புலிகளின்
பாதுகாப்புக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், சிறுத்தைகளுக்கு
வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில்
எழுந்துள்ளது!
மனிதன் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையேயான
மோதல்களில் யானைக்கு அடுத்தபடியாக அதிகம் இருப்பது சிறுத்தைகள் தான்.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) சிறுத்தைகளை அச்சுறு நிலையை
அண்மித்த இனமாக (Near Threatened) வகைப்படுத்தியுள்ளதால், இந்தியாவில்
பாதுகாக்கப்பட்ட விலங்காக சிறுத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை
வேட்டையாடுவதோ அதன் உடல் உறுப்புகளை வாங்கி விற்பதோ தண்டனைக்குரிய
குற்றம். ஆனால், இந்தியாவில் வாரத்திற்கு நான்கு சிறுத்தைகள்
வேட்டையாடப்படுவதாக வன விலங்குகள் தொடர்புடைய வர்த்தகத்தை கண்காணிக்கும்
TRAFFIC என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment