Wednesday, 30 December 2015

சென்னை வெள்ளத்தில் 130 பேரை காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டவர்..


Peter Van Geit (3)
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் பீட்டர் வெய்ன் கெய்ட். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த இவர், காஞ்சிபுரம் மாவட்டம் பாலவாக்கத்தில் வசித்து வருகிறார். தான் நடத்திவரும் மலையேறும் குழுவுடன் இணைந்து சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப்பிராணிகளையும் பீட்டர் வெய்ன் கெய்ட் பத்திரமாக மீட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றையும் பீட்டர் வழங்கினார். கிட்டத்தட்ட 3000 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். தற்போது பீட்டரும் அவரது குழுவினரும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று தேங்கிக் கிடக்கும் குப்பைகளையும் சாக்கடை அடைப்புகளையும் தூய்மைப்படுத்தி வருகின்றனர். பீட்டர், சாக்கடையில் இறங்கி தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி வருவதோடு, குப்பைகளை கைகளால் அள்ளி, அதனை மிதிவண்டிகளில் ஏற்றி அகற்றி வருவது சென்னை மக்களை வியப்படையச் செய்துள்ளது. இளைஞர்கள் அவரது சேவையைப் பார்த்து வியந்து போவதோடு தாங்களும் அவருடன் களம் இறங்கி வருகின்றனர். ‘சிறகு’ அவரை சந்தித்தது. அவருடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப்பற்றி?
பீட்டர் வெய்ன் கெய்ட்: பெல்ஜியம் நாட்டின் Lokeren தான் என் சொந்த ஊர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்தேன். பாலவாக்கத்தில் தங்கி உள்ளேன். ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறேன். இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள் மீது எனக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பிரதிபலிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்’பை (மலையேறும் குழு) உருவாக்கி நடத்தி வருகிறேன்.
உங்கள் மலையேறும் குழு பற்றி?

பீட்டர் வெய்ன் கெய்ட்: தற்போது இந்த குழுவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். நாங்கள் நாடு முழுவதும் உள்ள மலைப் பிரதேசங்களில் பயணம் செய்து, அங்குள்ள குப்பைகள், பிளாஸ்டிக், கழிவுப் பொருட்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மேலும் உறுப்பினர்களுக்கு காட்டுயிர்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment