாலும், தான் வளர்ந்த
தமிழகத்திற்கும் அதன் இலக்கியத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை
செய்தவர். வேறொரு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் அவர் தன்னுடைய
மொழிவளத்தை தமிழுக்காகவே பயன்படுத்தினார் என்று சொல்லாம். மொழிபெயர்ப்புகள்
சில வேறொரு மொழியிலிருந்து பல நல்ல கவிதைகளை தமிழுக்கு பெயர்த்து
கொடுத்தவர் ஆத்மாநாம்.
கவிதைகள் குறித்தும் அவர் பிரக்ஞைப்
பூர்வமாகவே செயல்பட்டு வந்தார். அவருடைய பல கவிதைகள் அவருடைய காலத்தில்
பேசப்பட்டன. என்றாலும் பிற்காலத்தில் அவருடைய கவிதைகள் குறித்த
பேச்சுக்கள் எழாமல் போனது வியப்பாகவே உள்ளது. அவருடைய இருப்பை சுட்டிக்
காட்டிக் கொண்டிருப்பது அவருடைய பிரக்ஞை பூர்வமான கவிதைகள். தற்போது
ஏறக்குறைய அவருடைய கவிதைகள் குறித்த பேச்சுகள் முற்றிலும் குறைந்து போய்
உள்ளதாகவே காணப்படுகிறது. இருப்பினும் உரைநடை எழுத்தாளர்கள் கவிஞர்களை
கொண்டாடுவது குறைந்தவிட்ட காலத்தில் ஆத்மாநாம்-க்கு இக்கட்டுரை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment