அண்மையில் தோழர் ஓவியா எழுதிய
கருஞ்சட்டைப் பெண்கள் என்ற நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில்
சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் பற்றி பல செய்திகளை சிறப்பாக பதிவு
செய்யப்பட்டிருந்தன. அதில் குறிப்பாக தந்தை பெரியார் அவர்களாலும்,
சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளாலும் பயன் பெற்றோர் பார்ப்பனர் அல்லாத
பெண்கள் மட்டுமல்ல பார்ப்பன பெண்களும் என்ற தகவலை குடியரசு ஏட்டில் 1930
இல் வெளிவந்த ஒரு கடிதம் மற்றும் குமரன் இதழில் வெளிவந்த கடிதம் இவற்றை
தொகுத்து தரப்பட்டிருந்த செய்தியில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பார்ப்பன
பெண்கள் என்றாலும் மனுவின் படி அனைத்துப் பெண்களும் பாவ யோனியில் இருந்து
பிறந்தவர்களே!
பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என தெளிவாக கூறுகின்றது.(மனு அத்தியாயம் 9; சுலோகம் 32)
குறிப்பாக விதவைகளின் மறுவாழ்வை
வலியுறுத்தி அன்றைய காலக்கட்டங்களில் சுயமரியாதை இயக்கம் சுழன்று பரப்புரை
செய்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூட அதனை வலியுறுத்தி பல
பாடல்களை இயற்றி உள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment