Tuesday, 27 March 2018

ராமராஜ்ஜிய ரதயாத்திரையும், தமிழக அரசின் 144 தடையுத்தரவும்.!


Siragu ramrajyarathayatrai1

கடந்த மாதம்,  உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து ராமராஜ்ஜிய ரதம் என்ற ஒன்று கிளம்பி, கர்நாடகா வழியாக தென்னிந்தியாவிற்குள்  நுழைந்து,  கேரளா வழியாக, இரு தினங்களுக்கு முன், தமிழ்நாட்டிற்குள் வந்ததும், அதனைத் தொடர்ந்து நம் மாநிலத்தில் நடந்த போராட்டங்களும், கைதுகளும், சிலை உடைப்பு சம்பவங்கள் போன்றவைகளும் நடந்தேறியிருக்கின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.  இந்த ரதயாத்திரையின் நோக்கம் ராமராஜ்ஜியம் அமைப்பது, ராமர் கோவில் கட்டுவோம்  என்பதாகும். அயோத்தியில், 400 ஆண்டுகள் பழைமையான பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து நடந்த மதக்கலவரங்களும், முன்னாள் மத்திய அமைச்சர் அத்வானி அவர்களின் ராமராஜ்ஜிய ரதயாத்திரை ஏற்படுத்திய விளைவுகளும் நாடறிந்த செய்தியாகும். உண்மை இப்படியிருக்கையில், இப்போது, மறுபடியும், விஸ்வ இந்து பரிஷத் என்ற இந்துத்துவ அமைப்பு, இந்த ரதயாத்திரை என்ற ஒரு விசயத்தை கையில் எடுத்துக்கொண்டு ஐந்து மாநிலங்கள் வழியாக உலா வருகிறோம் என்ற பெயரில் நாட்டில் மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

இந்த ரதயாத்திரை என்பது தேவையில்லாத ஒன்று. இன்னமும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் முடிவடையாத நிலையில், ராமர் கோவில் கட்டுவோம் என்பது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. பல இனங்கள், கலாச்சாரங்கள், பல மொழிகள் பேசும் மக்கள் என  பன்முகத்தன்மையுள்ள நாடு. அப்படியிருக்கையில், ஒரு மதத்தை சார்ந்து ஆட்சி அமைப்போம் என்று சொல்வது நேர்மையாகுமா.? வடஇந்தியாவில், மதத்தை வைத்து அரசியல் செய்து, வெற்றி பெற்ற பா.ச.க அரசு, இங்கும் அதே யுக்தியை கையாளப்பார்க்கிறது என்பது தானே உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/

Wednesday, 21 March 2018

நீத்தார் பெருமை (கவிதை)


மாட்சிமை தங்கிய மகளிருக்கு
உலக மகளிர்தின வாழ்த்துகள்!
Siragu penniyam1

செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்(?!)
செயற்கரிய செய்கலா தார்

என்னே ஒரு பொருத்தம்?
மகளிரின் நன்நாளில்
மகளிருக்கு மாண்பு செய்த
மகத்துவரே பேசுபொருள்!

சமூகம் விழித்தெழ
சமத்துவம் மேலோங்க
சுயம்புகள் சுடர்விட
நயம்பல செய்ததொரு



பெருமகன் பெரியார்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Tuesday, 20 March 2018

எதிர் வீடு (சிறுகதை)


Siragu Autism1

அதிகாலை நேரம். இருள் நீங்கி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை, கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் வேதகோஷ்டிகளின் இனிமையான சப்தம் என்னை எழுப்பி விட்டது. என் கணவர் பக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். இடியே விழுந்தாலும் கலையாத கும்பகர்ணன் தூக்கம். நான் அவருக்கு நேர் எதிர். சிறு ஓசை கேட்டாலும் எழுந்து விடுவேன்.

வாசல் கதவைத் திறந்து பார்த்தேன். எதிர் வீட்டில் நான்கு சாஸ்திரிகள் வேத பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். வாசலில் பெரிய கோலம் போட்டு செம்மண் செவ்வனே போடப்பட்டிருந்தது. வீட்டைப் புதியதாக வாங்கியவர்கள் அதைப் புதுப்பித்து ஹோமம் செய்கிறார்கள். அன்று எதிர்வீடு மிகவும் கோலாகலமாயிருந்தது.


நாங்கள் குடியிருக்கும் ”அபிநயா ஃபிளாட்ஸ்” கோடம்பாக்கத்தில் இருக்கிறது. கீழே நான்கு வீடுகள். முதல் மாடியில் நான்கு, இரண்டாவது மாடியில் நான்கு ஆக மொத்தம் பன்னிரண்டு வீடுகள் இருக்கும். குடியிருப்புக்குள் நுழைந்ததும் இடது பக்கம் இரண்டு திண்ணைகள் இருக்கும். காலை பத்து மணிக்கு அந்தத் திண்ணையில் குடியிருப்பிலுள்ள வேலைக்குப் போகாத பெண்கள் அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்துவார்கள். வயதான முதியவர்கள் மாலை நேரத்தில் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். நான் கீழே குடியிருக்கிறேன். முதல் மாடியில் பட்டாபி சாஸ்திரிகள் அவர் மனைவி பத்மா, குழந்தை காஞ்சனா ஆக மூன்று பேர் கொண்ட குடும்பம் இருக்கிறது. என் எதிர் வீடு நிறைய நாளாய் பூட்டியிருந்தது. போன மாதம்தான் விற்றுப் போனது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 19 March 2018

பெண்களுக்கான அறிவுரைகள்


Siragu pengalukkaana2

யுனிசெஃப் (United Nations Children’s Fund or UNICEF) அல்லது “ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்” எனப்படும் பன்னாட்டுச் சிறுவர்களின் நலவாழ்வில் அக்கறை கொண்ட அமைப்பானது, இணையவெளியில் ஒவ்வொரு நாளும் 175,000 சிறுவர்கள் பயனர்களாக நுழைகிறார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பான நடவடிக்கையில் மக்கள் செயல்பட வேண்டும் என்னும் நோக்கில் “பகிரும் முன் சிந்தியுங்கள்” (Think before you send – https://youtu.be/ObHyjhS4BZw) என்ற ஒரு காணொளி தயாரித்துச் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் (டிசம்பர் 11, 2017 அன்று) யூடியூப் வழியாக வெளியிட்டது. இது நாள் வரை அதைப் பார்த்தோரின் எண்ணிக்கை சுமார் 3,000 சொச்சம். அதாவது மாதமொன்றுக்குச் சராசரியாக 1,000 பார்வையாளர்கள் என்ற நிலையில் அது பரவியுள்ளது என்று தெரிகிறது.


“காலா” என்ற ரஜினிகாந்த் நடித்து வரவிருக்கும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான விளம்பரக் காணொளி 10 நாட்களுக்குள் 2 கோடி (20 million) தமிழர்களால் மட்டுமே பார்க்கப்பட்டுவிட்ட சாதனையின் அருகே, உலக அளவு பார்வையாளர்களை சென்றடைய விரும்பும் யுனிசெஃப் காணொளியின் சாதனை கிட்டே கூட நிற்கத் தகுதியில்லை. அந்த அளவு இணையத்தைப் பயன்படுத்துவோர் பொறுப்புணர்வு கொண்டவராக உள்ளனர். உலகில் இதுநாள் வரை வாழ்ந்துவரும் மக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவராக இக்கால இளையதலைமுறையினர் உள்ளனர். அவர்களுக்கு இணையம் பல அறிவார்ந்த செய்திகளைத் தருவதுடன் ஆபத்தான வாழ்க்கையையும் அவர்கள் அறியாமலே எதிர்நோக்க வைக்கிறது என்ற அக்கறையில் தயாரிக்கப்பட்ட யுனிசெஃப்  காணொளி, ஒரு செய்தியைப் பகிரும்முன் அதன் விளைவைச் சிந்திக்கச் சொல்கிறது. ஒருவரைப் பற்றி உண்மையா பொய்யா எனத் தெரியாத தகவலை அதே நொடிப்பொழுதில் முடிவெடுத்துப் பரப்பிவிட்டால் பாதிக்கப்படுபவர் உயிரையும் இழக்க நேரும் என்று காட்ட முற்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 15 March 2018

புரட்சி எங்கும்!, தீயின் சிறகொன்று (கவிதை)

புரட்சி எங்கும்!

siragu periyaar1

சிலைத கர்ப்பு செய்தார் பகைவர்
செயல்ப டும்காலம் இதுவென காட்டினார்
திரிபுரா மராட்டா கேரள வங்கம்
தென்தமிழ் நாடென எங்கும் புரட்சி!
பொதுவுடமை சிலைதனை தகர்த்தார் மக்கள்
பொறுமை இழந்ததனை கண்டோம்! லெனின்
புகட்டிய பொதுவுடமை தீயாய் பரவியது!

பகுத்தறிவு மேதை பெரியார் சிலைதனை
பகைகொண்டு சிதைத்தார் சாதி மக்களின்
பகையென உணர்ந்தார் புரட்சி பரவியது!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/

Wednesday, 14 March 2018

பூ (சிறுகதை)


siragu poo1


ஒருகாட்டில் செடி ஒன்று இருந்தது. அதில் சிறிதும் பெரிதுமாய் நிறையப் பூக்கள் இருந்தன. சிறிய கருவண்டு ஒன்று தேனுக்காக அந்தச் செடியைச் சுற்றிவந்தது. அப்போது பூ ஒன்று மிகுந்த வாட்டத்துடன் இருப்பதை அது பார்த்தது. வண்டு அந்தப் பூவிடம் “நீ ஏன் வாட்டமா இருக்க?”– என்று கேட்டது. அதற்கு அந்தப்பூ “பூக்களின் தோற்றம் வளர்ச்சில ஏழு நிலைகள் உண்டு! அதை நீ தெரிஞ்சுக்கிட்டாத்தான் என்னோட இந்த வாட்டத்துக்கான காரணத்தை உன்னால புரிஞ்சுக்க முடியும்!”– என்றது.
“பூக்களின் வளர்ச்சில ஏழு நிலைகளா? கொஞ்சம் சொல்ல முடியுமா?”- ஆர்வத்துடன் கேட்டது வண்டு.
“சொல்றேன்! ஒரு பூ முதன்முதலா செடில உருவாகுறத அரும்புன்னு சொல்வாங்க! ‘அரும்பு’ பூக்களின் முதல்நிலை!”– என்றது பூ.

“நீ முதன்முதலா செடில உருவான அந்தத் தருணம் எப்படி இருந்துச்சு?”–கேட்டது கருவண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 13 March 2018

உலக மகளிர் தினத்தில் அறிந்து கொள்வோம் – இராவண லீலாவின் புரட்சித்தலைவியை !!


siragu maniammai1


பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு, மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.
ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது. அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.