சங்ககாலம் முதல் பெரும்பாலான இலக்கியங்கள்
அவை கூறும் கருத்தின் அடிப்படையில் திரட்டப்பட்டவையே. இத் திரட்டு நூல்கள்
தொகை நூல்கள் என அழைக்கப்பட்டன. அவ்வாறே, கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப்
பின்னரும், பாடல்கள் தொகுக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு காலம் வரையில்
வாழ்ந்த புலவர்கள் பலரின் தனிப் பாடல்கள் பல ‘தனிப்பாடல் திரட்டு’ எனத்
தொகுக்கப்பட்டன. இராமநாதபுரம் புரவலர் பொன்னுசாமித் தேவர் (1837-1870, இவர்
பாண்டித்துரைத் தேவரின் தந்தை) முன்னெடுக்க, தில்லையம்பூர் சந்திரசேகரக்
கவிராயர் தேடித் தொகுத்தவை தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ள பாடல்கள். இந்த
நூலில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைத் திரட்டிக் கொடுத்தவர்
திருக்காட்டுப்பள்ளி இராமசாமி முதலியார் என்பவராகவும் அச்சிட்டவர்
பெரியதம்பி என்பவராகவும் அறியப்படுகிறார்கள். இதுவே முதல் தனிப்பாடல்
திரட்டு நூலாகும். பின்னர் மேலும் சில தொகுப்புகளும் தொடர்ந்து பலரால்
வெளியிடப்பட்டன. தனிப்பாடல் திரட்டுத் தொகுப்பு நூல்களின் உள்ள பாடல்களின்
எண்ணிக்கை ஒவ்வொன்றிலும் வேறுபட்டே உள்ளன.
தனிப்பாடல்களை எழுதினாராகக் கம்பர் ஒளவை முதற்கொண்டு 97 புலவர்களின் தனிப்பாடல்கள் காணக்கிடைத்தாலும், தனிப்பாடல் எனில் இலக்கியச் சுவைக்காகத் தனிச்சிறப்புடன் கூறப்படுபவர் காளமேகப்புலவரே என்றால் அது மிகையன்று. தனிப்பாடல் திரட்டு என்றாலே காளமேகப் புலவரால் பாடப்பெற்ற பாடல்களே பலருக்கும் நினைவு வரும் அளவிற்குச் சிறப்புப் பெற்றவர் காளமேகம். இவர் நாகைக்கருகே உள்ள திருமலைராயன் பட்டினம் பகுதியை ஆண்ட சிற்றரசன் திருமலைராயன் (பொது ஆண்டு 1455-1468) என்பவரின் காலத்தில் வாழ்ந்தவர் என அவர் பாடல் குறிப்பின் மூலம் தெரிய வருகிறது. திருமலைராயன் ஆட்சிக்காலத்தின் அடிப்படையில் இவரும் 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்தவர் என்றே கணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment