சில
மாதங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவர், தனது சொந்த ஊரிலுள்ள
வீட்டின் நிமித்தம் என்னை சந்தித்தார். அந்த வீடு ஏராளமான பிரச்சினைகளுடன்
இருந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவரும், அவரது மனைவியும் இணைந்து
முதன் முதலாக கட்டிய வீடாகும். அந்த சொத்தின் மீது அவர்கள் ஆழ்ந்த பற்றுதல்
கொண்டிருந்தனர்.
அந்த வீட்டின் மேற்கூரை பூச்சுகளையெல்லாம்
இழந்து, கம்பிகள் எல்லாம் துருப்பிடித்துக் கிடந்தது. எந்த நேரத்தில்
மேற்கூரை இடிந்துவிழுமோ என்ற பயத்துடன் உள்ளே செல்லவேண்டியிருந்தது.
பூச்சுகளை மட்டும் சரிசெய்து விட்டுவிடலாம் என்ற எண்ணத்திற்கு வரமுடியாதபடி
பிரச்சினை வேர்விட்டிருந்தது. கூரையை மாற்றுவதைத்தவிர வேறு வழியில்லை.
அதுமட்டுமின்றி அனைத்து சுவர்களும்
வெடிப்புகளுடன் காணப்பட்டன, கண்ட இடமெல்லாம் கரையான் தென்பட்டது. என்
நண்பரின் பெற்றோர் அந்த வீட்டில் வசித்து வந்தனர். இந்த வீட்டின்
பிரச்சனைகளினால் அவர்களின் தினசரி வாழ்வே போராட்டமாக இருந்தது.
என்னை
நண்பர் அந்த வீட்டிற்கு அழைத்தபோது, நான் சென்று பரிசோதனைகளை
மேற்கொண்டேன். உடனடியாக எனக்கு என்ன தோன்றியது என்றால், தண்டமாக வீட்டிற்கு
செலவு செய்வதைக் காட்டிலும் வீட்டை விற்றுத் தொலைத்துவிடுவதே மேல்
என்பதாகும். ஆனால் வீட்டை வாங்குபவரின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது
இதுபோன்ற பாழான வீட்டை மேற்பூச்சுகள் செய்து, அவரின் தலையில் கட்டுவது
முற்றிலும் நியாயமில்லை என்று பட்டது, நண்பரும் அதே எண்ணத்தைக்
கொண்டிருந்தார். மேற்கூரையை முற்றிலும் தகர்த்து எறிந்துவிட்டு,
அவ்விடத்தில் புதிய கூரையை அமைப்பதே சரியானதாக இருந்தாலும், அதை செய்ய
எனக்கு மனமில்லை. எனது நண்பர் மேற்கூரையை இழந்து தனது வீடு
எலும்புக்கூடுபோல் நிற்பதைக் காண சக்தி அற்றவராக இருந்தார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment