“பணத்தால்
ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும்.
படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத்தான்
மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’,
ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும்” (பக்கம் – 286); என்று நகைச்சுவையாகத்
தனது கருத்தை வலியுறுத்த முனையும் பெரியார், நாம் ஒருவரை மதிப்பது,
பேசுவது, நினைவுறுவது அவருடைய பணம், படிப்பு, அதிகாரம், பட்டம், பதவி,
அறிவு, திறமை ஆகியவற்றுக்காக அல்ல என்கிறார்.
அப்படியானால் எதற்காக நாம் ஒருவரை
நினைவில் நிறுத்துகிறோம்? அதற்குப் பெரியாரே கூறும் விடை, “மனிதர்களாக —
மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது
மனிதத்தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆகுங்கள்
என்பதற்காகவே யாகும்” என்ற தெளிவான ஒரு வரையறையை வகுக்கிறார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment