‘எல்
நினோ’ என்பது பருவநிலை மாற்றத்தினைக் குறிக்கும் பெயர். உலகில்
பெருகிவரும் தொழிற்சாலைகளினால் வளிமண்டலத்தில் வெப்பநிலை உயருகிறது. இதனால்
கடல் நீர் ஆவியாகும் தன்மை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே
செல்லுகிறது. இந்த 2015-ம் ஆண்டினை ஆராய்ச்சி ஆய்வாளர்கள் மிகவும் வெப்பமான
ஆண்டாக அறிவித்துள்ளனர். பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையானது எப்பொழுதும்
இருப்பதைவிட அதிகமாக 80 டிகிரி பாரன்கீட் வந்துள்ளது. இதுபோன்று இந்தியப்
பெருங்கடலிலும் வெப்பநிலை உயருகின்றது. வளிமண்லடத்தில் வெப்பநிலையின்
காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றது, கடல் நீர் மட்டம் உயருகிறது, கடல் நீர்
ஆவியாவதும் அதிகமாகிறது. இந்த ‘எல் நினோ’ பருவமாற்றத்தினை, கடந்த அக்டோபர்
மாதமே ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். அளவுக்கு அதிகமான கடல்நீர்
ஆவியாகி வளிமண்டலத்தை அடைந்து, அங்கு மழை தரும் மேகங்களாக மாறியதின்
விளைவைத்தான் தமிழகம் தற்போது சந்தித்தது.
இந்த
உலகில் வெப்பமயமாதலைத் தடுப்பதற்கென்று (climate change conference)
வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின் தங்கிய நாடுகள் என்று அனைத்துத்
தலைவர்களும் ஒன்று கூடி Global warming –யை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை
எடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு வெப்பநிலை உயர்ந்து
கொண்டுதான் உள்ளது. இந்த வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் தொழிற்சாலைகளின்
புகை, வாகனப்புகை, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் வாயு, காடுகளை
அழித்தல், சாலைகளை விரிவுபடுத்துவதற்காக சாலை ஓரத்தில் உள்ள மரங்களை
வெட்டுதல் போன்றவற்றால் Global warming ஏற்படுகிறது. உலகத் தலைவர்கள்
வெப்பமயமாதலை (Climate change conference) தடுப்பதாக AC அறையில்
அமர்ந்துதான் பேசுகிறார்கள். வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை குறை
கூறுகிறது, வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை குறை கூறுகிறது. இப்படி மாறி
மாறி வெறும் பேச்சு மட்டுமே நடைபெறுகிறதே தவிர, வெப்பமயமாதலைக்
கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் இவர்கள் எடுக்கப்போவதில்லை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment