நீடித்த நிலையான வளர்ச்சிக்கான உலக
நிறுவனமும், ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீருக்கான குழுவும் (International
Institute for Sustainable Development and Council for Energy,
Environment and Water)இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்களினால் ஏற்படும்
மாசுகள் பற்றி ஆய்வு செய்து ஓர் அறிக்கையை 6.8.2019 அன்று புதுதில்லியில்
வெளியிட்டது.
அனல் மின் நிலையங்களின் செயல்பாட்டால்
கந்தக டையாக்சைட் (Sulphur dioxide), நைட்ரஸ் ஆக்சைட் (Nitrous oxide) ஆகிய
காற்று மாசுகள் வெளிவருகின்றன. இந்த மாசுகளை முறையாகக்
கட்டுப்படுத்தாவிட்டால் மக்களுக்கு நுரையீரல் நோய் ஏற்பட்டு 3,00,000
முதல் 3,20,000 பேர்கள் வரை அகால மரணம் அடைவார்கள் என்றும், மேலும் இந்த
நோய்களுக்கு சிகிச்சை செய்யும் செலவுரூ.5.1 கோடி ஆகும் என்றும்
எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் “பதறிப்போன” இந்திய அரசு உடனே
இம்மாசுகளைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என்று 2017ஆம்ஆண்டு ஒரு சட்டத்தை
இயற்றியது. இச்சட்டப்படி அனல் மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும்
2017ஆம்ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பாகவே முறையான தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி மாசுகள் வெளியாவதைத் தடுக்க வேண்டும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment