Wednesday, 30 December 2015

தற்காலக் கல்வி முறை: பகுதி -10


tharkaalakkalvi3
கல்வித்துறையில் தற்போது தேவைப்படும் மாற்றம் எதுவெனில், மதிப்பிற்குரிய ஆழ்ந்த அறிவினை உருவாக்கும் கோட்பாடு மட்டுமேயாகும். அனைத்துத் தரப்பு மாணவர்களின் பின்புலத்தையும் கருத்தில் கொண்டு இக்கோட்பாட்டை வடிவமைக்க வேண்டும். எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்விச் சூழலில், சமக்கல்வி வாய்ப்பளித்து அவரவர் திறமை ஆற்றலுக்கேற்ப முழுமையான வளர்ச்சி பெற உதவுவதுதான் கல்வியின் முக்கியச் சவாலாகும். பழங்காலக் கல்வியைவிட இக்காலக் கல்வி முறை சவால் நிறைந்தது. காரணம் அனைவருக்கும் வேலை தருவது என்பது இயலாத நிலை. இக்கால சமூகச் சவால்களை எதிர்நோக்கும் அளவில் அனைவரையும் உருவாக்குவது கல்விக்கு விடுக்கப்பட்ட அறைகூவல். இந்தியாவில் தற்போது பல்வேறு வகையான கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன.
மத்திய நடுவண் அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் தங்களுக்கு என்று தனித்த கல்விக் கொள்கையைக் கொண்டு செயல்படுவதால் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. இதனால் மக்களிடையே எந்த கல்விமுறை சிறந்தது என்ற குழப்பம் நிலவுகிறது.
tharkaalakkalvi5
மாநில கல்வித்திட்ட முறையில் பயிலும் மாணவர்களுக்குமிடையே உயர்வு தாழ்வு மனப்பான்மை தோன்றுகிறது. இவ்வாறன்றி மொழிப் பாடங்களைத்தவிர மற்ற அனைத்துப் பாடங்களையும் நாடு முழுமைக்கும் ஒரே பாடத்திட்டமாக வகுப்பதென்பது உயர்வு-தாழ்வு மனப்பான்மையைப் போக்கும். இதனால் போட்டித் தேர்வுகள் என்பது சிக்கலுக்குரியதாக இருக்காது. அதேபோல மாணவர்கள் கல்வி கற்கும் இடங்களில் வேறுபாடு எதன் பொருட்டும் காணக்கூடாது என்பதும் சமூக நீதிக்கொள்கையாகும்.

என் மாணவர்களிடம் கல்வியில் என்ன சிக்கல் உள்ளது என்று கேட்டபோது ‘கல்வியே இன்று சிக்கல்தான்’ என்று பதில் தந்தார்கள். ‘ஏன் அப்படி?’ என்று கேட்டபோது புரியாத மொழியில் கல்வி, என்ன படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம் என்பது தெரியாமலேயே எதையோ படிப்பதாக அந்நியப்பட்டு நிற்கும் வேலையில்லா சூழல்என்றார்கள்………

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சென்னை வெள்ளத்தில் 130 பேரை காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டவர்..


Peter Van Geit (3)
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் பீட்டர் வெய்ன் கெய்ட். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த இவர், காஞ்சிபுரம் மாவட்டம் பாலவாக்கத்தில் வசித்து வருகிறார். தான் நடத்திவரும் மலையேறும் குழுவுடன் இணைந்து சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப்பிராணிகளையும் பீட்டர் வெய்ன் கெய்ட் பத்திரமாக மீட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றையும் பீட்டர் வழங்கினார். கிட்டத்தட்ட 3000 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். தற்போது பீட்டரும் அவரது குழுவினரும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று தேங்கிக் கிடக்கும் குப்பைகளையும் சாக்கடை அடைப்புகளையும் தூய்மைப்படுத்தி வருகின்றனர். பீட்டர், சாக்கடையில் இறங்கி தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி வருவதோடு, குப்பைகளை கைகளால் அள்ளி, அதனை மிதிவண்டிகளில் ஏற்றி அகற்றி வருவது சென்னை மக்களை வியப்படையச் செய்துள்ளது. இளைஞர்கள் அவரது சேவையைப் பார்த்து வியந்து போவதோடு தாங்களும் அவருடன் களம் இறங்கி வருகின்றனர். ‘சிறகு’ அவரை சந்தித்தது. அவருடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப்பற்றி?
பீட்டர் வெய்ன் கெய்ட்: பெல்ஜியம் நாட்டின் Lokeren தான் என் சொந்த ஊர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்தேன். பாலவாக்கத்தில் தங்கி உள்ளேன். ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறேன். இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள் மீது எனக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பிரதிபலிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்’பை (மலையேறும் குழு) உருவாக்கி நடத்தி வருகிறேன்.
உங்கள் மலையேறும் குழு பற்றி?

பீட்டர் வெய்ன் கெய்ட்: தற்போது இந்த குழுவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். நாங்கள் நாடு முழுவதும் உள்ள மலைப் பிரதேசங்களில் பயணம் செய்து, அங்குள்ள குப்பைகள், பிளாஸ்டிக், கழிவுப் பொருட்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மேலும் உறுப்பினர்களுக்கு காட்டுயிர்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 28 December 2015

பாலின சமத்துவம் இல்லாததால் பின்தங்கும் இந்தியா


paalina samaththuvam4
பாலின சமத்துவம் இல்லாததால் பின்தங்கும் இந்தியா … ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் (டிசம்பர் 15, 2015) வெளியிட்ட அறிக்கையில் காணும் தகவல் இது. ஐ.நா.வின் வளர்ச்சி திட்டப் பிரிவு (United Nations Development Programme – UNDP) ஒவ்வொரு நாட்டின் மனிதவள மேம்பாட்டின் நிலையை அளவிடும் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் (Human Development Index -HDI) அடிப்படையில் நாடுகளின் நிலையை ஆய்ந்து, தரவரிசைப்படுத்தி ஆண்டறிக்கைகள் வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையில் மனிதவளம் மேம்பாடு அடைவதன் அறிகுறியாக; நீண்ட ஆரோக்கியமான ஆயுள், கல்வி கற்கும் வாய்ப்பு, அடிப்படை வசதிகள் கொண்ட வாழ்க்கைத் தரம் (a long and healthy life, access to knowledge and a decent standard of living) ஆகியவை உலகளவில் 188 நாடுகளுக்கிடையே ஒப்பிடப்பட்டுத் தரவரிசைப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சியில் இருக்கும் அரசு இத்தகவலை உரிய முறையில் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத் திட்டத்தை வகுக்க உதவ வேண்டும் என்பதே இந்த ஐ. நா. அறிக்கை வெளியிடப்படுவதன் நோக்கம். தங்களது நாட்டு மக்களின் உடல்நலம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மற்றநாட்டு தரவரிசையுடன் ஒப்பிட்டு நாட்டு மக்களும் தங்களது வாழ்க்கை நிலை பற்றிய ஒரு புரிதலை இந்த அறிக்கையின் மூலம் பெறலாம். உடல்நலம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள் தனிமனித முன்னேற்றத்தையும் குலைக்கும், அதனால் அந்த நாடும் வளர்ச்சியில் பின்தங்கும்.

paalina samaththuvam2
அறிக்கைகள் வெளியிடப்படுவது என்பது முதல் படிதான். அதில் உள்ள தகவல் சேரவேண்டியவர்களைச் சென்று சேர்கிறதா என்பதே மிக முக்கியமானது. இந்த அறிக்கை கூறும் தகவல்கள் பற்றி இந்தியப் பத்திரிக்கைகளில் ஆங்கிலப் பத்திரிக்கைகள் கவனம் செலுத்திய அளவிற்குத் தமிழ் நாளிதழ்கள் கவனம் செலுத்தவில்லை. ஓரிரு இணைய இதழ்களும் ஓரிரு பத்திரிக்கைகளும் செலுத்திய கவனமும் அந்த அறிக்கையின்படி இந்தியப் பெண்களில் 80 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை, இந்தியப் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பது போன்ற மிக மேலோட்டமான தகவல்களே. அதாவது, தமிழ்த் திரைப்படச் சங்கத்தின் தேர்தலுக்குக் கொடுத்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று ஊடகங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. எனினும் கொஞ்சம் விரிவான செய்தியாக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது இந்திய மக்களின் நிலை என்ன என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை தமிழ்ப் பத்திரிக்கைகள் உணர வேண்டியத் தேவை இருக்கிறது என்பதை இங்குக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 27 December 2015

கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் நேர்காணல்


kasi aananthan
கேள்வி: உங்கள் பிறப்பு, இளமைக்காலம், பூர்வீகம் பற்றி கூறுங்கள்?
பதில்: நான் தமிழீழத்தின் தென்பகுதியில் மீன்பாடும் தேன்நாடு என்று அழைக்கப்படுகின்ற மட்டக்களப்பு பகுதியில் நாவற்குடா என்னும் சிற்றூரில் பிறந்தேன். சித்திரை மாதம் 4ம் நாள் 1938ம் ஆண்டு நான் பிறந்தேன். 4.4.1938 என்னுடைய பிறந்த நாள். நாவற்குடா என்னுடைய அம்மாவினுடைய ஊர். அதே மட்டக்களப்பில் அமிர்தகலி எனது தந்தையாருடைய ஊர். அங்கேதான் நான் வளர்ந்தேன். இந்த அமிர்தகலி என்கிற சிற்றூரையும், நாவற்குடா என்கிற சிற்றூரையும் இணைப்பதுபோல, மீன்கள் பாடுவதாகச் சொல்லப்படும் அந்த அழகிய நீல உப்பேரி, 15 கல் தொலைவுக்கு நீண்டு நெடிதாகிக் கிடக்கிறது. அந்த உப்பேரி, கடலோடு தொடர்புடைய ஏரி.

kasi aananthan nerkaanal1
அந்த ஏரியில் முழு நிலவு வேளையில் படகிலேறி ஊர்ந்து, அந்த ஆற்றில் படகைச் செலுத்துகிற சவல் என்று சொல்லுகிற அந்தத் துடுப்பை, தோனியிலிருந்து ஆற்றின் உள்ளே விட்டு அதன் மறுமுனையை காதிலே வைத்து கேட்டால் ஒரு வீணை இசைப்பதைப் போன்ற ஒரு இனிய ஓசை அந்த ஆற்றிலிருந்து எழும். அதைத்தான் மீன் பாடுவதாகச் சொல்லுகிறார்கள். உலகில் இப்படியான இசை வேறு எங்கோ ஒரு நாட்டில்தான் இருப்பதாகச் சொன்னார்கள். அமெரிக்க ஆய்வாளர்கள் வந்து இதை ஆய்வு செய்திருக்கிறார்கள். அது ஆழமாகக் கல்லில் இருக்கின்ற அந்த கருங்கற் பாறையில் ஒட்டியிருக்கிற பகுதியில் அலைமோதி எழுகிற இசையா அல்லது ஊறி பாடுகிற இசையா அல்லது மீன்கள்தான் எழுப்புகிற இசையா என்று இன்னும் அவர்கள் சரியாக கண்டறிய முடியவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 24 December 2015

வியர்க்குருவைப் போக்க வழிமுறைகள்


viyarkuru2

  • வியர்க்குரு உள்ள இடத்தில், வெள்ளரிக்காயை அரைத்து தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், வியர்க்குரு பிரச்சனை நீங்கி, சருமம் குளிர்ச்சி பெரும்.
  • சருமத்தில் கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்து வந்தால் வியர்க்குரு பிரச்சனை தீரும்.
  • சீரகப் பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து, வியர்குரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் வியர்க்குரு நீங்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 23 December 2015

அரசியல் உணர்வு


arasiyal unarvu1
சென்னையில் மழை நீர் வடிந்து விட்டது. சென்று கடலில் கலந்து விட்டது. பல உயிர்ப் பலிகளுடனும் பெரும் பொருட் சேதங்களுடனும், பல மனிதர்களின் வாழ்க்கையின் மேல் இருந்த நம்பிக்கைகளுடனும். இத்தகைய சேதங்களுக்குப் பின்னும் சென்னை மீண்டு வந்து கொண்டிருக்கிறது. வந்தாக வேண்டும். அதுதான் நியதி. அது மனிதர்களின் கீழ்மைகளையும் மேன்மைகளையும் அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறது. உலகம் முழுவதும் பேரழிவுகள் ஏற்படும்போது அடையாளங் காட்டுவதைப் போல. அங்கு நாம் கண்ட மேன்மைகளும் கீழ்மைகளும் எத்தனை நாள் நம்முடன் இருக்கப்போகிறது என்பதே நாம் அடைந்திருக்கும் நாகரீகத்தின் அளவுகோல். பேரழிவுகள் வரும் இடங்களில் எல்லாம் மனிதர்களின் உன்னதமும் இழிவுகளும் சேர்ந்து வெளிப்படுவது இயல்பானதுதான். அதுதான் மனிதகுலத்தைத் தொடர்ந்து இருக்க வைக்கிறது. ஆனால் அவற்றின் மூலம் மனிதர்கள் அடைவதுதான், அந்தந்த நாகரீகங்கள் தொட்டிருக்கும் அல்லது தொடப்போகும் உச்சங்களை அடையாளம் காட்டுபவை.
இந்தப் பேரழிவு, நாம் அடைந்திருக்கும் நாகரீகத்தின் உச்சத்தை நமக்குக் காட்டுமா? அழிவின் தருணத்தில் வெளிப்படும் உன்னதங்கள் மிக இயல்பானவை. பேரழிவின் தாண்டவம் மனித உணர்வுகளைத் தூண்டுவதால், இயல்பாக அந்த உன்னதங்கள் அந்தந்த மனிதர்களின் இயல்பிற்கேற்ப வெளிப்படும். இங்கு அவர் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவினார். இவர் எதுவுமே செய்யவில்லை போன்ற புலம்பல்கள் அர்த்தமில்லாதவை. களத்தில் இறங்காதவர்கள் இவற்றைப்பார்த்துக் கவலையற்று இருந்தார்கள் என்பது சரியானதல்ல. அவரவர் இயல்பிற்கேற்ப வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்பட்டிருப்பார்கள். இயல்பிற்கேற்ற களப்பணிகளை செய்திருப்பார்கள். இவை பற்றி பேசி, எழுதிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் களப்பணி செய்தவர்கள் அல்ல. அவ்வாறு செய்வது சாத்தியமும் இல்லை. ஆனால் அனைவரும் பேரிழப்பின் உணர்வெழுச்சிகளை அடைந்திருப்பார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 22 December 2015

தமிழகமும் மழை வெள்ளமும்


thamilagamum mazhai vellamum14
‘எல் நினோ’ என்பது பருவநிலை மாற்றத்தினைக் குறிக்கும் பெயர். உலகில் பெருகிவரும் தொழிற்சாலைகளினால் வளிமண்டலத்தில் வெப்பநிலை உயருகிறது. இதனால் கடல் நீர் ஆவியாகும் தன்மை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது. இந்த 2015-ம் ஆண்டினை ஆராய்ச்சி ஆய்வாளர்கள் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்துள்ளனர். பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையானது எப்பொழுதும் இருப்பதைவிட அதிகமாக 80 டிகிரி பாரன்கீட் வந்துள்ளது. இதுபோன்று இந்தியப் பெருங்கடலிலும் வெப்பநிலை உயருகின்றது. வளிமண்லடத்தில் வெப்பநிலையின் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றது, கடல் நீர் மட்டம் உயருகிறது, கடல் நீர் ஆவியாவதும் அதிகமாகிறது. இந்த ‘எல் நினோ’ பருவமாற்றத்தினை, கடந்த அக்டோபர் மாதமே ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். அளவுக்கு அதிகமான கடல்நீர் ஆவியாகி வளிமண்டலத்தை அடைந்து, அங்கு மழை தரும் மேகங்களாக மாறியதின் விளைவைத்தான் தமிழகம் தற்போது சந்தித்தது.
thamilagamum mazhai vellamum3
இந்த உலகில் வெப்பமயமாதலைத் தடுப்பதற்கென்று (climate change conference) வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின் தங்கிய நாடுகள் என்று அனைத்துத் தலைவர்களும் ஒன்று கூடி Global warming –யை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு வெப்பநிலை உயர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்த வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் தொழிற்சாலைகளின் புகை, வாகனப்புகை, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் வாயு, காடுகளை அழித்தல், சாலைகளை விரிவுபடுத்துவதற்காக சாலை ஓரத்தில் உள்ள மரங்களை வெட்டுதல் போன்றவற்றால் Global warming ஏற்படுகிறது. உலகத் தலைவர்கள் வெப்பமயமாதலை (Climate change conference) தடுப்பதாக AC அறையில் அமர்ந்துதான் பேசுகிறார்கள். வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை குறை கூறுகிறது, வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை குறை கூறுகிறது. இப்படி மாறி மாறி வெறும் பேச்சு மட்டுமே நடைபெறுகிறதே தவிர, வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் இவர்கள் எடுக்கப்போவதில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.