இன அழிப்புப் போரை நடத்தி முடித்த இலங்கை
அரசு, தற்போது இந்து மதத்தை இலங்கை மண்ணிலிருந்து வேறோடு அழிப்பதற்கான
முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தமிழர்களை தனிமைப்படுத்தி
முடக்குவதில் குறியாக உள்ளது சிங்கள அரசு என ஆவேசத்துடன் பேச
ஆரம்பிக்கிறார் சமீபத்தில் இலங்கைக்கு யாத்திரிகராக சுற்றுலா சென்று
வந்துள்ள, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம. ரவிக்குமார்.
அங்கு நேரடியாகக் கண்ட காட்சிகளை நம்மிடம் விவரித்தார்.
இலங்கையில் போர் முடிந்தும் இன்னும்
தமிழர் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ராணுவ முகாமைப் பார்க்க முடிகிறது.
சம்பந்தப்பட்ட அந்தப் பகுதிக்குச் சென்றாலே கடும் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுத்தான் அனுமதிக்கிறார்கள்.
நான் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் 30ஆம்
தேதி வரை கொழும்பிலிருந்து வடக்கு மாகாணப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டு
இருந்தேன். அப்போது ஆறு மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இந்து
கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்தேன். அங்கு இந்து கடவுளுடன்
புத்தருக்கு என்று தனிப்பீடம் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவதைப்
பார்க்க முடிந்தது. குறிப்பாக அய்யனார், விநாயகர், மாரியம்மன், முனிஸ்வரன்
கோவில்களில்தான் இது போன்ற புத்த மதத்தினரின் ஆக்கிரமிப்பைப் பார்க்க
முடிந்தது. சிவ லங்காவை புத்த லங்காவாக மாற்றும் முயற்சியில் சத்தமில்லாமல்
இறங்கி இருக்கிறது இலங்கை அரசு. தமிழர்களை வேரோடு கிள்ளிய சிங்கள ராணுவம்
தற்போது இந்து கோவில்களைத் தேடித்தேடி அழித்துக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment