சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வருவதில் தாங்கள் பெற்ற அனுபவம் என்ன?
கடலோரத்தில்
தாதுமணல் என்பது இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை உள்ளதாகத்தான் இருக்கும்.
அதை பயன்படுத்துவது, அள்ளுவதற்கு பல்வேறு வழிமுறைகளை அரசு
வைத்திருக்கிறது. இதனால் பாதிப்புகள் வருவதெல்லாம் பார்த்துத்தான் தாதுமணல்
என்ற நூலை எழுதினேன். அப்பொழுது ஒரு வாய்ப்பாக காக்கை உட்கார பனம்பழம்
விழுந்தது போல, தமிழ்நாட்டில் சகாயம் அவர்கள் கனிமவள முறைகேடுகளை ஆய்வு
செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
சகாயம் அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலே பணியாற்றிய பொழுது எனக்குத்
தெரியும். அவர் மதுரையிலே பணியாற்றிய பொழுது கிரானைட் பிரச்சனைகளில் சில
ஊர்களில் நேரடியாக தலையிட்டு அது போன்ற பிரச்சனைகளில் அனுபவமும் பெற்றவன்
நான். கனிமவள முறைகேடுகளைப் பற்றி உணர்ந்து அதைப்பற்றியான நூலையும்
எழுதியிருக்கிறேன். ஆற்றுமணல் கொள்ளையை எதிர்த்து தொடர்ந்து நாமக்கல்
மாவட்டத்தில் வேலை செய்திருக்கிறோம். இப்படி பல்வேறு விதமான கனிம கொள்ளைகளை
எதிர்த்து நாங்கள் வேலை செய்திருக்கிறோம்.
இதுமட்டுமல்ல கொல்லி மலையிலே மேட்டூரில்
இருக்கக்கூடிய மால்கோ நிறுவனம் அனுமதியில்லாமல் பத்தாண்டுகளுக்கு மேல்
கொல்லி மலை செம்மேடு பகுதியிலிருந்து தினசரி 400 லோடு பாக்ஸைட் தாதுவை
வெட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது பத்தாண்டுகாலம் அனுமதியே இல்லாமல் ஒரு
நிறுவனம். அதை குளத்தூர் மணி, பியூஸ் போன்ற தோழர்கள் உயர்நீதிமன்றத்திலே
அள்ளக்கூடாது என்று உத்தரவு பெற்றும் கூட அதை நடைமுறைப்படுத்துவதற்காக
அதிகாரிகள் இல்லை. சகாயம் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியத்தலைவராக
இருந்த பொழுது, அவரிடம் எடுத்துச் சென்று சொன்னதற்கு அவர் இதுபோன்ற
நிறுவனத்தில் கை வைப்பதற்கு அவருக்கான அதிகாரத்திலிருந்து பல வேலைகளை
மேற்கொண்டார். நேரடியாகச் செய்தால் நெருக்கடி வரும் என்று சொல்லி, முதலில்
ஓவர் லோடு என்று அந்த லாரிகளில் பலவற்றை முடக்கினார். பிறகு அதிக வேகம்
என்று பிடித்தார். பின்பு ஆண்டுக்கு ஒருமுறை மறுபரிசீலனைக்காக வரும் பொழுது
அதற்கான அனுமதியை ரத்து செய்து அந்த வேலையை நிறுத்த வைத்தார். அதனால்
எண்ணற்ற நெருக்கடிகளை சந்தித்தார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment