நம்
அனைவருக்கும் இரத்தம் பார்ப்பதற்கு ஒரே மாதிரி சிவப்பு நிறமாக
இருந்தாலும், அதில் ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ என்ற நான்கு வகைகள் உண்டு
என்பதும், ஒவ்வொருவரின் இரத்தமும் இதில் ஏதோ ஒரு வகையானது என்பதும் பள்ளி
நாட்களிலேயே நாம் அறிந்ததுதான். இந்த இரத்த வகைகளுக்கும் மூளையின் செயல்
திறனுக்கும் தொடர்பு உள்ளது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. நமது
மூளையின் வளர்ச்சியிலும், வயது ஏற ஏற முதிர்ச்சியடையும் நிலையிலும்,
மூளையின் வளர்சிதை மாற்றங்களிலும் இரத்தம் வகிக்கும் பங்கு தற்பொழுது
அறியப்பட்டுள்ளது. குறிப்பாக ‘O’ வகைப் பிரிவு இரத்தம் உள்ள மக்களுக்கு,
மற்ற இரத்த வகை மக்களைவிட மூளையில் சாம்பல் நிறப் பொருள் (grey matter)
அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதிக அளவு சாம்பல் நிறப்பொருள்
இருப்பது அறிவாற்றலுக்கும், நினைவாற்றலுக்கும் (cognitive/thinking and
memory) உதவும்.
வயதாகும்
பொழுது மூளை பலமாறுதல்களுக்கு உள்ளாகிறது. மூளையின் அளவு சுருங்கத்
தொடங்குதல், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவுவிலும் மாறுதல் எனப்
பலவகை மாறுதல்களுக்கு மூளை உள்ளாகிறது. அது போலவே வயதாகி மூளை முதிர்ச்சி
அடையும் பொழுது மூளையின் சாம்பல் நிறப்பொருளின் அளவு குறைந்து மூளையின்
அமைப்பில் மாறுதல் நிகழும். சாம்பல் நிறப் பொருள் நரம்புச் செல்களால் ஆனது.
குறிப்பாக மூளையின் நரம்பு செல்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள்
ஏற்படுகின்றன, இவற்றின் அளவிலும் எண்ணிக்கையிலும் ஏற்படும் வயதிற்கேற்ற
மாற்றங்கள் அறிவுத்திறனையும் நினைவுத்திறனையும் பாதிக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment