தமிழ்நாட்டை தனியாகப் பார்த்தால் நம்முடைய வளர்ச்சி என்ன என்று நம்மால்
அறிய முடியாது. ஒட்டு மொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான்
புரியும். தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் எஸ்.
நாராயணன். அவர் ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனர். மத்திய அமைச்சரவையின்
செயலாளராகவும் இருந்தார். ஓய்வு பெற்ற பின்னால், உலக நாடுகளுக்குச் சென்று
பொருளாதார ஆய்வாளராகவும் ஆலோசகராவும் இருக்கிறார். அவர் 6 மாதத்திற்கு
முன்னால் dravidian year என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில்
திராவிட இயக்க ஆட்சியில் துணை ஆட்சியராக, மாவட்ட ஆட்சியராக, அரசு செயலாளராக
பணியாற்றியபோது அவருக்குக் கிடைத்த அனுபவங்களை எழுதியுள்ளார். திமுக
ஆட்சிக்கு வந்த முன்பும் அவர் பதவியில் இருந்தார், ஆட்சிக்கு வந்த பின்பும்
இருந்தார்.
“முன்பெல்லாம் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு
குறை இருக்கும், அதை அரசால் தீர்க்க முடியுமென்றால், அரசு அதிகாரிகள்
அறிக்கை அனுப்புவார்கள், எங்களுக்கு அறிக்கை வரும். ஆனால் திராவிட
முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த பின்னால்தான் கட்சியின் பிரதிநிதிகள் மக்களின்
பிரச்சனைகளை எங்களிடம் எடுத்துவந்து பேசத் தொடங்கினார்கள். அரசு
அதிகாரிகளிடமிருந்து நாங்கள் பெற்ற குறைகளை விட, கட்சியின் பிரதிநிதிகள்
எடுத்து வைத்ததுதான் மிக அதிகம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான
சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, கட்சியின் அனைத்து நிலை பொறுப்பில்
இருப்பவர்களும் வந்து எளிய மக்களின் கோரிக்கையை அன்றாடம் எங்களிடம்
பேசியதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பின்னர்தான் என்று
பதிவு செய்திருக்கின்றார். தமிழ்நாட்டை விட்டு வெளியே போனபின்புதான்
தமிழ்நாட்டை அவர் புரிந்து கொள்கின்றார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment