நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மலேய
பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒரு தமிழ்ப்பெண் எதிர்கொண்ட சூழல்
எத்தகையதாக இருந்திருக்கும் என அறிய விரும்பினால் படிக்க வேண்டிய நூல் இது.
அதை விளக்கும் வகையில், 50 சிறு சிறு நிகழ்வுகளின் தொகுப்பாக அக்கால
வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது இந்த புதினம். மலேய பள்ளிகளில் ஆசிரியையாகப்
பணியாற்றி ஓய்வு பெறுகிறார் அகிலா என்ற பெண்மணி. அவர் தனது ஏறத்தாழ ஒரு 30
ஆண்டுக்கால பணி குறித்த நிகழ்ச்சிகளின் நினைவுக்கடலில் மூழ்கி அவற்றை
அவ்வப்பொழுது தனது கணவரிடமும் பகிர்ந்து கொள்ளுவதாக நூலின் போக்கு
அமைந்துள்ளது. தான் தமிழில் எழுதியதை ஆங்கில மொழி பெயர்ப்பாக “எ ஜர்னி துரு
ஸ்கூல்ஸ்” (A Journey through Schools, Nirmala Raghavan, 2019) என்ற
தலைப்பில் வெளியிட்டுள்ளார் மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன்.
நிர்மலா ராகவன் இந்தியாவில் பிறந்து
வளர்ந்து கல்விகற்று திருமணத்திற்குப் பிறகு மலேசியாவில் குடியேறிய தமிழர்.
மலேய கல்வித்துறையிலும் பள்ளிகளிலும் பணியாற்றியவர். பெண்ணியச் சிந்தனை
கொண்ட சமூக ஆர்வலரான நிர்மலா வானொலி நாடகங்களையும், நூற்றுக்கு மேற்பட்ட
சிறுகதைகளையும், 20க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டவர். இணைய
இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். உளவியல் கோணத்தில்
முந்நூற்றுக்கும் மேற்பட்ட மனவளக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும்
எழுதியுள்ளார். அக்கட்டுரைகள் பல்கலைக்கழக ஆய்விற்கான பொருண்மையாகத் தேர்வு
செய்யப்பட்டதும், இவரது சிறுகதை நூல்களுள் ஒன்று கல்லூரி பாடநூலாக
எடுத்துக்கொள்ளப்பட்டதும் இவர் பெற்ற சிறப்பு. இவரது வாழ்நாள் இலக்கியப்
பங்களிப்பு பாராட்டப்பட்டு அதற்கான விருதும் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment