Thursday, 5 November 2015

தமிழக மீனவப் பெண்ணுக்கு அமெரிக்காவில் விருது

tamil meenavap pen1
கடல் வள பாதுகாப்பிற்கும், மீனவப் பெண்கள் வாழ்வு உயர்வுக்கும் பாடுபட்ட, தமிழக மீனவப் பெண் லட்சுமிக்கு, அமெரிக்காவில் இயங்கிவரும் ‘சீகாலஜி’ சர்வதேசத் தொண்டு நிறுவனம் சிறந்த தனிநபருக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ‘சீகாலஜி’ விருது பெறுவது இதுவே முதல்முறையாகும். அவருடன் ஒரு நேர்காணல்:

உங்களைப்பற்றி?
லெட்சுமி: ராமேசுவரத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னப்பாலம் மீனவக் கிராமம், சுனாமி குடியிருப்பில் வசித்து வருகிறேன். வங்கக்கடலில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரணைப் பகுதியில், ‘மன்னார் வளைகுடா இயற்கை பாசி எடுக்கும் பெண்கள் கூட்டமைப்பு’ இயங்கி வருகிறது. இந்த கூட்டமைப்பின் தலைவராக நான் பொறுப்பு வகித்து வருகிறேன். பாம்பன் ஊராட்சி, 14-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறேன்.

கூட்டமைப்பு மூலம் தாங்கள் ஆற்றிய சேவைகள் என்னென்ன?

லெட்சுமி: நான் எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் கடற்பாசிகளை சேகரிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளேன். எங்கள் பகுதி மீனவப் பெண்கள் பெரும்பாலானோருக்கு கடற்பாசி சேகரிப்பதே வாழ்வாதாரமாக உள்ளது. எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கடலை விட்டால் வேறு தொழிலுக்கும் போக முடியாது. ஆனால், அரசு அதிகாரிகள் பாசி சேகரிக்க தடை விதித்தும், பாசி சேகரிக்கும் பெண்களுக்கு அபராதம் விதித்தும், மீனவப் பெண்களின் படகுகளை கைப்பற்றியும் எங்களது வாழ்வாதாரத்தை சுரண்டி வந்தனர். சில நேரங்களில் தகாத வார்த்தைகளில் திட்டுவார்கள். ஒருமுறை கடலுக்குள் நாங்கள் பாசி சேகரித்தபோது கரையில் வைத்திருந்த ஆடைகளை வனத் துறையினர் எடுத்துச் சென்றனர். சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 4 November 2015

பழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்

palangaala india 4
ஏறத்தாழ கிறித்துவ சகாப்தம் தோன்றிய காலத்தை ஒட்டி இந்தியாவில் (அக்காலத்தில் இன்றுபோன்ற ஒரு ‘இந்தியா’ இல்லை, இருந்தாலும் கருத்து எளிமை கருதி இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. நாவலந்தீவு என்றோ பரத கண்டம் என்றோ வேறு பல பெயர்கள் உள்ளன, பிடிக்காதவர்கள் அவற்றில் ஒரு சொல்லைப் பயன்படுத்திக்கொள்ளலாம்). வாழ்க்கையின் இலட்சியங்கள் (இவற்றிற்குப் புருஷார்த்தங்கள் என்று பெயர்) மூன்று என்ற சிந்தனை உருவாகியது. ‘தர்மார்த்தகாமம்’ என்று வடமொழியில் இதைக் குறித்தார்கள். தமிழில் அறம் பொருள் இன்பம் என்றார்கள். திருக்குறள் இந்த அமைப்பில்தான் முப்பாலாக அமைந்துள்ளது. வீடு அல்லது மோட்சம் என்ற கருத்து பின்னர் இவற்றுடன் இணைக்கப்பட்டது. இதை ஒட்டித் தமிழிலும் அறம்பொருள்இன்பம்வீடு என்ற தொடர் உருவாகியது. தண்டியலங்காரம், “அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே” என்று சொல்லுகிறது.
palangaala india aram2
தர்மம் என்ற சொல்லின் பொருளும் அறம் என்பதன் பொருளும் சமமல்ல என்றாலும் ஏறத்தாழச் சமம் என்று வைத்துக் கொள்ளலாம். தர்மம் என்ற சொல்லின் மூலம் த்ரு- என்பது. இதற்கு இறுகப்பிடித்துக்கொள், பத்திரமாய்க் காப்பாற்று என்று பொருள். தர்மம் பிரபஞ்சத்தைப் பிடித்திணைக்கிறது. அன்பைவிட தர்மம் தான் உலகைச் சுற்றும்படி செய்கிறது. பொருள்கள் எப்படி இருக்கின்றன எப்படி இருக்க வேண்டும் என்ற இரண்டும் தர்மத்திற்குள் அடங்கியிருக்கின்றன.
அர்த்தம் என்பது பொருள்: பணம், அரசியல் அதிகாரம், வெற்றி, வார்த்தையின் பொருள், ஒன்றின் நோக்கம் என்பன இதற்குள்ள பல அர்த்தங்கள்.
காமம் என்பது இன்பமும் ஆசையும். வெறும் காம இன்பம் மட்டுமல்ல, புலன் சார்ந்த இன்பம்-இசை, நல்ல உணவு, வாசனை, ஓவியம்-யாவும் காமம் என்பதற்குள் அடங்குகின்றன.

முழு வாழ்க்கை வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் இவற்றில் பாத்தியதையும் கடமையும் உண்டு. பழங்கால சமஸ்கிருதப் பனுவல்கள் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை மையப்படுத்தியே அமைந்தன. அவற்றில் புகழ்பெற்றவை, மனுவின் தர்மசாத்திரம், கௌடில்யரின் அர்த்தசாத்திரம், வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம் ஆகிய மூன்றுமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 3 November 2015

உங்கள் பழையவீட்டை புதியதாக்குங்கள்

pazhaya veettai1
சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவர், தனது சொந்த ஊரிலுள்ள வீட்டின் நிமித்தம் என்னை சந்தித்தார். அந்த வீடு ஏராளமான பிரச்சினைகளுடன் இருந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவரும், அவரது மனைவியும் இணைந்து முதன் முதலாக கட்டிய வீடாகும். அந்த சொத்தின் மீது அவர்கள் ஆழ்ந்த பற்றுதல் கொண்டிருந்தனர்.
அந்த வீட்டின் மேற்கூரை பூச்சுகளையெல்லாம் இழந்து, கம்பிகள் எல்லாம் துருப்பிடித்துக் கிடந்தது. எந்த நேரத்தில் மேற்கூரை இடிந்துவிழுமோ என்ற பயத்துடன் உள்ளே செல்லவேண்டியிருந்தது. பூச்சுகளை மட்டும் சரிசெய்து விட்டுவிடலாம் என்ற எண்ணத்திற்கு வரமுடியாதபடி பிரச்சினை வேர்விட்டிருந்தது. கூரையை மாற்றுவதைத்தவிர வேறு வழியில்லை.
அதுமட்டுமின்றி அனைத்து சுவர்களும் வெடிப்புகளுடன் காணப்பட்டன, கண்ட இடமெல்லாம் கரையான் தென்பட்டது. என் நண்பரின் பெற்றோர் அந்த வீட்டில் வசித்து வந்தனர். இந்த வீட்டின் பிரச்சனைகளினால் அவர்களின் தினசரி வாழ்வே போராட்டமாக இருந்தது.

pazhaya veettai3
என்னை நண்பர் அந்த வீட்டிற்கு அழைத்தபோது, நான் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டேன். உடனடியாக எனக்கு என்ன தோன்றியது என்றால், தண்டமாக வீட்டிற்கு செலவு செய்வதைக் காட்டிலும் வீட்டை விற்றுத் தொலைத்துவிடுவதே மேல் என்பதாகும். ஆனால் வீட்டை வாங்குபவரின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது இதுபோன்ற பாழான வீட்டை மேற்பூச்சுகள் செய்து, அவரின் தலையில் கட்டுவது முற்றிலும் நியாயமில்லை என்று பட்டது, நண்பரும் அதே எண்ணத்தைக் கொண்டிருந்தார். மேற்கூரையை முற்றிலும் தகர்த்து எறிந்துவிட்டு, அவ்விடத்தில் புதிய கூரையை அமைப்பதே சரியானதாக இருந்தாலும், அதை செய்ய எனக்கு மனமில்லை. எனது நண்பர் மேற்கூரையை இழந்து தனது வீடு எலும்புக்கூடுபோல் நிற்பதைக் காண சக்தி அற்றவராக இருந்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 2 November 2015

தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்காதீர்கள்

Dr.Jerome -FI

எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் மருத்துவ முறையைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இல்லையா?, அப்படியானால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு ஆரோக்கிய செயல்முறை.
எண்ணெய் தேய்த்து குளிப்பது என்றால் என்ன?
Deepawalikku9

“இது எங்களுக்கு தெரியாதாக்கும்…… எண்ணெயை தேய்க்கனும் அப்புறம் குளிச்சிரனும்… அவ்வளவுதான்… இதென்ன பெரிய விடயமா? இதுக்கு ஒரு கட்டுரையா…. ?” … என முடித்துவிடும் விடயமல்ல இது. பல கோடி ரூபாய் செலவு செய்து பதினைந்து வருடம் ஆராய்ச்சி நடத்தலாம், அவ்வளவு விடயங்கள் உள்ளன.
எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
என்ன எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும்?
எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
யார் யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னெல்லாம் செய்யக்கூடாது?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?

என்னென்ன நோய் உள்ளவர்கள் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்க வேண்டும்? போன்ற நுணுக்கமான காரியங்களை சித்த மருத்துவம் மிகத் தெளிவாக விளக்குகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=18805

தற்காலக் கல்வி முறை பகுதி -7

velai5
ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருப்பது கல்விதான். அறியாமை என்னும் உயிர்ப்பிணியை நீக்கும் மருந்து ‘கல்வி’ என்பதால்தான், கல்வியை ‘மம்மர் அறுக்கும் மருந்து’ என்கிறது ஒரு பழம்பாடல். ‘கல்வி என்பது வெள்ளத்தால் போகாது; வெந்தனலால் வேகாது; வேந்தராலும் கொள்ள முடியாது; கொடுத்தாலும் குறையாது; கள்ளர்களால் திருட முடியாது; காவலுக்கும் மிகஎளிது’ என்கிறது கொன்றை வேந்தன்.
‘ஒருவன் தன் உள்ளத்தில் சேர்க்கும் அரியபொருள் கல்வி  ஒன்றுதான். அதை சேர்த்துவிட்டால், உலகிலுள்ள மற்ற பொருள்களெல்லாம் தானே கிட்டும். ஒருவன் கற்ற கல்வி இப்பிறவிக்கு மட்டுமின்றி ஏழு பிறவிக்கும் பயன்தரும்’ என்கிறது குறள். ஒரு மனிதன் வாழ்வில் அவனுக்குக் கண்ணாக இருப்பது கல்விதான். எனவேதான், ‘பிச்சை எடுத்தாவது கற்பது நல்லது’ என்கிறது நாலடியார்.
இப்படி பன்னெடுங்காலத்திற்கு முன்னரே கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்து அதை எப்படியாவது பெறவேண்டும் என வலியுறுத்தியது தமிழ்ச்சமூகம். இப்படி காலங்காலமாக கல்வியின் பெருமையைக் கூறி வந்ததின் பயன் இன்றைக்குப் படித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கல்வி கற்பதென்பது ஞானம் பெறுவதற்கும், தன்னிலை உணர்வதற்கும் என்ற நிலையிலிருந்து மாறி பின்னர் இறைவனையடைவதற்கு என்ற நிலையடைந்து, தற்போது வயிற்றுப் பிழைப்பிற்காக என்ற நிலைமைக்கு வந்துள்ளது.

சரி, கல்வி பெற்றதினால் கிடைக்கும் இது போன்ற பயன்களை இச்சமூகமும், நாடும், மக்களும் பெற்று முழுப்பயன்களையும் பெற்றுள்ளார்களா? தன் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் கல்வி கற்றவனின் உயிர்ப்பிணி முழுமையாக நீங்கியுள்ளதா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 29 October 2015

ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் சென்னை பெண்

aadharavatrorin1
சினேகா மோகன்தாஸ். வயது 23 தான். காட்சி தொடர்பியல் (Visual Communication) பட்டதாரி. மேற்படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறைகள் மத்தியில் சமூகச்சேவையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார். அவரது பார்வையில் ஒரு சமூக அக்கறை தெரிகிறது. ‘உணவு வங்கி’ என்ற திட்டத்தைத் தொடங்கி, சென்னையில் உணவின்றி சிரமப்படுபவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கி அவர்களின் பசியைப் போக்கி வருகிறார்.. அவருடன் ஒரு சிறிய நேர்க்காணல்:
உணவு வங்கி’ – எப்படி உதித்தது உங்கள் சிந்தனையில்?
சினேகா மோகன்தாஸ்:இந்திய மக்கள் தொகையில் 15%-க்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். மூன்று வேளை உணவுக்கு வழியின்றி கூட பலர் தவித்து வருகிறார்கள். சென்னை மாநகர சாலையோரங்களில் இப்படி உணவின்றி சிரமப்படும் ஊனமுற்றோர், முதியவர்கள், ஆதரவற்றவர்களை எளிதாகக் காணலாம். இது எனது மனதில் பெரும் சுமையை ஏற்படுத்தியது. இந்த அவலத்தை மாற்ற என்ன வழி என்று யோசித்தபோது தோன்றியதுதான் இந்த ‘உணவு வங்கி’.
உணவு வங்கிசெயல்பாடுகள் என்னென்ன?

aadharavatrorin3
சினேகா மோகன்தாஸ்:நண்பர்கள், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் உணவு வங்கியின் தன்னார்வலர்களாக இணைந்து உதவி புரிந்து வருகிறார்கள். உங்கள் வீடுகள், நிகழ்ச்சிகள், கூட்டங்களில் உணவு மீதமிருந்தால் ( https://www.facebook.com/groups/1628237724087693/ ) என்ற முகநூல் குழுவில் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தப் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் உணவு வங்கியின் ஆர்வலர்கள் நேரில் வந்து உணவை பொட்டலம் செய்து எடுத்துக்கொண்டு சாலைகளில் உணவின்றி வாடுவோருக்கு வழங்கி அவர்களின் பசியைப் போக்குவார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 28 October 2015

உலகையே பாடாய்படுத்தும் உடல் உறுப்பு

tholnoi fi
மூளையின் அடிப்படையில் உலக மக்கள் பிரிந்ததைவிட, தோல் நிறத்தின் அடிப்படையில்தான் அதிகம் பிரிந்துள்ளனர்.
இந்த உலகத்தில் தோல் ஏற்படுத்திய சிக்கல் எவ்வளவோ. அதைவிட தன் அமைப்பிலும் செயல்பாட்டினாலும் சிக்கலான உறுப்பு தோல்.
siddhamaruththuvam3

அதனால்தான் தோலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.
தோல் நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என்பதை எவ்வித தயக்கமுமின்றி என்னால் சொல்ல முடியும். நவீன மருத்துவத்தில் தோல்நோய்கள் பற்றிய அநேக கேள்விகளுக்கு விடை இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. உதாரணமாக,அரிப்பு எனும் உணர்வு எப்படி ஏற்படுகிறது என்பதற்கு சரியான விளக்கம் கிடையாது.
கரப்பான் ஏன் வருகிறது என்பதற்கு தெளிவான விளக்கம் கிடையாது (Eczema). இப்படி,‘idiopathic’ அதாவது காரணம் இல்லாமல் வருகின்ற நோய்கள் என நிறைய நோய்கள் நவீன மருத்துவத்தில் விளக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் நவீன மருத்துவத்தை குறைசொல்வதற்காகக் கூறவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.