கேள்வி: உங்களைப் பற்றியான அறிமுகம்?
பதில்: தேனி
மாவட்டத்தில் கம்பம் புதுப்பட்டிதான் நான் பிறந்த இடம். புதுப்பட்டிக்கு
அருகாமையில் உள்ள ராயப்பன்பட்டியில்தான் படித்தேன். இந்த இரண்டு சூழலுமே
ஒரு இயற்கையான சூழல் எப்பொழுதுமே. அப்படி ஒரு இடத்தில் பிறந்தேன். படித்தது
ராயப்பன்பட்டி செயின்ட் அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி(St. Aloysius higher
secondary school). பின் மதுரையில் யாதவா கல்லூரியில் விலங்கியல் துறையில்
பட்டப்படிப்பு படித்தேன். அதேமாதிரி முதுகலைப்படிப்பை பாளையங்கோட்டை
செயின்ட் சேவியர் கல்லூரியில்(St.Xavier’s college) படித்தேன். ஆராய்ச்சிப்
படிப்பை லயோலா கல்லூரியில் படித்தேன். பின் கல்லூரியின் விரிவாளராக லயோலா
கல்லூரியில் சேர்ந்து என்னுடைய பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன்.
கேள்வி: இன்றுள்ள சுற்றுச்சூழல் எதுவாக இருக்கிறது, ஏன் இந்த சூழல்?
பதில்:
பொதுவாக இன்று சுற்றுச்சூழல் பற்றிய கவலை எல்லோருக்கும் அதிகமாக
இருப்பதற்குக் காரணம், நாம் வாழ்கிற இடமே நம் சுற்றுச்சூழலைப் பொறுத்து
அமைவதால்தான். ஏனென்றால் இன்று சுற்றுச்சூழல் நலமாக இருந்தால்தான் மனித
வாழ்வும் நலமாக இருக்கும். இதைத்தாண்டி சுற்றுச்சூழலில் ஏற்படுகிற மாற்றம்
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் மிகவும் கொடியதாக
இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் இன்று சுற்றுச்சூழல் மேல்
உள்ள ஆர்வம், அதை பாதுகாக்கக்கூடிய ஆர்வம் மிகவும் மிகவும் குறைவு.
ஏனென்றால் அதைப்பற்றியான முக்கியத்துவம் அதில் வாழ்கிற மனிதனுக்கும், மற்ற
சூழலுக்கும் தெரிவதில்லை.
அதனால்தான்
இன்றைக்கு சுற்றுச்சூழல் பலவாறு அழிக்கப்பட்டு பெரிய ஆபத்தான ஒரு சூழலில்
இருந்து கொண்டிருக்கிறது. எனவே இன்றைக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு
முக்கியமான பொறுப்பாக ஒவ்வொரு மனிதனும் எடுத்துக்கொள்ளவேண்டும், ஒவ்வொரு
நாடும் எடுத்துக்கொள்ளவேண்டும், இன்னும் ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும்
என்றால் உலகமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிதர்சனமான சூழல்
நிலவிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு உலகம் முழுவதும் பேசப்படுகிற
உலக வெப்பமயமாக்கல் (Global warming) என்று சொல்லப்படுகிற ஒரு உலகப்
பிரச்சனை பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறது.
அதற்குக் காரணம், நம்முடைய சுற்றுச்சூழலை அழித்து, ஒழித்து, இன்றைக்கு அதை
காயப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதுதான். அதனால்தான் இன்றைக்கு
சுற்றுச்சூழல் மிகவும் சீர்கெட்டு இருக்கிறது. எனவே சுற்றுச்சூழலைப்
பாதுகாத்து மேலும் அதை வளப்படுத்துகிற ஒரு சூழலை நாம் செய்தால் ஒழிய நாம்
வாழுகிற இந்த இடம் நமக்கு தகுதியான இடமாக இருக்காது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment