முத்தமிழின்
ஒரு பகுதியான நாடகத்திற்கென்று ஒரு தனித்துவம் என்றும் உண்டு. பாட்டு,
இசை, நடிப்பு என மூன்றும் கலந்த வடிவமே நாடகம். சங்ககாலம் முதல் பாணர்,
கூத்தர், விறலியர் என நாடக வரலாறு நம் தமிழ் சமூகத்திற்கு உண்டு என்றாலும்,
மேடையில் திரை வருதல், விலகுதல், ஒப்பனை, ஒலி-ஒளி வடிவம் அமைத்தல் போன்ற
வடிவங்களை பார்சி இனத்தவரிடமிருந்து நாம் கற்றுக் கொண்டோம் என்பது வரலாறு.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் சங்கரதாசு
சுவாமிகள், T.K.சண்முகம் போன்ற பல நாடக வல்லுனர்கள் மேலும் நம் நாடகக்
கலையை மெருகூட்டினர். ஒரு நாடகம் நிகழ்த்த மேடை, உடை, ஒப்பனை, ஒலி, ஒளி என
பல்வேறு உபகரணங்கள் தேவைப்பட்டன. இதெல்லாம் பெற்ற ஒரு குழுவே நாடகக்குழு என
அங்கீகரிக்கப்பட்டது. இவைகள் ஏதும் இல்லாமலே மக்களிடத்தில் ஒரு நாடகத்தை
நிகழ்த்த முடியும் என்ற ஒரு புதுக் கொள்கையை வகுத்தவரே பாதல் சர்க்கார்.
வங்காளத்தைச் சேர்ந்த இவர் வீதி நாடகம் என்ற புது நாடக யுக்தி ஒன்றை
உருவாக்கினார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment