Thursday, 8 October 2015

இரண்டாம் உலகம்.., இந்தியாவிற்கு ஒரு வேண்டுகோள் (கவிதைகள்)

இரண்டாம் உலகம்..


irandaam ulagam1

கழனி செழிக்கக் கண்டேன்
கட்டிட மரங்கள் உயர்வால்!
ஆறு நிறையக் கண்டேன்
அள்ளிய மண் சுவடால்!
மேகம் நிறையக் கண்டேன்
நச்சுப் புகை கலப்பால்!
புவி புதையக் கண்டேன்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=18579

Wednesday, 7 October 2015

முதல் சுதந்திரப்போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-9

puli thevar4
கோட்டைச் சுவரை காத்து நின்ற மறவர் படை வீரர்கள் தங்கள் உயிரை நினைத்து அஞ்சாமல் போர் புரிந்தனர். வெள்ளையனின் பீரங்கி குண்டுகள் கோட்டைச் சுவரை துளைக்கும் போது ஏற்படும் ஓட்டையை, உடனுக்கு உடன் செப்பணிட்டு சுவரை சரி செய்தனர். சிலர் அச்சமயம் உடல் சிதறி இறந்தனர். சிலர் சுவரின் ஓட்டையை அடைக்க தங்கள் உடலைக் கொண்டு நின்றனர், அவர் இறந்ததும் மற்றொருவர் நிற்பார் இதுபோன்று கோட்டையைக் காத்து நின்றனர். இவர்களின் வீரத்தினைக் கண்டு வெள்ளையர்கள் நிலைகுலைந்தனர். பின்னர் புலித்தேவரை வெற்றிகொள்ள வேண்டுமெனில், அவரிடம் நட்புடன் இருக்கும் மற்ற பாளையங்களை வெற்றி பெற்று, பின்னர் இறுதியில் புலித்தேவரைத் தாக்க வெள்ளையர்கள் திட்டம் தீட்டினர்.
அதன்படி 1766ல் கொள்ளங்கொண்டான் பாளையத்தினைத் தாக்கி நீண்ட போருக்குப் பின் கோட்டையைக் கைப்பற்றினார்கள். பின் சேத்தூர் பாளையத்தினைத் தாக்கினார்கள், இந்தப் போரிலும் வெள்ளையர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கோட்டையைக் கைப்பற்றினார்கள். பின் 1767ம் ஆண்டில் நடைபெற்ற போர் புலித்தேவரின் இறுதிப்போர் எனக்கூறலாம். இந்த இறுதிப்போரில் வெள்ளையர்களின் படைக்குத் தளபதியாக இருந்தவன் டொனல்டு காம்பெல். இவன் பெரும் படையுடன் வந்து புலித்தேவர் கோட்டையைத் தாக்கினான். இந்த இறுதிப் போர் மிக நீண்ட நாட்கள் நடைபெற்றது. வெள்ளையர்கள் சக்தி வாய்ந்த பீரங்கிக் குண்டுகளை வீசியும், கோட்டைச் சுவரை ஒன்றும் செய்யமுடியாமல் திணறினர்.
pulithevar1
மறவர்கள், கோட்டைச் சுவரின் கொத்தளங்களில் இருந்து கொண்டு கோட்டையைக் காத்து நின்றார்கள். இந்தப் போரில் புலித்தேவரின் படைவீரர்கள் கோட்டைச் சுவரில் காத்து நின்றதை டொனல்டு காம்பெல் பிரிட்டனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது பின்வருமாறு. “இந்தக் கோட்டைச் சுவர் வெறும் களிமண்ணாலும், வைக்கோலாலும் சேர்த்து கட்டப்பட்ட சுவர். ஆனால் இந்த சுவரில் நமது சக்தி வாய்ந்த பீரங்கி குண்டுகளினால் கூட சிறு விரிசலோ, அதிர்வுகளோ உண்டு பண்ண முடியவில்லை. மிக வலிமை வாய்ந்ததாக இந்தக் கோட்டைச் சுவர் உள்ளது. நாம் பல நவீன ஆயுதங்கள் கொண்டு போர் செய்கிறோம். இந்த தமிழ் மறவர்கள் ஈட்டியை மட்டும் வைத்துக்கொண்டு போர் செய்கின்றார்கள். அதுவும் சுமார் 18 அடி நீளம் உள்ள இந்த ஈட்டியை இவர்கள் உபயோகிக்கும் லாவகம். இதைக் கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது. இவர்களது வீரம் உலகில் உள்ள எந்த போர்வீரர்களிடம் இருக்காது.


இவர்கள் கோட்டைச் சுவரில் சிறு வழி மட்டும் தான் உள்ளது. அந்த வழியாக கதவை உடைத்துத்தான் உள்ளே செல்ல வேண்டும். அவ்வாறு நாம் உள்ளே சென்றால் நமக்கு பல உயிர்பலி ஏற்படும். இந்தத் தமிழ் மறவர்கள் உயிரைப் பற்றி சிறிதும் அச்சம் அடையவில்லை. இவர்கள் கோட்டைச் சுவரில் துளை உண்டானது, உடனே அந்தத் துளை சரிசெய்யப்படுகிறது. வேறு இடத்தில் அது போன்ற துளையில் சிலர் தங்கள் உடலைக் கொண்டு அடைத்து நிற்கின்றனர். குண்டு வந்து வீழ்ந்ததும் உடல் சிதறுகிறது, பின்னர் மற்றொருவர் வந்து நிற்கிறார். இறந்த உடல்களை அவர்கள் அப்புறப்படுத்தவும் இல்லை. மனித உடல் இரத்தமும் சதையும் சிதறுவதைக் கண்டு அச்சம் கொள்ளவும் இல்லை. ஒருவர் பின் ஒருவராக இறந்தாலும் கவலை சிறிதும் இல்லை, இறந்த உடல்கள் மீது குண்டு வீழ்ந்து அந்த உடல் சிதறினாலும் அவர்கள் கவலை அடையவில்லை. இது போன்று கோட்டைச் சுவரை, உலகில் வேறு எந்த படையினரும் காத்து நின்றிருக்க மாட்டார்கள்”.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 6 October 2015

தற்காலக் கல்வி முறை – பகுதி 6

அரசின் கல்விக் கொள்கைகள் மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன. இதை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மூன்று தரப்பினருக்கு உள்ளது. முதலில் ஆசிரியர். அடுத்து பெற்றோர். மூன்றாவது மாணவர்.
tharkaala kalvi5
கல்வி கற்றதன் பயன் அதனை மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதே. எனவேதான் அன்ன சத்திரம் வைத்தலை விட, ஆலயம் கட்டுவதை விட மிகப் புண்ணியச் செயல் கல்லாத ஒருவனை கற்றவனாக்குவதே என்கிறார் பாரதியார். எழுத்தறிவித்தவனை இறைவன் என்கிறார்கள். எழுத்து ஒருவனை முன்னேற்ற உதவும் கருவி. இறைவனுக்கு முன் அனைவரும் சமம். சாதி, மதம் என்ற பாகுபாடு இறைவனுக்குக் கிடையாது. ஆசிரியரும் இதைக் கடந்தவராகத் திகழவேண்டும். மாணவர்களுக்கும் சாதி, மதம் என்ற பாகுபாட்டில் சிக்காமல் வாழ கற்றுத்தரல் வேண்டும். கல்வி கற்கும் இடத்தில் மனித உறவுகள் மலர்ந்து வளர்ந்து வலுவடைய வேண்டும். ஆசிரியர்கள் சக ஆசிரியர்களோடு இணக்கமான உறவுகளை வளர்க்கும் சூழலிலிருந்தால் மாணவர்களும் சமூகத்தில் அதைப் பேண கற்றுக் கொள்வர்.

ஆசிரியர்கள் நல்ல இணக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள பள்ளி சூழலோ, கல்லூரிச் சூழலோ சரியாக அமைய வேண்டும். ஆசிரியர் பாடம் சொல்லித் தருவது மட்டுமின்றி பிற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சிக்கு வழிவகை செய்வதற்கே பாடாய்பட வேண்டிய சூழ்நிலையில் அதிகாரிகள் தொடர்ச்சியாக புள்ளிவிவரங்களை கேட்கும் பொழுது அதில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். மீண்டும் மீண்டும் பல வகையான புள்ளி விவரங்களைக் கேட்கும் பொழுது, மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தைப் புள்ளி விவரங்கள் சேகரித்து உரிய வடிவத்தில் தருவதில் செலவிடுகின்றனர்.மேலும் இது போன்ற வேலைகளில்  நேரத்தைச் செலவிடுவதால் பாடம் நடத்துவதற்குரிய ஈடுபாட்டை இழக்கிறார்கள். சோர்வடைந்து விடுகிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 5 October 2015

இந்த பரிசோதனை செய்யாமல் சித்த மருத்துவம் செய்யமுடியாது

Dr.Jerome -FI
Tele medicine என்ற ஒன்று இப்போது காலத்தின் தேவையாகி வருகிறது. அதாவது காணொளி மருத்துவம். மருத்துவர் ஒரு இடத்தில் இருப்பார், நோயாளி வேறோர் இடத்தில் இருப்பார். காணொளி மூலமாக நோயாளியைப் பார்த்து அவர் கூறும் குறிகுணங்களைக் கேட்டு, அவரது ஆய்வக முடிவுகளைக் கேட்டு மருத்துவம் செய்வது.
இப்படி சித்த மருத்துவத்தை செய்யமுடியுமா? என யோசித்துப் பார்க்கிறேன்.
நோயாளி சொல்லும் குறிகுணங்களைக் கொண்டு நோயை கணிக்க முடியும் என்றாலும், மிகச் சரியான சிகிச்சை முறையை மற்றும் மருந்துகளை முடிவு செய்வதற்கு நோயாளியின் தேக நிலையை அறிவது அவசியம். அதாவது நோயாளி வாத உடலினரா அல்லது பித்த உடலினரா அல்லது கப உடலினரா அல்லது கலப்பு உடலினரா என்பதை தெரிந்த பிறகே பரிகார முறைகளையும், மருந்துகளையும் தீர்மானிக்க வேண்டும். இதனை அறிவதற்கு செய்ய வேண்டிய அடிப்படை பரிசோதனைதான் “நாடி”.
இந்த பரிசோதனையை செய்யாமல் சித்த மருத்துவம் செய்ய முடியாது, செய்யக்கூடாது.
sidda maruththuvam 1
“நாடி” பரிசோதனை அல்லது நாடியைப் பிடித்துப் பார்த்து நோயை கணிப்பது என்பதை சாதாரணமாக விளக்கிவிட முடியாது. ஆனாலும் அதைப் பற்றிய அறிமுகம் அனைவருக்கும் தேவை.

“நாடி” என்பதைப் பற்றி பேசாமல், சரியான சித்த மருத்துவ அறிமுகம் என்பதில் அர்த்தமில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday, 4 October 2015

சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் வின்சென்ட் அவர்களின் நேர்காணல்

Dr.S.Vincent
கேள்வி: உங்களைப் பற்றியான அறிமுகம்?
பதில்: தேனி மாவட்டத்தில் கம்பம் புதுப்பட்டிதான் நான் பிறந்த இடம். புதுப்பட்டிக்கு அருகாமையில் உள்ள ராயப்பன்பட்டியில்தான் படித்தேன். இந்த இரண்டு சூழலுமே ஒரு இயற்கையான சூழல் எப்பொழுதுமே. அப்படி ஒரு இடத்தில் பிறந்தேன். படித்தது ராயப்பன்பட்டி செயின்ட் அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி(St. Aloysius higher secondary school). பின் மதுரையில் யாதவா கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டப்படிப்பு படித்தேன். அதேமாதிரி முதுகலைப்படிப்பை பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில்(St.Xavier’s college) படித்தேன். ஆராய்ச்சிப் படிப்பை லயோலா கல்லூரியில் படித்தேன். பின் கல்லூரியின் விரிவாளராக லயோலா கல்லூரியில் சேர்ந்து என்னுடைய பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன்.
கேள்வி: இன்றுள்ள சுற்றுச்சூழல் எதுவாக இருக்கிறது, ஏன் இந்த சூழல்?
vincent nerkaanal1
பதில்: பொதுவாக இன்று சுற்றுச்சூழல் பற்றிய கவலை எல்லோருக்கும் அதிகமாக இருப்பதற்குக் காரணம், நாம் வாழ்கிற இடமே நம் சுற்றுச்சூழலைப் பொறுத்து அமைவதால்தான். ஏனென்றால் இன்று சுற்றுச்சூழல் நலமாக இருந்தால்தான் மனித வாழ்வும் நலமாக இருக்கும். இதைத்தாண்டி சுற்றுச்சூழலில் ஏற்படுகிற மாற்றம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் மிகவும் கொடியதாக இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் இன்று சுற்றுச்சூழல் மேல் உள்ள ஆர்வம், அதை பாதுகாக்கக்கூடிய ஆர்வம் மிகவும் மிகவும் குறைவு. ஏனென்றால் அதைப்பற்றியான முக்கியத்துவம் அதில் வாழ்கிற மனிதனுக்கும், மற்ற சூழலுக்கும் தெரிவதில்லை.

vincent nerkaanal2
அதனால்தான் இன்றைக்கு சுற்றுச்சூழல் பலவாறு அழிக்கப்பட்டு பெரிய ஆபத்தான ஒரு சூழலில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே இன்றைக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு முக்கியமான பொறுப்பாக ஒவ்வொரு மனிதனும் எடுத்துக்கொள்ளவேண்டும், ஒவ்வொரு நாடும் எடுத்துக்கொள்ளவேண்டும், இன்னும் ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும் என்றால் உலகமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிதர்சனமான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு உலகம் முழுவதும் பேசப்படுகிற உலக வெப்பமயமாக்கல் (Global warming) என்று சொல்லப்படுகிற ஒரு உலகப் பிரச்சனை பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், நம்முடைய சுற்றுச்சூழலை அழித்து, ஒழித்து, இன்றைக்கு அதை காயப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதுதான். அதனால்தான் இன்றைக்கு சுற்றுச்சூழல் மிகவும் சீர்கெட்டு இருக்கிறது. எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேலும் அதை வளப்படுத்துகிற ஒரு சூழலை நாம் செய்தால் ஒழிய நாம் வாழுகிற இந்த இடம் நமக்கு தகுதியான இடமாக இருக்காது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Friday, 2 October 2015

தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் – 2

சமூக சீர்திருத்தம் மட்டுமே பத்திரிக்கையின் குறிக்கோள்:
periyar2
ஒவ்வொரு வாரமும் 10,000 ‘குடிஅரசு’ பத்திரிகைகளை அச்சேற்றினாலும், வருவாய் கிடைக்கக் கூடிய விளம்பரங்களை அதிகம் வெளியிட பெரியார் அதிக ஆர்வம் காட்டியதில்லை. விளம்பரங்களுக்கு அதிக பக்கங்களை ஒதுக்கினால் கருத்துகளை அதிகம் சொல்ல இயலாது போகிறது என்பது பெரியாரின் கருத்து. அதிக பக்கங்களை விளம்பரத்திற்கு ஒதுக்க இயலாது என்ற தனது நிலையை வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் வெளிப்படையாகவே பத்திரிக்கை வாயிலாகக் குறித்து கீழ்வருமாறு அறிவிப்புச் செய்தி அனுப்புகிறார். __________“கொஞ்சநாளைக்கு ‘குடிஅரசு’ 16 பக்கத்துடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்றாலும் இதனால் வாசகர்களுக்கு அதிகமான குறை ஏற்படாதிருக்கும் பொருட்டு இப்போது விளம்பரத்திற்காக உபயோகப்படுத்தி வரும் சுமார் 7, 8 பக்கங்களை இனி 3 அல்லது 4 பக்கங்களுக்கு அதிகப்படாமல் செய்துவிட்டு, சற்றேறக்குறைய 12 அல்லது 13 பக்கங்களுக்கு குறையாத விஷயங்கள் வெளியாக்க உத்தேசித்திருக்கின்றோம். இதனால் ஒரு சமயம் விளம்பர வியாபாரிகளுக்கு சற்று அதிருப்தி இருக்கலாம்” __________ (குடி அரசு -23.12.1928), என்று தன்நிலை விளக்கம் அளித்துள்ளார்.
“சமதர்ம அறிக்கை”(Communist Manifesto)யின் முதல்பாகம் மொழிபெயர்க்கப்பட்டு, 1931 ஆண்டு, அக்டோபர் 4 ஆம் நாள் குடிஅரசில் தொடங்கி, அந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள்வரை தொடர்ந்து 5 இதழ்களில் வெளிவந்துள்ளது. இது போன்றே ‘ஜாதியொழிய வேண்டும்’ என்ற தலைப்பில் அறிஞர் அம்பேத்கர் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ‘சமதர்ம அறிக்கை’, ‘ஜாதியொழிய வேண்டும்’ இவையிரண்டும் இந்தியமொழிகளில் தமிழிலும், ஏடுகளில் ‘குடிஅரசி’லும் தான் முதலில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘ஒன்றே குலம்’ என்பதை வலியுறுத்த குடிஅரசு இதழைத் துவக்கிய பெரியாரிடம், நீதிக்கட்சி நடத்தி வந்த ‘திராவிடன்’ நாளேட்டை அவர்களால் நடத்த முடியாத நிலை ஏற்பட்ட பொழுது ‘திராவிடன்’ நாளேட்டை நடத்தும் பொறுப்பும் பெரியாரிடம் வந்து சேர்ந்தது.   கொள்கைகளின் படி ‘குடிஅரசு’ பத்திரிக்கை போலத்தான் அதே கொள்கையுடன் ‘திராவிடன்’ நாளேட்டையும் நடத்துவேன், ஒப்புக்கொள்ளாவிட்டால் ஒத்துழைக்காமல் விலகிவிடுவேன் என உறுதியாக அறிவித்துவிட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் பெரியார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Thursday, 1 October 2015

ஆபாசப்படங்களும், அத்துமீறும் அரசும்

aabaasa inayathalam3
கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆபாச இணையதளங்களை மத்திய அரசு தடைசெய்த நிகழ்வு பலதரப்பிலும் பரந்துபட்டு விவாதிக்கப்பட்டது. ஆபாச தளங்களை ஒழிப்பதன் மூலம், பாலியல் ரீதியிலான குற்றங்கள் குறையும் என்பது அரசின் வாதம். சீப்பை ஒளித்துவைத்துவிட்டு திருமணத்தை நிறுத்த திட்டம் போட்ட ‘போண்டா’ மணியே கூட, அரசின் இந்த வாதத்தை கேட்டு கொல்லென சிரிப்பார்.
ஒரு உடலுறவு காட்சியை கணினியின் திரையில் பார்ப்பதன் மூலம்தான் பாலியல் குற்றங்கள் நிகழ்வதாக அரசு நினைத்தால், அதைவிட அடிமுட்டாள்தனமான கற்பனை இருந்திடவே முடியாது. “ஆபாச தளங்கள் இருப்பது தவறில்லை” என்ற எனது வாதத்தை முன்வைப்பதற்கு முன்பு ஒருசில விளக்கங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சம்மந்தப்பட்ட இருவரின் ஒப்புதலோடு படமாக எடுக்கப்பட்டு, அதனை “அடல்ட் கன்டன்ட் வார்னிங்” போட்டு இணையத்தில் பதிவேற்றப்படும் உடலுறவு காட்சிகள் அடங்கிய காணொளிகளை மட்டும்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேன், நியாயப்படுத்துகிறேன். மற்றபடி 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களையோ, சம்மந்தப்பட்ட இருவர் அறியாத வண்ணம் மறைந்திருந்து எடுக்கப்படும் உடலுறவு காட்சிகளையோ, வன்புணர்வுகளையோ எந்த தருணத்திலும் நான் நியாயப்படுத்தவில்லை. நிச்சயமாக அப்படிப்பட்ட குற்றங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை, தடுக்கப்பட வேண்டியவையே.
ஆபாச தளங்கள் இருக்கக்கூடாது, பாலியல் கல்வி பற்றி பேசவேக்கூடாது. ஆனால் பாலியல் குற்றங்கள் மட்டும் குறைய வேண்டும் என்று நினைப்பது, ஓட்டைப்பானையில் நீர் நிரப்புவது போலத்தான். முதலில் இந்த “ஆபாசம்” என்ற வார்த்தையிலேயே எனக்கு உடன்பாடு கிடையாது. சாதிக்காக செய்யப்படும் கொலைகளை “கௌரவக்கொலை”ன்னு மடத்தனமாக சொல்வதைப்போல, இப்படி பாலுணர்ச்சிகளை உந்தும் படங்களை ஆபாசப்படங்கள் என்று வரையறுப்பதும்  ஏற்கத்தக்க விஷயமல்ல. உடலின் பசியை ஆபாசம் என்றா சொல்கிறோம்?, அதைப்போலத்தான் இதுவும் ஒரு மனிதனின் இயல்பான உணர்வுப்பசி.

domesticviolence5
பாலியல் உள்ளடக்கம் கொண்ட தளங்களை இந்த அரசு தடை செய்ததற்கு காரணமாக, பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதை குறிப்பிடுகிறார்கள் கலாச்சாரவாதிகள். அப்படியானால் இணையதளங்கள் வருகைக்கு முன்பு நம்ம நாடு பாலியல் குற்றங்கள் நிகழாத நாடாக இருந்ததா என்ன?. பாலியல் குற்றங்களுக்கும், இத்தகைய பாலியல் உள்ளடக்க படங்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாலியல் குற்றங்களை குறைப்பதற்கு ஒருவகையில் இந்த தளங்கள் மறைமுக வழிவகுக்கிறதென கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான நேரங்களில் ஒரு மனிதனின் காமப்பசிக்கு வடிகால் கிடைக்காதபோதுதான், இதைப்போல குற்றங்கள் அதிகம் நிகழ்கிறது. இத்தகைய காணொளிகள் நிறைந்த தளங்கள், அந்த மனிதனின் அப்போதைய தேடலுக்கு வடிகாலாக அமைகிறது. சுருக்கமாக சொல்வதானால், “ஐந்து நிமிடங்கள் திரைக்காட்சியை பார்த்துவிட்டு, ஆறாவது நிமிடம் சுய இன்பம் செய்துகொள்வதோடு” அந்த காமப்பசி முற்றுப்பெறுகிறது. இதன்மூலம் தனி மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ என்ன இழுக்கு வந்துவிட்டது?. யாரையும் வன்புணர்ச்சி செய்யவில்லை, குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை, கருத்தரிக்கக்கூட வாய்ப்பில்லாத வகையிலான இந்த வடிகால் தவறானது என்று எப்படி சொல்வீர்கள்?.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.