Wednesday, 30 November 2016

கவிதைச் சோலை (தமிழ்மொழி வாழி!, வெளிநாடு வந்தேனடா …!)

தமிழ்மொழி வாழி!



siragu-yaaliniyum1
வளஞ்செழித்த நிலமோடு மங்காத புகழோடு
பிறந்த தமிழரினமே பல்லாண்டு வாழி!
பெற்றபேறு களிலெலாம் தமிழனாய் பிறப்பெடுத்த
பண்பாட் டுடையபெருந் தமிழினமே வாழி!
தாயாகத் தமிழைப் பெற்றத் தமிழரின்;

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=24214

Tuesday, 29 November 2016

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3


காகம்-அப்படியானால் பாம்பைக் கொல்ல நான் செய்ய வேண்டிய உபாயம் என்ன?
நரி-இந்த நகரத்து அரசகுமாரி குளிக்கிற நீராட்டுக்குளத்திற்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளைக் கழற்றுவாள். அந்த நகைகளில் ஒன்றைக் கொண்டுவந்து மக்கள் பார்க்கும்படியாக அந்த மரப்பொந்தில் போட்டுவிடு.
siragu-pancha-thandhira-kadhai2

காக்கையும் அவ்விதமே செய்தது. அதைப் பின்தொடர்ந்து வந்த அரசனின் பணியாளர்கள் நகையைத் தேடி பொந்தினைப் பிளந்தார்கள். அப்போது சீறிவந்த நாகத்தையும் கொன்றார்கள். இவ்விதம் காகம் தன் தொல்லை நீங்கிச் சுகமாக வாழ்ந்தது.
எனவே சரியான உபாயத்தினால் எல்லாம் கைவசமாகும். புத்தியிருப்பவன் பலவான். முன்பு புத்தி பலத்தினால் ஒரு முயல் சிங்கத்தையே கொன்றது என்று தமனகன் கூறியது.
கரடகன்-அது எப்படி?
தமனகன்-(முயல் சிங்கத்தைக் கொன்ற கதையைச் சொல்கிறது)
siragu-pancha-thandhira-kadhai3


ஒரு காட்டில் மதோன்மத்தன் என்று ஒரு சிங்கம் இருந்தது. அது எவ்வித முறையுமின்றி அக்காட்டிலுள்ள மிருகங்களை எல்லாம் கொன்று தின்று வந்தது. அப்போது மிருகங்கள் யாவும் ஒன்றுதிரண்டு அதனிடம் சென்று, “மிருகங்களுக்கெல்லாம் அரசனே! இம்மாதிரித் தாங்கள் எல்லையின்றி விலங்குகளைக் கொன்றுவந்தால் எல்லா விலங்குகளும் அழிந்துபோய்விடும். பிறகு தங்களுக்கும் இரை கிடைக்காது ஆகவே நாங்கள் தினம் ஒரு விலங்காக உங்களிடம் வருகிறோம். நீங்கள் அவ்விலங்கை உண்டு பசியாறலாம்” என்றன. சிங்கமும் “அப்படியே செய்கிறேன்” என்று சத்தியம் செய்துகொடுத்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 28 November 2016

சிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும் – பகுதி – 2


சிறுவர் பாடல்கள் பொது வரையறை
siragu-siruvar-vaaimozhi2

குழந்தைகளுக்காக எழுதப்பெறும் பாடல்கள், குழந்தைகள் தமக்குத் தாமே எழுதிக்கொள்ளும் பாடல்கள் ஆகிய இரு நிலைகளில் சிறுவர் பாடல்கள் அடிப்படையில் அமைகின்றன. சிறுவர்களுக்காக எழுதப்படும் மூத்தோரின் பாடல்களின் தன்மையைப் பின்வரும் கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன.

சிறுவர் இலக்கியம் என்ற தொடரானது ‘Children literature‘ என்ற சொல்லின் மொழிப் பெயர்ப்பாக அமைகிறது. ‘Child’ என்பது சின்னஞ்சிறு குழந்தையைக் குறிப்பதால், குழந்தை எனும் சொல்லுக்குப் பதிலாக, சிறுவர் என்னும் சொல்லைக் கொண்டு இவ்வியலக்கியத்தைச் சிறுவர் இலக்கியம் என்று அழைத்தனர். சிறுமியர் என்ற சொல்லையும் உள்ளடக்கியதாகச் சிறுவர் இலக்கியம் கருதப்பட்டாலும் இது ஆண்பாலையே முதன்மைப்படுத்துவதாக அமைவதால் சிறுவர் இலக்கியம் எனும் தொடரை விடுத்துக் குழந்தை இலக்கியம் என்று குறிப்பதும் உண்டுஎன்று சிறுவர் இலக்கியம் என்பதற்கான பெயர்ப் பொருத்தத்தை ஆராய்கின்றனர் அறிஞர்கள்.


3 வயது முதல் சுமார் 16 வயது வரையிலான குழந்தைகளுக்காகப் படைக்கப்பெறுவது சிறுவர் இலக்கியம். அதாவது பள்ளிக்கல்வி முடியும் வரையிலான பருவத்தினருக்குரியது எனலாம்என்று சிறுவர் இலக்கியத்திற்கான வயது வரையை உறுதி செய்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 27 November 2016

ஆபிரகாம் பண்டிதர்

யார் இந்த ஆபிரகாம் பண்டிதர்?
siragu-abraham-pandidhar2

தமிழிசை சாகித்தியங்களின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்ற முத்துத் தாண்டவர் முதலிய மூவரைப் போல, தமிழிசை இலக்கணத்தைத் தெளிவுபடுத்துவதற்கென வாய்த்த வல்லுநர்கள் மூவர். கருணாமிர்த சாகரம் எழுதிய ஆபிரகாம் பண்டிதர், யாழ் நூல் எழுதிய விபுலாநந்தர், சிலப்பதிகார இசை நுணுக்கம் எழுதிய டாக்டர் எஸ். ராமநாதன் ஆகியோர்தான் அந்த மூவர்.
“தமிழக முழுமைக்கும் உதவிய நற்பெரும் மருத்துவர்; கடல் போன்ற கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூல் எழுதியவர்; வீணை வித்தகர்; அறிஞர் போற்றிய இசை ஆராய்ச்சி அன்பர்; பெரும்புலவர்களைப் புரிந்து பேணிய வள்ளல்; இசை மாநாடுகள் இனிது நடத்தியவர்; பரோடா இந்திய இசை மாநாட்டில் 24 சுருதி பற்றிச் சொற் பெருக்கு ஆற்றிய ஆய்வாளர்; சுருளிமலைத் துறவியார் கருணானந்தர்பால் அரிய மருந்து முறைகளைக் கற்றுக்கொண்ட அறிஞர்; சிலப்பதிகார இசை நுணுக்கங்களையும் சங்க இலக்கிய இசையியலையும் முதன் முதலில் ஆராய்ந்து பிற ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாய் நின்றவர்; மேற்கு நாட்டினர்க்குத் தென்னக இசையியல் பற்றிக் கட்டுரைகள் எழுதியும், கருணாமிர்த சாகரத்தை ஆங்கிலத்தில் எழுதியும் ஐரோப்பிய இசையியலையும் தமிழ் இசையியலையும் ஒப்பீடு செய்து பணியாற்றியவர்; பழம் இசை நூல்களைத் திரட்டி அச்சிட்டு அளித்து, மறைந்துபோகாமல் காத்த இசைப்புரவலர்.”
தமிழிசை வளம்:
தமிழிசைக் களஞ்சியத்தை உருவாக்கிய முனைவர் வீ. ப. கா. சுந்தரம், ஆபிரகாம் பண்டிதரை அறிமுகப்படுத்தும் முறை இது. வரலாற்று வல்லுநர், பறவையியல் வல்லுநர் (ஆர்னிதாலஜிஸ்ட்), புகைப்படக் கலைஞர், ஓவியர், சோதிடர், இசைத்தமிழ் வல்லுநர், இசைப்பாடல் ஆசிரியர் எனப் பல்வேறு ஆற்றல்கள் பெற்றுத் தமிழுக்குத் தொண்டாற்றிய ஆபிரகாம் பண்டிதரை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 22 November 2016

சிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும்


siragu-children2

நாட்டுப்புறப்பாடல்கள் வாய்மொழியாகவே மக்களிடத்தில் வழங்கி வருகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் தற்காலத்தில் பெருமுயற்சிகள் எடுத்து எழுத்துவடிவில் பதிவாக்கம் செய்யப்படுகின்றன. குறிப்பாக நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான, சிறுவர் பாடல்கள் தற்காலத்தில் தேய்ந்து அருகி வருகின்றன. இதற்குக் காரணம் சிறுவர்கள் தம்விளையாட்டு எண்ணம் மறக்கப்பெற்று அவற்றிக்கு நேரமும் வாய்ப்பும் இல்லாமல் போனது என்பதே ஆகும். சிறுவர்கள்தம் விளையாட்டு எண்ணம் தொலைக்காட்சி, கணினி விளையாட்டு ஆகியவற்றால் கவரப்பெற்று விளையாட்டு, ஆடல், பாடல், விடுகதை போன்றவற்றிற்கு நேரம் இல்லாமல் போயிற்று. விளையாட்டைக் காண்பவர்களாக மட்டுமே இக்காலக் குழந்தைகள் வளர்ந்து வரும் இவ்வகை குறைவதற்கான காரணம் ஆகும்.


மேலும் பள்ளிகளில் நாட்டுப்புற மரபு சார்ந்த விளையாட்டுக்களுக்கு இடமில்லாமல் இருப்பதும் ஒரு பெருங்குறையாகும். பள்ளிகளில் உலகமயமாக்கப்படுதல் காரணமாக உலக அரங்கில் விளையாடப்படும் விளையாட்டுகள் விளையாடச் சொல்லித்தரப்பெறுகின்றன. இதன் காரணமாக கிராமப்புற விளையாட்டுகள் மறைந்துவருகின்றன. மேலும் கிராமப்புற விளையாட்டு சார்ந்த பாடல்களும் சிறுவர்களால் விளையாடப்படாத காரணத்தினால் அழிவுக்குள்ளாகி வருகின்றன. இருப்பினும் இவற்றில் இருந்துத் தப்பிக் கிடைக்கும் சிறுவர் பாடல்களைத் தொகுப்பது அவற்றை ஆராய்வது என்பது இக்காலத்திற்குத் தேவையான ஒன்றாகும். எதிர்கால சமுதாயத்திற்குத் தமிழகத்தின் மரபு சார் விளையாட்டுக்களை பதிவாக்கம் செய்யும் முயற்சியாகவும் இது விளங்கக் கூடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 21 November 2016

இலங்கையில் அழிக்கப்படும் இந்துக்களின் அடையாளங்கள்!


siragu-srilanga-kovil

இன அழிப்புப் போரை நடத்தி முடித்த இலங்கை அரசு, தற்போது இந்து மதத்தை இலங்கை மண்ணிலிருந்து வேறோடு அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தமிழர்களை தனிமைப்படுத்தி முடக்குவதில் குறியாக உள்ளது சிங்கள அரசு என ஆவேசத்துடன் பேச ஆரம்பிக்கிறார் சமீபத்தில் இலங்கைக்கு யாத்திரிகராக சுற்றுலா சென்று வந்துள்ள, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம. ரவிக்குமார். அங்கு நேரடியாகக் கண்ட காட்சிகளை நம்மிடம் விவரித்தார்.

இலங்கையில் போர் முடிந்தும் இன்னும் தமிழர் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ராணுவ முகாமைப் பார்க்க முடிகிறது. சம்பந்தப்பட்ட அந்தப் பகுதிக்குச் சென்றாலே கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத்தான் அனுமதிக்கிறார்கள்.


நான் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கொழும்பிலிருந்து வடக்கு மாகாணப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டு இருந்தேன். அப்போது ஆறு மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இந்து கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்தேன். அங்கு இந்து கடவுளுடன் புத்தருக்கு என்று தனிப்பீடம் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவதைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக அய்யனார், விநாயகர், மாரியம்மன், முனிஸ்வரன் கோவில்களில்தான் இது போன்ற புத்த மதத்தினரின் ஆக்கிரமிப்பைப் பார்க்க முடிந்தது. சிவ லங்காவை புத்த லங்காவாக மாற்றும் முயற்சியில் சத்தமில்லாமல் இறங்கி இருக்கிறது இலங்கை அரசு. தமிழர்களை வேரோடு கிள்ளிய சிங்கள ராணுவம் தற்போது இந்து கோவில்களைத் தேடித்தேடி அழித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 20 November 2016

சாதி மறுப்பு திருமணங்கள் குறித்து உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு – ஒரு பார்வை !!

siragu-castes1

இந்திய நாட்டில் 6000 க்கும் மேற்பட்ட சாதிகள் இருப்பதாக உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. மிக வலுவாக இங்கே சாதியக் கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கின்றது. அண்ணல் அம்பேத்கர் கூறியது போல சாதியம் இங்கே ஏணி மரப்படிகள் போல் இருக்கின்றன. தனக்கு மேல் தன்னை அடக்கி ஆதிக்கம் செலுத்தும் கூட்டத்தைப் பற்றி கவலையின்றி தான் ஆதிக்கம் செலுத்தவும் – அடக்கி ஆண்டிடவும் மக்கள் இருக்கின்றார்கள் என்ற மன நிலையே இன்றும் சாதியை நீர்த்துப் போகாது வைத்திருக்கின்றது.


அந்த அமைப்பை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்க்க வேண்டும் என்றால் காதல் மணம் புரிந்தால் மட்டுமே சாத்தியப்படும் என்ற நிலைப்பாடு சாதியை மறுப்பவர்களிடம் உண்டு. சாதி மறுத்து காதல் மணம் புரிபவர்களை கொடூரமாகக் கொன்று விடும் நிலை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அண்மையில் சங்கர் என்பவர் ஆதிக்க சாதி பெண்ணை திருமணம் செய்தார் என்பதற்காக கொடூரமாக நடுசாலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். பல இடங்களில் காவல் துறையினர் காதல் மணம் புரிந்தவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தர மறுக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. சமூகம் சாதிமறுப்பு திருமணங்களை எப்படி பார்க்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்திய உச்சநீதிமன்றத்தின் பார்வை என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.