Monday, 2 November 2015

தற்காலக் கல்வி முறை பகுதி -7

velai5
ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருப்பது கல்விதான். அறியாமை என்னும் உயிர்ப்பிணியை நீக்கும் மருந்து ‘கல்வி’ என்பதால்தான், கல்வியை ‘மம்மர் அறுக்கும் மருந்து’ என்கிறது ஒரு பழம்பாடல். ‘கல்வி என்பது வெள்ளத்தால் போகாது; வெந்தனலால் வேகாது; வேந்தராலும் கொள்ள முடியாது; கொடுத்தாலும் குறையாது; கள்ளர்களால் திருட முடியாது; காவலுக்கும் மிகஎளிது’ என்கிறது கொன்றை வேந்தன்.
‘ஒருவன் தன் உள்ளத்தில் சேர்க்கும் அரியபொருள் கல்வி  ஒன்றுதான். அதை சேர்த்துவிட்டால், உலகிலுள்ள மற்ற பொருள்களெல்லாம் தானே கிட்டும். ஒருவன் கற்ற கல்வி இப்பிறவிக்கு மட்டுமின்றி ஏழு பிறவிக்கும் பயன்தரும்’ என்கிறது குறள். ஒரு மனிதன் வாழ்வில் அவனுக்குக் கண்ணாக இருப்பது கல்விதான். எனவேதான், ‘பிச்சை எடுத்தாவது கற்பது நல்லது’ என்கிறது நாலடியார்.
இப்படி பன்னெடுங்காலத்திற்கு முன்னரே கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்து அதை எப்படியாவது பெறவேண்டும் என வலியுறுத்தியது தமிழ்ச்சமூகம். இப்படி காலங்காலமாக கல்வியின் பெருமையைக் கூறி வந்ததின் பயன் இன்றைக்குப் படித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கல்வி கற்பதென்பது ஞானம் பெறுவதற்கும், தன்னிலை உணர்வதற்கும் என்ற நிலையிலிருந்து மாறி பின்னர் இறைவனையடைவதற்கு என்ற நிலையடைந்து, தற்போது வயிற்றுப் பிழைப்பிற்காக என்ற நிலைமைக்கு வந்துள்ளது.

சரி, கல்வி பெற்றதினால் கிடைக்கும் இது போன்ற பயன்களை இச்சமூகமும், நாடும், மக்களும் பெற்று முழுப்பயன்களையும் பெற்றுள்ளார்களா? தன் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் கல்வி கற்றவனின் உயிர்ப்பிணி முழுமையாக நீங்கியுள்ளதா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment