பொழுதுகள்
வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப
பாகுபடுத்தப்பட்டதே பொழுதுகள் ஆகும். பொழுதுகள் பற்றி வானிலை அறிவியல்
பருவமழைக்காலம், பருவ மழைக்கு பிந்தைய காலம், குளிர்காலம், கோடைகாலம் என
நான்காக வகைப்படுத்துகின்றது. இவ்வகைப்பாடானது ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. பொழுதுகளை பெரும்பொழுது,
சிறுபொழுது என இரண்டாகப் பிரித்து, ஒரு ஆண்டின் கூறுகளாக அமைவது
பெரும்பொழுது எனவும் ஒரு நாளின் கூறுகளாக அமைவது சிறுபொழுது எனவும் கூறி,
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என
பெரும்பொழுதுகளையும் மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு என
சிறுபொழுதுகளையும் வகைப்படுத்தியிருப்பது சங்கப்புலவர்களின் பொழுதியியல்
அறிவைக் காட்டுகின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment