பஞ்சதந்திரக் கதைகள் (தொடர்ச்சி)
இங்கும் அப்படித்தான் நடக்கிறது.
கெட்டவர்கள் கையில் அகப்பட்டு இறப்பதைக் காட்டிலும் சண்டை செய்து இறப்பதே
மேலானது. போர் முனையில் இறப்பவன் சொர்க்கம் அடைகிறான். பகைவர்களை வென்றால்,
அவனுக்கு ராஜ்யம் கிடைக்கிறது. ஆகவே வீரர்களுக்குச் சாவும் பிழைப்பும்
சமம்தான் என்று சஞ்சீவகன் கூறியது.
தமனகன்:பகைவர்களுடைய
பலத்தை அறியாமல் எவன் பகை கொள்கிறானோ, அவன் ஒரு சிட்டுக்குருவியினால்
பெருங்கடல் அவமானம் அடைந்ததைப் போல அவமானம் அடைவான்.
சஞ்சீவகன்: அது எப்படி?
தமனகன், கதை சொல்லலாயிற்று.
ஒரு கடற்கரையில் உள்ள மரத்தில் இரண்டு சிட்டுக்குருவிகள் கூடுகட்டிக் கொண்டிருந்தன.
பெட்டை (ஆண்பறவையைப் பார்த்து): நான் எங்கே முட்டை இடுவேன்? ஆண்பறவை: இது நல்ல இடம்தான். இங்கேயே இடு.
பெட்டை: இந்தக் கடலினால் ஒருவேளை அபாயம் நேரிடலாம்
ஆண்குருவி: இந்தக் கடல் என்னுடன் பகைத்துக் கொள்ள முடியாது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment