குழந்தைகளுக்கான கதைகள் குழந்தைகளின்
சிக்கல்களை முன்வைத்து அமையவேண்டும். அவர்களுக்கு கதைகள் பெரும்பாலும்
‘‘ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார்” என்ற நிலையிலேயே தொடங்கவேண்டும்.
சிறுகதை போன்று ஏதோ ஒரு இடத்தில் தொடங்கி ஏதோ ஒரு இடத்தில் முடிதலாகச்
சிக்கலும் சிடுக்கும் நிறைந்ததாக இருந்துவிடக் கூடாது. மேலும் கதையின்
கருப்பொருளும் குழந்தைகளை மையமிட்டு அமைந்திருக்க வேண்டும். குழந்தைகளின்
பழக்க வழக்கங்கள், பள்ளி வாழ்வு, பெற்றோரை, பெரியோரை மதித்தல் போன்றனவே
கருப்பொருள்களாக அமைதல் வேண்டும். மேலும் படங்கள், பெரிய பெரிய எழுத்துகள்,
சிறிய சிறிய கதைகள் இவையே குழந்தைகளின் கதை இலக்கியத்திற்கான வரையறையாக
இருக்க முடியும். மேலும் நடை என்பது அவர்களுடன் தொடர்புடையதாக
அமையவேண்டும். சிறுகதை ஆசிரியரின் இலக்கியப் புலமைக்கு இங்கு இடமிருக்க
முடியாது. இவ்வகையில் குழந்தைகளின் கதைகள் தனித்த வாசிப்பு அனுபவம் மிக்கன.
குழந்தைகளுக்கான கதைகளை எழுதிய குழந்தை
எழுத்தாளர்களின் குறிக்கத்தக்கவர்களில் ஒருவர் மயிலை சிவ முத்து ஆவார்.
இவரின் பாடல்கள், கதைகள் குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. இன்றைய குழந்தைகள்,
இக்கதைகளை, இக்கவிதைகளை வாசித்து உணர்ந்து அக்கதைகளுடன், கவிதைகளுடன்
இணைந்து செல்ல இயலும். அத்தகைய பொது அறக் கதைகளை குழந்தைகளுக்கு வழங்கியவர்
மயிலை சிவ முத்து.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.