Sunday 27 December 2015

கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் நேர்காணல்


kasi aananthan
கேள்வி: உங்கள் பிறப்பு, இளமைக்காலம், பூர்வீகம் பற்றி கூறுங்கள்?
பதில்: நான் தமிழீழத்தின் தென்பகுதியில் மீன்பாடும் தேன்நாடு என்று அழைக்கப்படுகின்ற மட்டக்களப்பு பகுதியில் நாவற்குடா என்னும் சிற்றூரில் பிறந்தேன். சித்திரை மாதம் 4ம் நாள் 1938ம் ஆண்டு நான் பிறந்தேன். 4.4.1938 என்னுடைய பிறந்த நாள். நாவற்குடா என்னுடைய அம்மாவினுடைய ஊர். அதே மட்டக்களப்பில் அமிர்தகலி எனது தந்தையாருடைய ஊர். அங்கேதான் நான் வளர்ந்தேன். இந்த அமிர்தகலி என்கிற சிற்றூரையும், நாவற்குடா என்கிற சிற்றூரையும் இணைப்பதுபோல, மீன்கள் பாடுவதாகச் சொல்லப்படும் அந்த அழகிய நீல உப்பேரி, 15 கல் தொலைவுக்கு நீண்டு நெடிதாகிக் கிடக்கிறது. அந்த உப்பேரி, கடலோடு தொடர்புடைய ஏரி.

kasi aananthan nerkaanal1
அந்த ஏரியில் முழு நிலவு வேளையில் படகிலேறி ஊர்ந்து, அந்த ஆற்றில் படகைச் செலுத்துகிற சவல் என்று சொல்லுகிற அந்தத் துடுப்பை, தோனியிலிருந்து ஆற்றின் உள்ளே விட்டு அதன் மறுமுனையை காதிலே வைத்து கேட்டால் ஒரு வீணை இசைப்பதைப் போன்ற ஒரு இனிய ஓசை அந்த ஆற்றிலிருந்து எழும். அதைத்தான் மீன் பாடுவதாகச் சொல்லுகிறார்கள். உலகில் இப்படியான இசை வேறு எங்கோ ஒரு நாட்டில்தான் இருப்பதாகச் சொன்னார்கள். அமெரிக்க ஆய்வாளர்கள் வந்து இதை ஆய்வு செய்திருக்கிறார்கள். அது ஆழமாகக் கல்லில் இருக்கின்ற அந்த கருங்கற் பாறையில் ஒட்டியிருக்கிற பகுதியில் அலைமோதி எழுகிற இசையா அல்லது ஊறி பாடுகிற இசையா அல்லது மீன்கள்தான் எழுப்புகிற இசையா என்று இன்னும் அவர்கள் சரியாக கண்டறிய முடியவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment