‘நானாற்பது’ என அறியப்படும்,
பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ‘நாற்பது’ எனமுடியும் பெயர்கொண்ட நான்கு
நூல்களுள் இரண்டாவது நூல், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார்
எழுதிய ‘இனியவை நாற்பது’ என்ற நூல். ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு ‘நன்மை
தருவனவற்றை’ அல்லது ‘இன்பம் தருவனவற்றை’, ‘இனியவை’ எனக் கூறும் 40 பாடல்கள்
கொண்ட தொகுதி என்பதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது. ‘இனிது
நாற்பது’, ‘இனியது நாற்பது’, ‘இனிய நாற்பது’ என்ற பெயர்களும் இந்த நூலையே
குறிக்கும்.
இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்துப் பாடல்
மும்மூர்த்திகளான சிவன், திருமால், பிரம்மா ஆகியோரை வணங்குதல் இனிது எனக்
கூறுகிறது. பிரம்மாவைக் குறித்துக் குறிப்பிடுவதாலும், இன்னா நாற்பது
கருத்துகளினை அடியொட்டி எழுதப்பட்டுள்ள கருத்துகளாலும் இந்த நூல் இன்னா
நாற்பது நூலுக்குப் பிறகு தோன்றியது என்றும் எட்டாம் நூற்றாண்டு காலத்தது
எனவும் கணிக்கப்படுகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment