அறிவியல்
மூலம் நாம் பெறும் அறிவு நமக்குக் கூறுவது, ஏரணவியல் (logic) முறையில்
ஒன்று நிகழ்வதற்கு மற்றொன்று காரணம் என்ற அடிப்படை உண்மையை. நிகழ்வுகளின்
காரணம் யூகிக்கப்பட்டு, அந்தக் காரணம் நிகழ்வை ஏற்படுத்துகிறதா என்று பல
சோதனைகள் செய்யப்படுகிறது. அந்த நிகழ்வுகள் ஒவ்வொரு முறையும் அதன் காரணி
மூலம்தான் நிகழ்கிறது என்பது ஆய்வுகள் முறையில் உறுதிப்படுத்தப்பட்டு,
பின்னர் ஆய்வறிஞர் குழுவால் “இதற்குக் காரணம் இது என்பது சரியே” என உறுதிப்
படுத்தப்பட்ட பின்னர் அவற்றை அறிவியல் தரும் விதிகளாக உலகம்
ஒப்புக்கொள்கிறது. இந்த அறிவியல் விதிகளை முறியடிக்கும் மாற்றுவிளக்கம்
எழும்வரை இந்த விதிகளே ஒரு நிகழ்வுக்கு விளக்கம் தரப்
பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மரத்தில் உள்ள பழம் நிலத்தில்
விழுவதற்குக் காரணம் புவியின் புவிஈர்ப்புவிசை என்பது யாவரும் அறிந்த ஒரு
அறிவியல் விதியின் விளக்கம்.
அறிவியல்
பாடத்தில், குறிப்பாக இயற்பியலில் நாம் படித்த நியூட்டனின் விதிகள்,
கெப்ளரின் விதிகள், ஃபிளம்மிங்கின் விதிகள் போன்ற அடிப்படை அறிவியல்
விதிகள் யாவும் இவ்வாறு அறிவியல் சோதனைகள் மூலம் ஆராயப்பட்டு,
ஆதாரப்பூர்வமான முடிவுகளால் அறிவியல் விதிகள் என ஒப்புக்கொள்ளப்பட்டவை. இவை
அறிவியல் கோட்பாடுகளை காரண காரியத்துடன் ஏன் விளைவுகள் நிகழ்கின்றன எனத்
தெளிவாக விளக்குபவை. ஒவ்வொருமுறையும் இந்த விதிகள் கூறுவது போலவே
விளைவுகளும் மாறாது நிகழும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment