Thursday, 27 August 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-3

puli thevar10
புலித்தேவர் கோட்டையை தகர்க்க முடியாமல் தோல்வி அடைந்து திருச்சி திரும்பிய ஆங்கிலப்படைத் தளபதி கெரான் மற்றும் நவாப்பின் படையினர் அவமானத்தின் உச்சிக்கே சென்றனர். புலித்தேவரின் கோட்டையில் சிறு விரிசலைக் கூட ஆங்கிலேயரின் பீரங்கி குண்டுகள் ஏற்படுத்த முடியவில்லை. அவரின் கோட்டை மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. புலித்தேவர் கோட்டையை பனை ஓலை, பனை நார், சுண்ணாம்பு, வரகு, குதிரை வாலி, கடுக்காய், பதநீர், முட்டை, பெரிய சிறிய கூழாங்கற்கள், கருப்பட்டி, தானியங்களின் வைக்கோல்கள், கம்பப் பசை மற்றும் பல்வேறு பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டது. அந்நாட்களில் நமது தமிழ் மன்னர்கள் கோட்டைகளை இம்முறையிலேயே கட்டினார்கள். எனவே தான் அந்நியனின் பீரங்கிக் குண்டுகளினாலும் சேதம் அடையாமல் நமது மன்னர்களின் வீரநெஞ்சம் போன்று, கோட்டை சுவரும் கம்பீரமாக நின்றது.
புலித்தேவர் அந்நியர்களை விரட்டி அடித்த செய்தி தென்னகம் எங்கும் காட்டுத் தீ போன்று பரவியது. புலித்தேவரின் புகழ் மற்ற பாளையங்களிலும் உயர்ந்தது. புலித்தேவர், மறவர் பாளையங்கள் அனைத்தையும் ஒரு அணியில் சேர்த்து, அந்நியர்களை நம் மண்ணில் இருந்து விரட்ட திட்டமிட்டார். தமது நெற்கட்டான் செவ்வல் கோட்டையை மேலும் வலிமை உடையதாக மாற்றினார். மேலும் ஊத்துமலை, பனையூர், வாசுதேவநல்லூர், கொல்லங்கொண்டான், களக்காடு போன்ற இடங்களில் கோட்டையைக் கட்டினார். இதில் களக்காடு இயற்கை பாதுகாப்பைக் கொண்டது, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்தது, இதன் அருகில் பேயாறு ஓடியது. கோட்டையின் அருகில் இருந்த அடர்ந்த காடுகளைத் தாண்டி கோட்டையை நெருங்குவது என்பது, அந்நியர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday, 26 August 2015

அலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பிடலாமா?

siddha1

அலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பிடலாமா? அல்லது சித்த மருந்து சாப்பிடும்போது அலோபதி மருந்து சாப்பிடலாமா? என்ற கேள்விகள் பலர் மனதில் இருக்கிறது.
கிட்டத்தட்ட எல்லா நோயாளிகளும் இந்தக் கேள்வியைக் கேட்டுவிடுவார்கள்.
ஏதேனும் ஒரு பிரச்சனைக்கு சித்த மருத்துவமே நல்லது என தெரிந்ததும் சித்த மருத்துவம் எடுக்க முடிவெடுப்பர். ஆனால் அவர்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் ஒரு பிரச்சனைக்காக அலோபதி மருத்துவம் சாப்பிட்டுக் கொண்டிருப்பர். அப்படிப்பட்ட நிலையில் இதோடு அதையும் சேர்த்து சாப்பிடலாமா என்ற குழப்பம் சிலருக்கு வருகிறது. இருவேறு மருத்துவ முறைகளை ஒரே நேரத்தில் சாப்பிடலாமா? அதனால் எதுவும் பிரச்சனைகள் வருமா என்பது இவர்கள் சந்தேகம்.
அதேபோல என்னிடம் சித்த மருத்துவம் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளும் “டாக்டர் இந்த மருந்து சாப்பிடும் போது திடீரென அவசரத்திற்கு அலோபதி மருந்து ஏதேனும் சாப்பிட வேண்டியதிருந்தால் சாப்பிடலாமா?” என கேட்பார்கள்.

-  இது நியாயமான சந்தேகம்தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 25 August 2015

அமெரிக்காவில் யோகா

Finding peace by the waters
இந்திய அரசின் முயற்சியால், குறிப்பாக பிரதமர் மோதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் “அனைத்துலக யோகா நாளாக” ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐ. நா. சபை அறிவித்துள்ளது. தொடர்ந்து, ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்த இந்திய அரசு, ஜூன் 21, 2015 அன்று முதல் அனைத்துலக யோகா நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களது தலைமை டெல்லியில் கொண்டாடியது. இந்நிலையில் அமெரிக்காவில் யோகாவின் பரவலைப்பற்றிய ஆய்வறிக்கை ஒன்றும் சென்ற மாதம் வெளியானது.
yoga4
டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் (Dun & Bradstreet) என்ற அமெரிக்க வணிக சேவை நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வணிகநிறுவனங்களைப் பற்றிய தரவுகளை சேகரித்து, அந்த நிறுவனங்களின் நிர்வாகத் தொடர்பு, நிதிநிலை போன்ற முக்கியமான தகவல்களை கட்டண அடிப்படையில் தேவையானோருக்கு வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்த ‘டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட்’ நிறுவனம், அமெரிக்காவில் தொழில் நடத்திவரும் யோகா மற்றும் தியான நிறுவனங்களையும் (yoga and meditation centers); “குத்தூசி மருத்துவம்” என அழைக்கப்படும் சீனாவின் பாரம்பரிய மாற்றுமுறை மருத்துவ (ancient chinese acupuncture medical practice – alternative medicine) நிறுவனங்களையும் பற்றி ஆராய்ந்தது. ஒவ்வொரு அமெரிக்க நகரிலும் 10,000 பேருக்கு, இது போன்ற எத்தனை நிறுவனங்கள் சேவைபுரிகின்றன என்ற தகவலைக் கொண்டு “சென்டெக்ஸ்” (Zen-dex) என்ற குறியீட்டை உருவாக்கி, சீன நாட்டில் தோன்றிய மகாயான புத்தமதத்தின் பிரிவான ‘சென்’ பிரிவின் அடிப்படையில் அக்குறியீட்டிற்குப் பெயரிட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 24 August 2015

தற்காலக் கல்விமுறை

tharkaalak kalvi murai2
கல்வி என்பது இருளிலிருந்து ஒளியை நோக்கிய ஒரு பயணம். அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய முன்னேற்றம். இன்றைக்குக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை பெருகிப் போயிருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா? கற்றவர்களின் அறியாமை முற்றிலும் விலகியிருக்கிறதா? என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. என் உறவினர் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். அவர்களின் மகன் நான்காம் வகுப்புப் படிக்கிறான். அவனுக்குக் கோள்கள் குறித்து ஒரு பாடம். பாடப்புத்தகத்தில் அதை ஒட்டி ஒரு படம். ஆங்காங்கே தொலைவில் நட்சத்திரங்கள் இருக்க , சில கிரகங்கள் மட்டும் இருப்பதைப் போன்ற படம். அவனுடைய வகுப்பு ஆசிரியை பெரிய பேப்பரில் பெரிதாக அதைப் போல வரைந்து வரும் படி வீட்டுப் பயிற்சி கொடுத்திருக்கிறார். தொலைக்காட்சிகளில் பென்10, ஏலியன் போர்ஸ், மார்ஸ் உள்ளிட்ட சிறுவர் நிகழ்ச்சிகளைப் பார்த்து ‘ஏலியன்’ குறித்துக் கற்பனையை வளர்த்துக் கொண்டிருந்த சிறுவன், தன் கற்பனைச் சிறகை விரித்து வரைந்திருக்கிறான். பெரிய நீலவண்ண தாளில் சில கிரகங்கள், செயற்கைக்கோள், பறக்கும் தட்டு, தலையில் ஆன்டனா உள்ள பெரிய கண்களுடைய வினோத ஏலியன், பூமி, செவ்வாய், சனிக்கிரகம், இரண்டு நிலவுள்ள புதுக்கிரகம் இப்படியாக இரவு முழுவதும் வரைந்து வண்ணம் தீட்டியிருக்கிறான். அவனுடைய பெற்றோர் அவனை மிகவும் பாராட்டி ஆசிரியரின் பாராட்டும் கிடைக்கும் என நம்பிக்கையூட்டியிருக்கிறார்கள். மாலையில் வந்த பையன் முகத்தில் மிகுந்த அவமான உணர்வு. எதையும் சொல்லவில்லை. எதைக் கேட்டாலும் பதிலில்லை. கவலை தோய்ந்த முகத்துடன் உண்ணாமல் உறங்கி விட்டான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday, 19 August 2015

இருமலை குணப்படுத்த குறிப்புகள்

irumal1


  • சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு, இருமல் குணமாகும்.

  • மிளகை தூள் செய்து, சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட, சூட்டினால் உண்டாகும் இருமல் குணமாகும்.

  • விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இருமல் குணமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 18 August 2015

குற்றாலத்தில் மூலிகை செடிகளை வளர்த்து பராமரித்து வரும் இத்தாலிய பெண்மணி!

mooligai thottam fi
களை கட்டும் குற்றாலம் பகுதி, சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரம், ஆர்ப்பரிக்கும் அருவிகள், மந்திக் கூட்டங்களின் சலசலப்பு, சாரல் மழை.. என பரபரப்பாகக் காணப்பட்ட குற்றாலத்தில், சுகந்த மணம் பரப்பிய ஒரு மூலிகைத் தோட்டத்தில் வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவரைக் கண்டோம். ‘யார் அவர்’ என்ற ஆர்வத்தோடு அருகே சென்றோம். அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேகி. குற்றாலத்தில் மூலிகைத் தோட்டம் அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்களை வளர்த்து பராமரித்து வருகிறார். அவருடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப்பற்றி?

மேகி: இத்தாலி நாட்டிலுள்ள வரிஸி நகரம் தான் எனது சொந்த ஊர். கடந்த 20 ஆண்டுகளாக குற்றாலத்தில் வசித்து வருகிறேன். கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை. இயற்கை தான் என் குடும்பம்; என் உறவு..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 17 August 2015

மருத்துவம் செய்ய வேண்டியது நோய்க்கு அல்ல, நோயாளிக்கே

Dr.Jerome
இன்றும்கூட நம்நாடு முழு படிப்பறிவை எட்டிய நாடு அல்ல. எல்லாத் துறைகளிலும் அறியாமை நமக்கு இருந்தாலும் கூட, மருத்துவ துறையில் பொதுமக்களுக்கு தற்குறித்தனம் அதிகமாகவே உள்ளது.
பிள்ளைகள் 30 வயது வரும் வரை கூட அவர்களை பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டில்தான் வளர்க்கின்றனர். மருத்துவத்தில் கூட ஏதாவது தீவிர நோய் நிலையில்தான் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறார்களே தவிர மற்றபடி ஏதாவது உடல் பிரச்சனை வந்தால், “ பெரியப்பா சொன்னார்…., சித்தி சொன்னார்… “ என்று மருத்துவம் ஆரம்பிக்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை பெரியப்பாதான் பொது மருத்துவர், அவர் ஒரு சிறப்பு மருத்துவரைப் பரிந்துரைப்பார். அந்த சிறப்பு மருத்துவர் யார் தெரியுமா? ஏற்கனவே அந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒன்றுவிட்ட சித்திதான் அந்த சிறப்பு மருத்துவர். இப்படியாக நோய் முற்றும் வரை சிகிச்சை தொடரும். இவர்களைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட மருந்து உள்ளது, அதை எடுத்துக் கொண்டால் அந்த நோய் குணமாகிவிடும் என நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. நோய் வேறு, நோயாளி வேறு.
நோய்க்கும் நோயாளிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது மிகவும் அடிப்படையான ஒன்று. அதை விளக்குவதற்கே இந்தக் கட்டுரை.

ஒரு நோயை உதாரணமாக வைத்து நோய்க்கும் நோயாளிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.