செப்டம்பர் 17, 2019 எழுத்தாளர் Pieter
Friedrich ஹுஸ்டன் சிட்டி கவுன்சில் கூட்டத்தில், இந்திய பிரதமர் மோடி
அவர்களின் “Howdy Modi” என்ற ஊர்வலத்திற்கு எதிராக முழங்கியுள்ளார். அதன்
தமிழாக்கம் வருமாறு:-
இந்து தேசியத்தை வலியுறுத்தும் பா.ச.க-வின் இந்திய பிரதமர் நரேந்திர
மோடி, செப்டம்பர் 22, “Howdy Modi” எனும் ஊர்வலத்தில் பங்கேற்க ஹுஸ்டன்
வருகின்றார். அந்த ஊர்வலத்தில் ஹுஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னர் பங்கேற்க
உள்ளார்.
மோடியின் கரங்களில் குருதி தோய்ந்துள்ளது.
அவரை வரவேற்க கைக்குலுக்கும் நபர்களின் கரங்களில் ஒட்டிக்கொள்ளப் போகும்
குற்றங்களின் பங்களிப்பிலிருந்து அவர்கள் தங்கள் கைகளை கழுவிட முடியாது.
“Howdy Modi” எனும் இந்த ஊர்வலம்
அமெரிக்காவில் இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையால்
முன்னெடுக்கப்படுகின்றது. ஆர்எஸ்எஸ் துணை இராணுவ அமைப்பு போல்
செயல்படக்கூடிய ஒன்று. அதன் சீருடை ஹிட்லர் யூத் அமைப்பின் உறுப்பினர்கள்
அணிந்திருந்தை ஒத்திருக்கும். இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925 ஆம் ஆண்டு
தொடங்கப்பட்டது. அதே வருடம் தான் ஹிட்லரின் நாஜி அமைப்பு தொடங்கப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆர்எஸ்எஸ் இத்தாலியின் முசோலினி பாசிச
அமைப்பை போல் தன்னை வடிவமைத்துக்கொண்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment