Wednesday, 10 June 2015

சி. சு. செல்லப்பா

c.su.sellappaa1

[இந்தக் கட்டுரை, காவ்யா வெளியீடான ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர்கள்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. நூலின் பதிப்பாசிரியர் கள் முனைவர் ப. மருதநாயகம், முனைவர் சிலம்பு நா. செல்வராசு. புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தில் 2005இல் படிக்கப்பட்டது]
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் குறுகியகால ஆய்வுத்திட்டம் ஒன்றின்கீழ் 1983 இல் ‘தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு-1900 முதல் 1980 வரை’ என்னும் நூலினை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்நூலின் நான்கு இயல்களில் ‘எழுத்துக்காலம்’ என்பதும் ஒன்று. நவீன திறனாய் வினை ஆராய முன்வரும் எவரும் ‘எழுத்து’ பத்திரிகையின் பங்களிப்பினைக் குறைத்து மதிப்பிட முடியாது. எழுத்து பத்திரிகையின் பிதாமகர் சி. சு. செல்லப்பா. (வத்தலக்குண்டில் 1912ஆம் ஆண்டு பிறந்தவர், 1998இல் சென்னையில் மறைந்தவர்). முதன்மையாகப் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றியதாக மதிப்பிடப்பட்ட எழுத்து இதழ், விமரிசன வளர்ச்சிக்காகவே தொடங்கப்பட்டது என்பது ஒரு முரண் உண்மை.

c.su.sellappaa4
மணிக்கொடி கால முதலாகச் சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர் சி. சு. செல்லப்பா. ஐம்பதுகளில் சிலகாலம் படைப்புப் பணியிலிருந்து ஒதுங்கியபோது திறனாய்வு தொடர்பாகப் படிக்கத் தொடங்கினார். குறிப்பாக அமெரிக்க வடிவவியல் திறனாய்வாளர்கள்-புதுத் திறனாய்வாளர்கள்- அவரைக் கவர்ந்தனர். விமரிசனத் துறையில் ஈடுபட வேண்டிய கட்டாயம் 1955இல் ஏற்பட்டது. சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிக் க. நா. சுப்ரமணியமும் சி. சு. செல்லப்பாவும் ‘சிறுகதையில் தேக்கமா-வளப்பமா?’ என்னும் பொருள் பற்றிக் கட்டுரைகள் வரைந்தனர். அதனால் பாதிக்கப்பட்ட ஆர்வியும் அகிலனும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, தமது கருத்தை வலியுறுத்திச் செல்லப்பா எழுத முனைந்தார். சுதேசமித்திரன் ஆசிரியர் வேண்டுகோளின்படி ‘நல்ல சிறுகதை எப்படி இருக்கும்?’ என்னும் தலைப்பில் எழுதலானார். இவ்வாறுதான் சி. சு. செல்லப்பாவின் விமரிசனப்பணி தொடங்கியது என்று சொல்லலாம். இந்த ஆர்வமே அவரைப் பின்னால் எழுத்து பத்திரிகை (1959) தொடங்குவதில் கொண்டு சென்று விட்டது. ஒருவகையில் சி. சு. செல்லப்பாவுக்கு ஈடாகச் சொல்லக்கூடிய வடிவநோக்குத் திறனாய்வாளர்கள் இன்றுவரை இல்லை என்று சொல்லலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 9 June 2015

தொலைக்காட்சி

tholaikkaatchi 5

தொலைக்காட்சிப்பெட்டியின் மற்றொரு பெயர் ‘இடியட் பாக்ஸ்’ – முட்டாள்(களின்) பெட்டி. முட்டாள்கள் தினத்தில் மட்டுமல்லாமல் தினம்தோறும் மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கும் பல்வேறு தொழில்நுட்ப நுகர்வு சாதனங்களில் ஒன்றுதான் தொலைக்காட்சிப்பெட்டி. பொழுதுபோக்கு என்றும் செய்திகள் என்றும் நம் வீட்டின் வரவேற்பறையில் குப்பைகளை அள்ளி நிறைத்துக்கொண்டிருக்கும் சாதனம். கூடவே நம் மூளைகளிலும்! அந்தப் பெட்டியின் திரையில், வீட்டுக்கூடத்தின் நடுவில் நிகழ்ந்து கொண்டிருப்பது, பெரும்பாலும் நாம் ரகசியம் என்றும் கெட்டவை என்றும் ஒதுக்கி வைத்திருக்கும் வக்கிரங்கள் – வன்முறை, புறம்பேசுதல், அறமீறல்கள், அத்து மீறல்கள், பாலியல் வெளிப்படுத்தல்கள்! பொழுதுபோக்கு என்னும் பெயரில் வீட்டுக்கூடத்தில், அனைத்து உறவுகளின் கூட்டு அமர்வின் முன் நிகழ்வதால் அவற்றை மனதுக்குள் ஏற்றும் தடை விலகி விடுகிறது. வக்கிரங்கள் எனக்கருதுவதால், பார்ப்பவற்றை ஈடுபாட்டுடன் செயல்படுத்த முடியாமல் ஆசைகளாக மனதின் ஆழங்களுக்குள் புதைத்து வைக்கப்படுகிறது. புதையலின் அழுத்தம் அதிகரிக்கும்போது வெடித்து விடும்! அதே நேரத்தில் தொலைக்காட்சிப்பெட்டி, சுய உணர்வுடன் உபயோகிப்பவர்களின் அறிவுக்குத் தீனி போடும் சாதனம் கூட. அதை ‘இடியட் பாக்ஸ்’ என அழைப்பது, தொழில்நுட்பத்தின் மூலம் நம்மை வந்தடைந்திருக்கும் தொலைக்காட்சிப்பெட்டியை அவமதிப்பது ஆகலாம். உண்மையில் அதை உபயோகிக்கும் நாம் முட்டாள்களா இல்லையா என்பதைப் பொறுத்துதான், அதன் குணம் அமையும் – கண்ணாடியில் பதிந்திருக்கும் அழுக்கு, அது எதிரொளிக்கும் காட்சியில் படிவது போல!
எந்த தொழில்நுட்பத்துக்கும் மூலக்காரணம், மனிதனின் மூளையில் இயற்கை விதிகள் ஏற்படுத்தும் ஒரு தூண்டுதல். அந்தத் தூண்டுதல் அளிக்கும் அறிதல். தொலைக்காட்சியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியின் முதல் கட்டம் செலினியம் என்னும் தனிமத்தின் குணமான, ஒளி பட்டால் எலெக்ட்ரான்களை வெளியிடும் தன்மையை மனிதன் கண்டறிந்ததுதான். இந்தக் கண்டுபிடிப்பு 1873-ம் ஆண்டு நிகழ்ந்தது. செலினியம் என்னும் தனிமத்தில் ஒளி படும்போது, அந்த ஒளியின் தன்மைக்கேற்ற மின் சமிக்ஞ்சையை (Signal) வெளியிடுகிறது. இதுவே ஆரம்பக்கட்ட தொலைக்காட்சி கேமராக்களின் தொழில் நுட்பம்.

ரேடியோ அலைகள் மூலம் ஒலியலைகளை 1906-ம் ஆண்டு அலைபரப்பு செய்திருக்கிறார்கள். அதன்பின் 1920-களின் நடுவில், படங்களை ரேடியோ அலைகள் மூலம் அனுப்ப தீவிரமான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. அதாவது தொலைக்காட்சியின் வயது 100 ஆண்டுகளை இன்னும் தொடவில்லை. ஆனால் தொலைக்காட்சி தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் அதீத வேகத்தில் வளர்ந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 8 June 2015

தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் நேர்காணல் – பகுதி-4

mukilan nerkaanal5

கேள்வி: தாங்கள் மேற்கொண்ட சமூகப் போராட்டங்கள் என்ன?
பதில்: இது நான் கூடங்குளம் போராட்டத்திற்கு செல்வதற்கு முன்னால் நடந்தது. 2011 செப்டம்பர் 11ந்தேதி கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்திற்குச் சென்றேன். இன்றைக்கும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவில் ஒருவராக இருந்து செயல்பட்டு வருகிறேன். அதற்கு முன்னால் என்னுடைய செயல்பரப்பு என்பது ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில்தான். ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களில் 2005-களில் இருந்து தொடர்ந்து வினையாற்றி வருகிறேன். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக அறியப்பட்டாலும் கூட, என்னுடைய செயல்பாடு என்பது நேரடியாக சுற்றுச்சூழலுக்கு வந்தது அல்ல. நான் ஏற்கனவே தொடக்கத்திலேயே சொன்னேன், தமிழீழ விடுதலை, தமிழ்தேசிய விடுதலை என்ற அரசியல் களத்தின் மூலம்தான் நான் சமூக செயல்பாட்டுக்கு வந்தேன்.

mukilan nerkaanal7
1983-லே தமிழீழப் படுகொலை நடந்த பொழுது, தியாகப் பயணத்தில் பங்கெடுத்தப் பின்பு, நெடுமாறன் அய்யா அவர்களுடைய அன்றைய தமிழ்நாடு, காமராசு காங்கிரசு அமைப்பில் இணைந்து செயல்பட்டேன். அதனுடைய மாணவர் அமைப்பினுடைய பொறுப்பாளராக இருந்தேன். தமிழ்நாடு காமராசு காங்கிரசு என்பது தமிழர் தேசிய இயக்கமாக மாற்றப்பட்ட பொழுதும் அதனுடைய மாணவர் அமைப்பிலே பொறுப்பாளராக செயல்பட்டேன். அப்போதைய காலகட்டங்களில் எனக்கு மார்க்சீயத்தின் மீதான பரிச்சயம் ஏற்பட்டு, புரிதல்கள் ஏற்பட்டு அதைப்பற்றி பலரோடும் விவாதிக்கத் தொடங்கினேன். அதனுடைய வழி இங்கே ஒரு சுரண்டலற்ற, ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செய்யாத, சுரண்டல் இல்லாத ஒரு சமத்துவமான சமூகம் அமையவேண்டும், இந்த நாட்டிலே வியர்வை சிந்தி உழைக்கக்கூடிய உழவர் தொழிலாளருடைய அதிகாரம் அமைய வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட அதிகாரம் என்பது குறிப்பாக இந்தியச் சூழலிலே இந்தியா என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட நாடு. இந்த கட்டமைக்கப்பட்ட இந்திய நாடு என்பது எந்த விதமான மொழி தேசிய இனத்திற்கும், எந்த விதமான சுதந்திரமான அணுகுமுறைகளும் தராமல் முழுக்க முழுக்க ஒரு அடிமைப்படுத்தி வைக்கக்கூடிய கட்டமைப்புதான் இந்திய கட்டமைப்பு என்பதை உணர்ந்து இங்கே ஒவ்வொரு மொழி வழி தேசிய இனமும் தன்னுடைய தேசிய விடுதலை புரட்சியை நிகழ்த்துவதன் ஊடாகத்தான் சமூகம் அடுத்த படிநிலைக்கு செல்லப்படமுடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சென்னையில் விண்ணைத்தொடும் நிலத்தின் மதிப்பு – விரைவில் சரிந்து விழும்

chennayil vinnai thodum4
சென்றவாரம் இரண்டு மனை சார்ந்த பேரங்களில் ஈடுபட்டு தோல்வியடைந்தேன். காரணம், மனைக்கு அதன் உரிமையாளர்கள் கேட்ட தொகை விண்ணைத்தொடும் அளவிற்கு இருந்தது. அந்த விலையில் வாங்கி, அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டி விற்றால் மிகக் கொடுமையான கடனுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். என்னிடம் இருக்கக்கூடிய அனைத்து சொத்துக்களையும் விற்றாலும் அந்தக் கடன் தீராது. இரண்டு மனை பேரங்களிலும், தாங்கள் கேட்டத் தொகைக்கு பலர் வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அறிவுள்ள எந்த ஒரு கட்டிட முதலாளியும் முட்டாள் தனத்துடன் சொல்லப்படும் அத்தகைய அதிக விலையில் மனையை வாங்கமாட்டார்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக நிலம்/வீடு சார்ந்த சொத்துக்களில் விலையை நீங்கள் கவனித்து வந்தால் பெரிய அளவிலான கழிவுகளை முதலாளிகள் தந்து தங்களிடம் இருக்கக்கூடிய அடுக்குமாடிக் கட்டிடங்கள் விற்றுப்போக எண்ணுவதைக் காணமுடியும். ஒருசில மேல்தட்டுப் பகுதிகளில் தொடக்கத்தில் அறிவித்த விலையை விட முப்பதிலிருந்து நாற்பது சதவிகிதம் விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 3 June 2015

சிறகு இதழுக்கு செய்தியாளர்கள்/நிருபர்கள் தேவை

reporter1

சிறகு இதழுக்கு பகுதி வாரியாக நேர்காணல்கள், கட்டுரைகள், படக்கட்டுரைகள், நிகழ்வுகள், பிற செய்திகள் போன்றவற்றை படைப்புகளாக அனுப்பக்கூடிய செய்தியாளர்கள்/நிருபர்கள் தேவைப்படுகிறார்கள். பகுதி எனப்படுவது தமிழகத்தின் மாவட்டங்களாக இருக்கலாம், 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 2 June 2015

பட்டறிவும் விதிகளும்

pattarivum vidhigalum2
அறிவியல் மூலம் நாம் பெறும் அறிவு நமக்குக் கூறுவது, ஏரணவியல் (logic) முறையில் ஒன்று நிகழ்வதற்கு மற்றொன்று காரணம் என்ற அடிப்படை உண்மையை. நிகழ்வுகளின் காரணம் யூகிக்கப்பட்டு, அந்தக் காரணம் நிகழ்வை ஏற்படுத்துகிறதா என்று பல சோதனைகள் செய்யப்படுகிறது. அந்த நிகழ்வுகள் ஒவ்வொரு முறையும் அதன் காரணி மூலம்தான் நிகழ்கிறது என்பது ஆய்வுகள் முறையில் உறுதிப்படுத்தப்பட்டு, பின்னர் ஆய்வறிஞர் குழுவால் “இதற்குக் காரணம் இது என்பது சரியே” என உறுதிப் படுத்தப்பட்ட பின்னர் அவற்றை அறிவியல் தரும் விதிகளாக உலகம் ஒப்புக்கொள்கிறது. இந்த அறிவியல் விதிகளை முறியடிக்கும் மாற்றுவிளக்கம் எழும்வரை இந்த விதிகளே ஒரு நிகழ்வுக்கு விளக்கம் தரப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மரத்தில் உள்ள பழம் நிலத்தில் விழுவதற்குக் காரணம் புவியின் புவிஈர்ப்புவிசை என்பது யாவரும் அறிந்த ஒரு அறிவியல் விதியின் விளக்கம்.
pattarivum vidhigalum3
அறிவியல் பாடத்தில், குறிப்பாக இயற்பியலில் நாம் படித்த நியூட்டனின் விதிகள், கெப்ளரின் விதிகள், ஃபிளம்மிங்கின் விதிகள் போன்ற அடிப்படை அறிவியல் விதிகள் யாவும் இவ்வாறு அறிவியல் சோதனைகள் மூலம் ஆராயப்பட்டு, ஆதாரப்பூர்வமான முடிவுகளால் அறிவியல் விதிகள் என ஒப்புக்கொள்ளப்பட்டவை. இவை அறிவியல் கோட்பாடுகளை காரண காரியத்துடன் ஏன் விளைவுகள் நிகழ்கின்றன எனத் தெளிவாக விளக்குபவை. ஒவ்வொருமுறையும் இந்த விதிகள் கூறுவது போலவே விளைவுகளும் மாறாது நிகழும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 1 June 2015

வீதி நாடக கலைக்கடலில் எனது ஒரு துளி அனுபவம்

veethi naadagam5
முத்தமிழின் ஒரு பகுதியான நாடகத்திற்கென்று ஒரு தனித்துவம் என்றும் உண்டு. பாட்டு, இசை, நடிப்பு என மூன்றும் கலந்த வடிவமே நாடகம். சங்ககாலம் முதல் பாணர், கூத்தர், விறலியர் என நாடக வரலாறு நம் தமிழ் சமூகத்திற்கு உண்டு என்றாலும், மேடையில் திரை வருதல், விலகுதல், ஒப்பனை, ஒலி-ஒளி வடிவம் அமைத்தல் போன்ற வடிவங்களை பார்சி இனத்தவரிடமிருந்து நாம் கற்றுக் கொண்டோம் என்பது வரலாறு.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் சங்கரதாசு சுவாமிகள், T.K.சண்முகம் போன்ற பல நாடக வல்லுனர்கள் மேலும் நம் நாடகக் கலையை மெருகூட்டினர். ஒரு நாடகம் நிகழ்த்த மேடை, உடை, ஒப்பனை, ஒலி, ஒளி என பல்வேறு உபகரணங்கள் தேவைப்பட்டன. இதெல்லாம் பெற்ற ஒரு குழுவே நாடகக்குழு என அங்கீகரிக்கப்பட்டது. இவைகள் ஏதும் இல்லாமலே மக்களிடத்தில் ஒரு நாடகத்தை நிகழ்த்த முடியும் என்ற ஒரு புதுக் கொள்கையை வகுத்தவரே பாதல் சர்க்கார். வங்காளத்தைச் சேர்ந்த இவர் வீதி நாடகம் என்ற புது நாடக யுக்தி ஒன்றை உருவாக்கினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.