கடந்த
மாதத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆபாச இணையதளங்களை மத்திய அரசு தடைசெய்த
நிகழ்வு பலதரப்பிலும் பரந்துபட்டு விவாதிக்கப்பட்டது. ஆபாச தளங்களை
ஒழிப்பதன் மூலம், பாலியல் ரீதியிலான குற்றங்கள் குறையும் என்பது அரசின்
வாதம். சீப்பை ஒளித்துவைத்துவிட்டு திருமணத்தை நிறுத்த திட்டம் போட்ட
‘போண்டா’ மணியே கூட, அரசின் இந்த வாதத்தை கேட்டு கொல்லென சிரிப்பார்.
ஒரு உடலுறவு காட்சியை கணினியின் திரையில் பார்ப்பதன் மூலம்தான் பாலியல் குற்றங்கள் நிகழ்வதாக அரசு நினைத்தால், அதைவிட அடிமுட்டாள்தனமான கற்பனை இருந்திடவே முடியாது. “ஆபாச தளங்கள் இருப்பது தவறில்லை” என்ற எனது வாதத்தை முன்வைப்பதற்கு முன்பு ஒருசில விளக்கங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சம்மந்தப்பட்ட இருவரின் ஒப்புதலோடு படமாக எடுக்கப்பட்டு, அதனை “அடல்ட் கன்டன்ட் வார்னிங்” போட்டு இணையத்தில் பதிவேற்றப்படும் உடலுறவு காட்சிகள் அடங்கிய காணொளிகளை மட்டும்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேன், நியாயப்படுத்துகிறேன். மற்றபடி 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களையோ, சம்மந்தப்பட்ட இருவர் அறியாத வண்ணம் மறைந்திருந்து எடுக்கப்படும் உடலுறவு காட்சிகளையோ, வன்புணர்வுகளையோ எந்த தருணத்திலும் நான் நியாயப்படுத்தவில்லை. நிச்சயமாக அப்படிப்பட்ட குற்றங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை, தடுக்கப்பட வேண்டியவையே.

ஆபாச தளங்கள் இருக்கக்கூடாது, பாலியல்
கல்வி பற்றி பேசவேக்கூடாது. ஆனால் பாலியல் குற்றங்கள் மட்டும் குறைய
வேண்டும் என்று நினைப்பது, ஓட்டைப்பானையில் நீர் நிரப்புவது போலத்தான்.
முதலில் இந்த “ஆபாசம்” என்ற வார்த்தையிலேயே எனக்கு உடன்பாடு கிடையாது.
சாதிக்காக செய்யப்படும் கொலைகளை “கௌரவக்கொலை”ன்னு மடத்தனமாக சொல்வதைப்போல,
இப்படி பாலுணர்ச்சிகளை உந்தும் படங்களை ஆபாசப்படங்கள் என்று வரையறுப்பதும்
ஏற்கத்தக்க விஷயமல்ல. உடலின் பசியை ஆபாசம் என்றா சொல்கிறோம்?,
அதைப்போலத்தான் இதுவும் ஒரு மனிதனின் இயல்பான உணர்வுப்பசி.
பாலியல்
உள்ளடக்கம் கொண்ட தளங்களை இந்த அரசு தடை செய்ததற்கு காரணமாக, பாலியல்
குற்றங்கள் அதிகரித்திருப்பதை குறிப்பிடுகிறார்கள் கலாச்சாரவாதிகள்.
அப்படியானால் இணையதளங்கள் வருகைக்கு முன்பு நம்ம நாடு பாலியல் குற்றங்கள்
நிகழாத நாடாக இருந்ததா என்ன?. பாலியல் குற்றங்களுக்கும், இத்தகைய பாலியல்
உள்ளடக்க படங்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று ஆய்வுகள்
தெரிவிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாலியல் குற்றங்களை குறைப்பதற்கு
ஒருவகையில் இந்த தளங்கள் மறைமுக வழிவகுக்கிறதென கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான நேரங்களில் ஒரு மனிதனின் காமப்பசிக்கு வடிகால்
கிடைக்காதபோதுதான், இதைப்போல குற்றங்கள் அதிகம் நிகழ்கிறது. இத்தகைய
காணொளிகள் நிறைந்த தளங்கள், அந்த மனிதனின் அப்போதைய தேடலுக்கு வடிகாலாக
அமைகிறது. சுருக்கமாக சொல்வதானால், “ஐந்து நிமிடங்கள் திரைக்காட்சியை
பார்த்துவிட்டு, ஆறாவது நிமிடம் சுய இன்பம் செய்துகொள்வதோடு” அந்த காமப்பசி
முற்றுப்பெறுகிறது. இதன்மூலம் தனி மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ என்ன
இழுக்கு வந்துவிட்டது?. யாரையும் வன்புணர்ச்சி செய்யவில்லை, குழந்தைகளை
பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை, கருத்தரிக்கக்கூட வாய்ப்பில்லாத
வகையிலான இந்த வடிகால் தவறானது என்று எப்படி சொல்வீர்கள்?.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment