உலகளவில் உள்ள கடல்களில், இந்து
மகாசமுத்திரம் சிறியது. அதில் பெரும் பங்கு வகிப்பது இந்திய கடல்தான்.
அரபிக் கடல், வங்காள விரிகுடா, அந்தமான் கடல் மற்றும் லட்சத்தீவு கடல்
ஆகியவை இந்திய கடலில் அடங்கும். கட்ச் வளைகுடா, காம்பட் வளைகுடா மற்றும்
மன்னார் வளைகுடா ஆகியவை இந்திய கடல்பகுதியில் உள்ள மூன்று முக்கிய
வளைகுடாக்களாகும்.
சுமார் 980 கி.மீட்டர் நீளம் கொண்ட
தமிழ்நாட்டின் கடற்கரை, இந்திய கடற்கரையின் மொத்த நீளத்தில் 17விழுக்காடு
ஆகும். இதில், வங்காள விரிகுடா 355 கி.மீட்டர் அளவிலும், பாக் சலசந்தி,
மன்னார் வளைகுடா மற்றும் அரபிக் கடல் ஆகியவை 625 கி.மீட்டர் அளவிலும் இடம்
பெற்றுள்ளன. மணல் பாங்கான கடற்கரை,சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலக்காடுகள்
மற்றும் பவளப்பாறைகள் ஆகியவை தமிழ்நாட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய
சூழ்நிலைகளாகும். பவளப்பாறைகள், இராமநாதபுரம் மற்றும் தூத்தூக்குடி
மாவட்டங்கள் உள்ளடங்கிய மன்னார் வளைகுடா மற்றும் பாக் சலசந்தி பகுதிகள்
இடம் பெற்றுள்ளன. இயற்கை மற்றும் இயற்கை வளம் பேணுதலுக்கான சர்வதேச ஐக்கிய
கூட்டுறவு அமைப்பின்படி, கடல் ஏற்ற – வற்ற இடைப்பகுதி மற்றும் அது
சார்ந்தநீர்ப்பகுதி, தாவர, விலங்கினங்கள், சரித்திர மற்றும் கலாச்சார விசேச
அம்சங்கள் ஆகியவை சட்டங்கள் மற்றும் ஏனைய நற்பயனளிக்கும் முறைகள் மூலமாக
முழுவதும் அல்லது அதன் ஒரு பகுதி மட்டும் பாதுகாக்கப்பட்டிருந்தால், அது
கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி எனப்படும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment