மனிதன் சமுதாயமாக வாழ முற்பட்டபோது முதல் தகவல் தொடர்பு முறை அமைந்திருக்க
வேண்டும். மொழி தோன்றுவதற்கு முன்பே தகவல் தொடர்பு சைகைகளால் அமைந்திருக்க
முடியும். இவ்வகையில் தற்காலத்தில் பெருவளர்ச்சி பெற்றுள்ள மக்கள் தகவல்
தொடர்பியல் துறை செம்மொழி இலக்கிய காலத்தில் ஓரளவிற்கு அச்சமுதாய தேவைக்கு
ஏற்ப அமைந்திருந்தது. அரசன், அவனுக்குக் கீழ் அமைச்சர்கள், ஐம்பெருங்குழு,
எண்பேராயம், வரி வசூல் செய்பவர்கள் என்று அரச சுற்றம் செம்மொழி காலத்தில்
இருந்தது. இந்தச் சுற்றம் எடுக்கும் முடிவுகள், கட்டளைகள் மக்களுக்கு
அறிவிக்கப்பெற்றன. அவை நடைமுறைக்கு வந்தன.
சங்க காலத்தில் முரசு அறைந்து செய்தி
அறிவிக்கும் நடைமுறை இருந்துள்ளது. இது தவிர பறை முழக்குதல், முழவு
கொட்டுதல், மணி அடித்தல் போன்ற செயல்பாடுகள் வழியாக மக்கள் அதிகாரக்
குழுக்களுடன் இணைவு பெற்றனர். இவ்வடிப்படையில் சங்ககாலத்திலேயே தமிழர்கள்
மக்கள் தகவல் தொடர்பியல் கூறுகளைச் சிந்தனைகளைப் பெற்றிருந்தனர் என்பது
தெரியவருகிறது.
மக்கள் தகவல் தொடர்பியல் இன்று பல்வகை
நிலைகளில் விரிந்து பரவி ஆழ் நிலையில் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி
வருகிறது. ‘‘தொடர்பியல் உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளையும்
நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி
உலக நாடுகளை எல்லாம் அளவில் சுருக்கி நெருக்க வைத்துள்ளது. மக்கள்
ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவும் தொடர்பியல் கருவியாகப் பயன்படுகிறது”
என்று தகலியலுக்கான விளக்கம் தரப்பெறுகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment