ஆசையைப் போல இன்பமுடையதும் எதுவுமில்லை,
துன்பம் தருவதும் எதுவுமில்லை. ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே என்பது
சரிதான். அலை அலையாக ஆசைகள் நமக்குள் வந்து சேர்கின்றன. அந்த ஆசைகள்
நிறைவேறும் வரை அலை அலையாக நம் மனதை அலைக்கழித்து வருகிறது. அதனை
அடைந்தால்தான் வாழவே முடியும் என்றாக்கி விடுகிறது. ஆசை நல்லதா கெட்டதா
என்று விவாதமே செய்யலாம்.
ஆசை இல்லை என்றால் மனிதன் உயர இயலாது.
வீடு வாங்க வேண்டும், நிலம், காடு, கரை, கார், வாகனம், நகை என்று எல்லாம்
வாங்க வேண்டும் என்று மனதிற்குள் ஏற்படும் தூண்டுதல்கள் அந்த அந்த ஆசையை
நிறைவேற்றுவதற்கான வழியைத் தேட வைக்கிறது. மனிதனை ஒரு கட்டத்தில் இருந்து
மற்றொரு கட்டத்திற்கு நகர்த்துவது ஆசை.
இந்த ஆசை நியாயமானதாக இருக்கும் வரை
நல்லது. நியாயமில்லாது போகின்ற நிலையில் கெட்டதாகிவிடும். சத்தியமாக
உழைத்து பெற்ற பணத்தில் வீடு, நிலம், காடு, கரை வாங்கலாம். மாற்றுவழியில்
வந்த பணத்தில் வாங்கினால் துன்பம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சத்தியமான வழியில் சத்தியமான ஆசைகள் நிறைவேறும். நலம் தரும். எனவே ஆசை
நல்லது தான், அது சத்தியமான நிலையில் மனிதனை வழி நடத்தும் வரை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment