இந்திய
அரசியலில் சில மணித்துளிகளாவது சர்வாதிகாரியாகும் வாய்ப்பு எனக்குக்
கிடைத்தால் எவ்வித இழப்புகளும் இல்லாமல் நாட்டிலுள்ள எல்லா மதுக்கடைகளையும்
இழுத்து மூடுவேன் என முழங்கி, அதற்கான இயக்கமும் கண்டவர் காந்தி. ஒருவரை
அடிமையாக்கும் போதை பொருட்களில் மிகவும் கொடூரமானதும், மோசமானதும் மது
தான். மதுவினால் தினமும் செத்துக் கொண்டிருப்பது அன்றாடம் உழைக்கும் பாமர
மக்கள் என்பதால் அப்படியொரு முடிவுக்கு வந்தார். அவர் மட்டுமல்ல அம்பேத்கர்
போன்ற பல தலைவர்களும் அதனை தங்கள் செயல்பாட்டில் உறுதியாகக்
கொண்டிருந்தனர். ஆனால் இன்று வரையிலும் மதுவின் பொருட்டு ஏற்படும்
விபத்துக்களும், உயிர், உடமை இழப்புகளும், மது ஒழிப்புப் போராட்டங்களும்
ஓய்ந்தபாடில்லை. இதன் விளைவு ஒரு நாட்டின் பெரும்பகுதி மக்கள் தொகையின்
வாழ்வியல் நிதானத்தை செயலிழக்கச் செய்யும் குடிநோயாளிகளின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவது ஒரு சமூகத்தின் சனநாயகத்துக்கு
முற்றிலும் ஆபத்தானது. நாட்டின் எல்லா வளர்ச்சித் திட்டங்களையும் சிதைக்கக்
கூடியது. எனவே லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் உழைப்புச்
சுரண்டலுக்காவது இவர்களை குடிநோயிலிருந்து காப்பற்ற வேண்டும் என அறைகூவல்
விடுக்கின்றனர்.
கடவுள் நம்பிக்கைகளைக் கொண்டும், அறிவியல்
ஆராய்ச்சிகளைக் கொண்டும், பகுத்தறிவுக் கொள்கைகளைக் கொண்டும் மதுவை
தீர்க்கமாக ஒழிப்பதில் இங்கே ஒரு வித அரசியல் ஆற்றல் தன்னெழுச்சி பெற
முடியாமல் தவித்தாலும், அதனைக் கண்டு மனம் உடையாமல் தினம் தினம் மதுவைக்
குடித்து உடலாலும், மனத்தாலும் அவதிப்படும் குடிநோயாளிகளின்
பெருக்கத்தையாவது கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அடுத்த தலைமுறையினரின்
ஆரோக்கியத்தை வளர்த்தெடுக்கும் நம்பிக்கையாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment